கண்டதில்லை உன்னை நேரில் இதுவரை இறைவா…
உனது வடிவில் வந்தவரை அணைத்தது மறைவா?
நல்லவரைக் கொண்டுசெல்ல இத்துணை விரைவா?
புவியைத் துயரில் தள்ளினாயே இப்போது நிறைவா?
இளைஞராக வாழ்ந்தவர்தாம் அவரோ நேற்று – இன்று
அவர்தம் ஆன்மா கலந்து வீசுது வாடைக் காற்று;
அப்துல் கலாமின் உயிருக்கில்லை இன்னொரு மாற்று
அவரை எமக்குத் திருப்பிக்கொடுத்து நல்வினையாற்று
ஏவுகணைப் பொறியியலில் அவதாரம் எடுத்தார் – பின்பு
கனவு எனும் வார்த்தைக்கொரு அர்த்தம் கொடுத்தார்;
மாணவரின் எண்ணங்களை மாற்றியமைத்தார் – கண்களில்
அறிவியலையும் ஆசிரியத்தையும் சேர்த்தே இமைத்தார்
கூற்றுவனின் ஆற்றலின்முன் நாம் வெறும் ஏழை – அவன்
பின்னிருந்து தாக்கியழிக்கும் மற்றொரு கோழை;
உடலை பிரிந்து சென்றபின்பும் வாழ்பவன் மேதை – அந்த
உயிரைப் பிரித்து எடுத்துச்சென்ற இறைவனோ பேதை
அன்பு நிறைந்த கலாமின் உள்ளத்தில் இருந்தது மாட்சி – நெஞ்சை
உலுக்கிக் கரைத்து, உருக்கியது அக்கடைசி காட்சி;
அவர் பயணம் செய்து விட்டுச்சென்ற பாதையின் நீட்சி – அங்கு
தொடங்குகிறது இந்தியாவின் புதியதொரு மீட்சி!
***********************
அழ மாட்டோம் – கண்ணீரில்
அவரேற்றிய அறிவுச் சுடர்
அணையக் கூடாது என்பதற்காக
உறங்காமல் இருக்கச் செய்வதே
கனவென்றார்;
மரணச்செய்தி கேட்டபின்
வரவில்லை உறக்கம்
இதுவும் கனவுதானோ?
The last few lines. Epic.
ReplyDeleteThank you!!
DeleteVery touching.
ReplyDeleteMy little note for the man who inspired me in every way possible...
Deleteநல்ல கவிதை! சிறந்த அஞ்சலி!
ReplyDeleteஉயிருடன் வாழ்வதல்ல வாழ்க்கை - மரித்தபின்னும்
ReplyDeleteஉயிர்ப்புடன் மக்கள் மனதில் நிலைப்பதே வாழ்க்கை!
நினைத்தபடி இறப்பு யாருக்கும் வாய்ப்பதில்லை - இறைவன்
தனக்கு பிடித்தவர்க்கு அப்படி வ்ழங்க தவறுவதில்லை!
மனிதர் போற்றும் குண நலன்கள் அமைந்து விட்டாலோ
இறைவன் போற்றும் ஆன்மாகவ உயர்ந்து விடலாம்!
உண்மைதான் அம்மா... பிரிவில்தானே தெரிகிறது மேதைகளின் அருமை!!!
Deleteவார்த்தைகள் ஒவ்வொன்றும் இவருக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டது போலத் தோன்றுகின்றது ... "கனவு எனும் வார்த்தைக்கொரு அர்த்தம் கொடுத்தார்;" ->அருமை .."மரணச்செய்தி கேட்டபின்
ReplyDeleteவரவில்லை உறக்கம்
இதுவும் கனவுதானோ?"->touching da..
Vaasithadharku nandri nanbaa... Anaivar manadhilum irukkum ennangalin thooguppe ivvaakkiyangal. Kavidhayaa endru theriyavillai :)
Deleteyes...v lost great humanbeing.....arumaiyana kavithai giri....really touching.....
ReplyDeleteUnmai dhaan.. Nalla oru aanmaa endrum vaazhum... Nandri!!!
Delete