Monday, December 25, 2017

கடலோடி

காகமும் கரையாக் காலைப் பொழுதில்
அரைத்தூக்கமும், அரை நிர்வாணமுமாய்
கண் திறக்கிறான் கடமையாளன்
கதிரவன்

நேற்றே
கட்டுமரத்தின் கட்டவிழ்த்துக்
கடலுக்குச் சென்ற தந்தைக்குக்
கையசைத்துக் கண்கலங்கி
விடைகொடுத்த நினைவுடன் துயிலெழுகிறான்
தாயில்லாப் பிள்ளை

குளியலறைக் கதவருகே ஊர்கிறது
விஷப் பூரான்
இவனைப் பார்த்த பயமோ?
தண்ணீர் கண்டு ஆனந்தமோ?
ஊர்ந்து
தண்ணீர் வடியும் குழியருகே
தஞ்சமடைகிறது

பூரானுக்கு இவனைக் கண்டால் பயம்
இவனுக்கோ அதைப் பார்த்த நொடியில் இனம்புரியாக் கோபம்
குவளைத் தண்ணீரை வாரி இறைக்க
சற்றே திணறி
குழியில் விழாது
பிழைத்தெழ முயல
மேலும் மேலும் தண்ணீர்
தன்மேல் விழ
சுவாசக் குழாய் அடைத்து
உடல் இறுகி
இனி பிழைக்க முடியாது என்றெண்ணி
உயிர் விடுகிறது பூரான்

அங்கே
எல்லையற்ற கடலுக்குத் தன்னை
ஒப்படைத்த கடலோடியைக்
கடல்தாண்டி எல்லை மீறியதாகச்
சுற்றி வளைத்துப் பிடிக்கிறது
மிருகக் கூட்டம்

கடலோடித் தந்தைக்கு உயிர்ப்பயம்
மிருகக் கூட்டத்திற்கு இரை கிடைத்த உன்மத்தம்
துப்பாக்கி தனக்கு இடப்பட்ட கட்டளையைப்
பிழையின்றி பிசகின்றி
சரிவரச் செய்கிறது

முதல் குண்டு கையைப் பிளக்கிறது
பீறிட்ட ரத்தமும், அழுகையும், ஓலமுமாய்
மரணம் நெருங்குகிறது
தலை சுற்றி மயங்கும் நொடி
தான் பெற்ற பச்சிளம் பாலகனின்
குழிக் கன்னமும், குழவிப் பேச்சும்
ரீங்கரிக்கிறது

இரண்டாம் குண்டு
பிள்ளையின் நினைவு தந்த மூளையின்
நரம்பு மண்டலத்தில் தஞ்சமடைகிறது

உடலின் உறுதி குறைய
நொடிப்பொழுது கரைய
நிலைகுலைந்து நிதானம் சிதற
உணவிட்ட கடலன்னைக்குத்
தன்னையே உணவாக்குகிறான்

பரந்த நீலக்கடல்
சிவந்த ரத்தத்தால் சற்றே மாசானது
நவதுவாரத்திலும் தண்ணீர் அடைக்க
மேலெழ முயன்று
தோற்று
கடலடி சேர்கிறான் கடலோடி

சற்றே சலசலத்துப் பின்
சாந்தமாகிறது

கடலெனும் முடிவிலி

Saturday, December 23, 2017

VELAIKAARAN - GOOD INTENT LET DOWN BY A WAVERING SCREENPLAY

When I first saw the trailer of Velaikaaran, there was something really original about it; the colour palettes of the kuppam (slum) were authentic (really; visit Kannagi Nagar - the forbidden kingdom of the OMR - once, and you will know what I am talking about), the ringing of the huge bell looked like director Mohan Raja announcing, “Am back, audience”, the indirect conversations with the audience - we have been seeing this in a lot of trailers; in Lingaa, Rajini says, “I’ll meet you very very soon”, in Thuppaakki, the “I am waiting (for the movie to release)” line; in Sema, G V Prakash’s hand gesture signalling his arrival of sorts (okay, I agree bringing GVP here is an insult to the big names, but poor child, he is trying) - towards the end of the trailer, which has become customary these days, brought in a fresh whiff of air.

The towards-the-end-of-trailer visual showed Sivakarthikeyan asking Fahadh Faasil - and Mohan Raja asking the audience, probably - “Idhu work out aagumaa, Sir?” (“Will this work out well, Sir?”), for which Fahadh Faasil replies, “100%”. The audience will most likely reply, “Umm, 70%, or maybe, 80”, after watching the movie. Which does not mean Velaikaaran is not a good movie. The problem is it tries be an Aramm, while refusing to let go of the ‘Samuthirakani phenomenon’, as we know it today.

While Aramm took a very specific issue and tried to expand it to a larger perspective (from a child trapped in a bore well to the differences between the developed and underprivileged India), Velaikaaran takes in a generic issue, and tries to connect it to a particular sect of people (the problem of capitalism and how it affects the most underprivileged people of a small community). The primary difference that results is the number of characters in Velaikaaran. Among the many secondary differences, the number of long, 5-minute rants occupies the pole position.

If the title itself - taken from an earlier Rajinikanth movie going by the same title - suggests what is to be expected, there are bits and pieces that reemphasise the idea. Like the names of characters; the protagonist is Arivu (knowledge), while the antagonist is Adhiban aka Aadhi (Adhibar in Tamil roughly translates to ‘boss’). Like the portion where Arivu’s father - a welder - inaugurates the community radio, which is the brainchild of Arivu, and we see a rod in place of the usual ribbon; it is being cut with the equipment of a welder.

The first half of the movie revolves around the radio, while exploring the suppression of the slum people by their own bosses within the slum (who, in turn, become henchmen for the capitalist, corporate bosses). The narrative is crisp and neat, and we gradually see what the problem within that community is, and how it unfolds. AND, the way Karuthavanlaam Galeejaam - by far the most thought-provoking lyric of the recent times - is shot breaks every single preconceived notion about how the song could have been an introductory number for the protagonist. The cinematography is a treat, with the dance moves of Sivakarthikeyan complementing the actual scenario of the kuppam. “Odhavi nu ketaaka apartment aalu, nice ah appeet aavaaru” shows a high-rise multi-storeyed building in the backdrop, and we kinda get it; the super-luxurious people who live just around the slum would never pay a visit to this poverty-stricken area. Ever. Anirudh’s voice is unusually buoyant, transcending the already possessing lyrics and the camera work to a greater dimension.

As the movie progresses, we see Arivu getting to know about the real scenario of his family - they have a huge debt; his sister needs to continue going to school, for which the school fee needs to be paid - but how he gets to know is also innovative, although the mom-cries-dad-consoles phenomenon is intact. As I stated earlier, the radio IS the centre of the movie throughout the first half. Arivu joins as a Sales Representative (or, Marketing person?) in a large, consumer brand named… Saffron. I could sense where Mohan Raja was leading us, and my hunch became true towards the end of the movie, when Red flags are seen flying everywhere. Metaphor, anyone?

Speaking of metaphors, there are many more of them. Arivu seeks support from his community, asking them to switch on lights and bulbs at 12 in the night, if they agree to his ideas of empowering them. He sure receives support, but we are talking about something more profound here. Knowledge (Arivu) dispels the darkness of ignorance. Hence, the lights.

Mohan Raja somehow fails to realise that these metaphors work a hundred and thousand times better than those endless, preachy rants. And, we also get to know that editor Vivek Harshan left the project midway, and Ruben had to replace him. The result is an imbalance between an interesting movie and a propaganda message for spreading an ideology. The second half - along with the pre-interval block - is especially filled with speeches, which an eighth grader would mug to win a first place in the Independence Day oratorical competition organised in his/her school. While these long monologues are problems that take a toll on the runtime themselves, what is more disturbing is Sivakarthikeyan’s sheer difficulty in delivering those we-need-to-stand-up-and-question-the-bosses paragraphs. The director seems to have kept in mind Mithran of Thani Oruvan while penning the lines, but Arivu lacks the pride of Mithran and he becomes that student who gets tortured by the teacher to recite long passages in the annual day function of a school.


Dialogues like “Soozhnilaiku yetha maadhiri naama maarunadhellaam podhum; inimey soozhnilaiya namaku yetha maadhiri maathuvom” (“Enough of being reactive to circumstances; let’s become proactive”), and “Thevai illaadhadhuku dhaan kaaranam sollanum; thevai irukuradhuku kaaranam solla thevai illa” (“That which is unwanted requires justification; that which is necessary doesn’t”) are both thought-provoking and whistle-worthy, but hey, too much of anything is good for nothing. As it is, the intent of the movie is good as can be seen in the obvious one-line (Rise of the suppressed against unjust capitalism), but the screenplay lacks orientation. You cannot narrate a novel in the time allotted for a short story, can you?

Thursday, December 14, 2017

As It Unfolded - Dr. P Sainath's Speech on 13 December

I had gotten to know Dr. P Sainath for the first time in one of the editions of The Hindu Lit for Life, and later through his book, “Everybody Loves A Good Drought”. If the former was a preface as to who Sainath is and what he had been (and has been) doing through PARI (People’s Archive of Rural India), the latter was an eye-opener as to how government policies do not actually benefit the larger sects of rural India.

Yesterday (13 December), this man, whose talks and discussions I always love to listen to, came to my alma mater for the launch of the mobile application of Kurukshetra - the “techno-management” festival.

After every member in the dais had performed the ritual of reading out achievements of the Chief Guest with no enthusiasm, Sainath took over.

With a brief memory down the lane back to his school and college days, which revolved around Chennai (MCC School and Loyola College), and most importantly his witnessing Techofes - the “oldest, college-based cultural extravaganza” - 40 years back, he started off on how the thinking process of engineers and technologists should be.

Technology Stems From Social Context, and Why Swachh Bharat Is A Fallacy:

“All technologies unfold in a social context; if that context goes missing, that particular technology is going to be harmful and useless”, said he, following it up with ‘Thinking Tech, Thinking People, Thinking Planet’ - the three aspects of thinking that needs to be reinstated in engineers.

What followed was a bang. “One project that is doomed to fail in this country because it did not have the three aspects of thinking in sync is SWACHH BHARAT”, he uttered, and it was evident he was not speaking those words just because he is for or against a party or an ideology.

Dr. Sainath substantiated his claim with statistical evidence, stating that the amount allocated for the construction of a toilet in the Swachh Bharat scheme is double that proposed by a report from the UN, dealing with sanitation (he mentioned the name of the actual report, I could not take notes fast, and did not record the scintillating speech; my bad).

I smirked as the other dignitaries on the dais - important members of my alma mater, who either have no say in what the government does, despite being in such respectable positions, OR are not willing to move a stone against the government that is implementing Saffron workshops in college campus (State and Centre; by the way, do they make any difference now in Tamil Nadu?) - watched in dismay witnessing word after word that rained from a man who had seen and interacted with the people who formed the bottommost points of the economic graph of India.

The slaps on the face of this incompetent fascist government continued to rain, as Dr. Sainath took the problem of manual scavenging into context. “The nastiest practice which is non-existent in any other country, but prevalent only in our own land, is the cruelty that fellow human beings are forced to dispose and handle human excreta in human hands.” Data supplemented every statement of Sainath’s, and this was no exception, as he told half a million people are involved in this ruthless practice, half of whom are girls; not women, but girls.

“The focus must not be on the improvement of toilet cleaners, but rather on the complete annihilation of human toilet cleaning itself” - the words were not so loud, but the message indeed was.

Unprecedented Levels of Pollution - What Is Delhi Suffering From:

“Delhi is now officially the most polluted capital city in the world”, beamed Dr. Sainath, and continued, “We always dream of defeating China, right? Here we are, standing proud as the frontrunners in pollution.” Dark humor could be witnessed, as one of India’s first extensive photojournalists kept talking about actualities, the scenarios faced day-in and day-out by the 70% of the population of the sub-continent a.k.a rural India.

Tracing the problem of pollution, he opined, “It is a myth that paddy stubbles burnt in Punjab and Haryana contribute to the humongous levels of pollution in Delhi, because this paddy burning happens only during a fortnight during November/December”. Then came the inevitable question, eventually followed by the answer. “Why do farmers in Punjab and Haryana have to burn paddy stubbles? It is due to the commercialization of agricultural practices; they are left with a mere gap of only 10 days between the harvest of the first crop, and the sowing of the next. This brings the beast called ‘Harvester Combine’ into the picture; this gigantic machine can perform the tasks of a group of farmers working on a field single-handedly - the only difference is that this machine does ruthlessly what the farmers do mercifully. That is, the farmers cut the harvest carefully so as to leave certain parts of it as fodder for the next crop; whereas, Harvester Combine would trawl the entire tract of land, thereby leaving no natural fodder for the subsequent crop. The short span of time to sow means that the land has to be prepared soon, which makes farmers burn stubbles so as to prepare the land on time.”

As I was taking notes, I threw a look around the auditorium, only to observe that nobody was speaking. The meaning of ‘pin-drop silence’ could inexplicably be witnessed, as Dr. Sainath took a breath before continuing what had been an illuminating talk. “However”, he resumed - a five-second break was all that he had needed - “the main reason for pollution is the ridiculous mismatch in the ratio of public and private transport vehicles.” He pointed out that while private automobile production keeps increasing, the modes of public transport have significantly come down in terms of the number of trains and buses. To talk numbers, the metro rail transport of Mumbai, one of the bustling cities of the country, transports 6.3 million passengers to and fro every day; the number is 4 to 5 times higher than the specified capacity it can carry.

Democratisation of Technology - Who Decides, Who Controls:

“The problem of demonetization you people experienced, or watched in televisions and read in newspapers was not all; the problems of rural India post-demonetization were 30 times that of what we urban Indians faced”, was how Dr. Sainath started off when he mentioned about the democratization of technology. The Who’s and How’s that should have been taken into account were not considered, resulting in such a mess.

The spontaneity with which he could just point out statistical metrics on the go for each and every argument he made not only intensified the talk, but also made the audience picture the scenario completely. Of demonetization, the speaker gave away the following insights:

Less than one-fifth of ATMs in the country are located in the rural areas of the country which form two-thirds of India.

Out of those ATMs which are located in the rural areas, only 50% to 60% is operative at any given point in time.

Those ATMs that operate only do so for 2% of the total time in a day (do the math; 2% of 24 hours)

The questions that were indirectly thrown open to the listeners for deep contemplation were these:

Who decides what technology or what reform should be imposed?
How does the implementation of a policy come about? How should it actually come about?

The Less-Discussed Stories:

Majoritarianism:
With the pressing problems of the day - starting from environment and pollution, to economy and agriculture - being covered, Dr Sainath moved on to the next issue; perception of news. “There are 780 living languages in India, out of which six languages are spoken by 50 million people, 3 languages are spoken by 80 million people. What happens to the remaining 770?”, he asked, bringing the problem of majoritarianism to the forefront, supplementing it with a more relatable piece of information. “In the last years - between 2013 and 2017 - any news, whatsoever, about rural India occupied only 0.67% of the front page in all the major national newspapers combined. This is in contrast to the 66% of the front page news always being about New Delhi.” He also added that these nuances can be understood and questioned, only if we keep ourselves aware.

Land and sea:
The speaker also touched upon the day-to-day issues faced by the fishermen and the farmers. “We know fishermen are dying in groups every year when they venture out into the deep sea, but do we know why? They use Catamarans to go to deep seas, which is risking their own lives, and they know it. Catamarans are suited only for shallow fishing. They are not strong and stable enough to witness high tides, and hence disaster keeps happening.”

At this point in time, I was curious, because I always have had a lot of doubts as to what exactly happens during fishing, more so than the questions on their impoverished status, and the uncertainty of their community’s survival. Just when I thought of raising my hand to ask a question - nobody had asked any questions so far, and I was uncertain if I could, because (a) I was an unwelcome guest, and (b) The subsequent moments of the talk had so far answered the questions that kept arising - he started describing the problem with trawlers.

Trawlers are basically the aquatic version of ‘Harvester Combine’; they would just loot the fish near shore by digging deep into the water bodies, thereby damaging the mineral life in the Kingdom of Blue, eventually spoiling the chain of balance in the ecosystem.

“We all think that fishermen go to deep seas, because that’s where they get a lot of catch; this is utterly false. Nearshore is the place where you see a lot of bounties, but trawlers just loot them away totally. Smaller fishermen are forced to go to high tides for their survival, because they do not have a choice.”

According to Dr. Sainath, this oligopoly of sorts gives the major chunk of revenue to the trawler owners; again, an example to drive home this situation was highlighted by him with the Pudhukottai drought, which has become common and is becoming a very normal periodical occurrence in the course of years.

Here is a glimpse of what happened:

There is a village called Gandharva Kottai in Pudhukottai district. There was a chronic drought at a particular point in time, and it naturally led to water scarcity. The obvious immediate solution was to build wells at certain locations, so as to tap more water.

Now, there were two communities in the region - Reddiyars and Muthurajas. While the lands of Reddiyars were not as good in terms of the opportunities of getting water as those of the Muthurajas’, the Reddiyars had the wealth to dig deep mechanical wells; they went deep down fetching water. On the other hand, the Muthurajas could only muster up enough to build manmade wells (kenaru). Though the Muthurajas had good land which was capable of getting relatively larger quantities of water, the problem here was that both these lands had to fetch water from a common aquifer, which meant mechanical wells prevailed. The defeat of the Muthurajas meant they had to rest all their lands into the ownership of Reddiyars.

He told this and paused for a while; the auditorium was dumbstruck. There was absolutely no noise, and every pair of eye kept focussing on the podium and the speaker, with no slightest unwavering of concentration. This man had come, spoken for half an hour, changed the perspectives of the audience for the better, created a paradigm shift in the mindset, and was standing there, about to conclude.

“What I would suggest or rather request you, engineers, to do is, think of problems from a social context; see what best you can do, and do your best. Thank you!”


The applause from the 50-odd people who had filled up just over half the auditorium was enough evidence that it had been a meaningful evening.

Monday, December 4, 2017

ஆழம்


மடிக்கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு அம்மின்னஞ்சலைப் பார்த்தவுடன் கண்கள் குத்திட்டு நின்றன. அவனையறியாமல் முன்நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின; திடிரென பின்மண்டையைக் கொதிக்கும் நெருப்பில் கவிழ்த்ததைப் போன்ற சூடு பரவியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன; விழிமூடித் திறந்தபின் கண்களை நிரப்பிய கண்ணீர் விழிகளைத் திரையாய் மறைத்தன. இனம்புரியாத கோபமும், பயமும், விரக்தியுமாகச் சேர்ந்து முதுகெலும்பை உறைய வைத்துக்கொண்டிருந்தன.

அமர்ந்திருந்த அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் ஓரிடத்தில் நில்லாமல் அலைவது போல் தோன்றியது. கண்ணை அழுத்தி மூடித் திறந்த பின், அறையே திடீரென வெறிச்சோடியது போலிருந்தது. நடப்பவை அனைத்தும் கனவா, நனவா என்று புரியவில்லை. வியர்வைத் துளிகள் கன்னத்தின் வழியே வழிந்தோடிக் கழுத்தையும், சட்டையையும் நனைத்திருந்தன. உச்சந்தலையில் இன்னொரு ஆள் ஏறி நிற்பதைப் போன்ற பாரம் உடலையே அழுத்திக் கூனிக் குறுகச் செய்துகொண்டிருந்தது.

சட்டெனப் பிரமை பிடித்தவனாகக் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து வீசினான்; ‘சிலிங்’, ‘டமார்’, ‘பொளேர்என்ற இசையுடன் அவை அங்குமிங்குமாய்ச் சிதறி விழுந்தன. ஆசையாய் அப்பா வாங்கிக்கொடுத்திருந்த அலங்காரக் கடிகாரத்தை உடைத்துவிட்டிருந்ததை உணர அவனுக்கு சில நொடிகள் ஆயின. ஓவெனக் கதறியழத் தொடங்கினான். காலம் பின்னோக்கிச் சுழலத் தொடங்கியது.

—————

மச்சான், ஆப்டிட்யூட் எல்லா கான்செப்ட்டும் பாத்துட்டல்ல? இன்னிக்கு வர்ற கம்பெனில டெக்னிக்கல் கொஸின விட ஆப்டி தான் அதிகமாக் கேப்பாங்களாம்டா. போன வருஷம் ப்ளேஸ் ஆன சீனியர் அண்ணா சொன்னாருஎன்று நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உறுதிசெய்திருந்தமையால், அடுத்து கல்லூரிக்கு வந்த அனைத்து நிறுவனங்களின் பெருமக்களையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தான். முடிந்தவரை கையில், காலில் விழுந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களை ஏதேனும் ஒரு வேலையில் தள்ளிவிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துகொண்டிருந்தான்.

இவனுக்கோ பதற்றத்தில் அரைமணிக்குள்ளாக நான்கு முறை உபாதைகள் சீண்டியிருந்தன. தனக்குள்ளாகவே எண்ணிப்பார்த்துக்கொண்டான். “எட்டு. ஒரு பன்னெண்டு. இது இருவத்தி நாலாவது கம்பெனிஎன்று சொல்லிக்கொண்டான். நேர்காணலுக்கும், எழுத்துத் தேர்வுக்கும் வருவது பல் விளக்குவது, குளிப்பது ஆகியவற்றுடன் சேர்ந்த வாடிக்கையாகவே மாறியிருந்தன கடந்த ஐந்தாறு மாதங்களாய். பெரும்பாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கொருமுறை சட்டையைத் துவைத்து இஸ்திரி போட வேண்டியிருந்தது. ஏற்கனவே வேலையை உறுதிசெய்தவர்கள் அனைவரும் விடுதியில் நள்ளிரவு வரைச் சீட்டுக்கட்டும், திரைப்படங்களுமாய் இறுதியாண்டுக் களிப்பில் மூழ்கிக்கொண்டிருக்க, இவன் கணக்குக் கேள்விகளிலும், இயந்திரவியல் பாடங்களின் நுணுக்கங்களிலும் ஆழ்ந்திருப்பான்.

ஒன் டூ செவன்”. நிசப்தம்.

ஒன். டூ. செவன்”. பதில்குரல் இல்லை.

டேய் மச்சான், உன்னையத்தாண்டா கூப்பிடுறாங்க. ஆல் பெஸ்ட், மாப்ள. தைரியமா எழுதிட்டு வா” - நண்பன் தோளைக் குலுக்கிய பின்னரே சுயநினைவுக்கு வந்தவன் போல உள்ளே சென்றான். “ச்ச, நாமளும்தான் ஒவ்வொரு கம்பெனிக்கும் அவனுக்கு இதே மாதிரிச் சொல்லி அனுப்புறோம். ஒருவேளை அதுனாலதான் செலக்ட் ஆக மாட்டேன்றானோ?” என்று நண்பனின் மனம் இந்நேரத்தில் குழம்பத் தொடங்கியிருந்தது.

—————

டேய், என்ன? ஒரு மணிநேரம் வரைக்கும் ஒட்ட ஒட்ட எழுதிட்டு வர்ற? எப்புடிடா பண்ண?” - சிரித்த முகத்துடன் தேர்வறைக்கு வெளியே காத்திருந்த நண்பன் கேட்டான். “**தா, ஏண்டா நீ வேற! மயிரு மாதிரி இருந்துச்சு பேப்பர். ஒண்ணுமே புரியல. பாக்கலாம். ரிசல்ட் வந்தா வாட்ஸப் குரூப்ல போடுடா யாரு யாரு ஷார்ட்லிஸ்டட்னுஎன்று விரக்தியாகச் சென்றான் அவன்.

விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் குழப்பமாகவே இருந்தது. “உண்மையிலேயே நான் ஒழுங்காப் படிக்கிறேனா?”, “ஒருவேளை எந்தக் கம்பெனிக்கும் நான் லாயக்கே இல்லையோ?”, “ப்ளேஸ் ஆனவங்க எல்லாத்துகிட்டயும் பேசிட்டுதான் இருக்கேன்; ஒருவேளை அவனுங்க எதையோ மறைக்குறாங்களோ?” என்று யோசிக்க யோசிக்கத் தொண்டையை அடைத்தது. கேவிக்கேவி அழ வேண்டுமெனத் தோன்றியது. வழியெங்கும் குனிந்த தலை நிமிராமல் விரைந்து சென்று தன் விடுதியறைக் கதவை மூடினான்.

—————

டேய், கதவத் தொறடா. மச்சான் டேய்” - ஏழு நிமிடங்கள் கடந்திருந்தன. அக்கம்பக்கத்து அறைவாசிகள் அனைவரும் அவனது அறை முன்பாகக் குழுமியிருந்தனர். “என்னவாம்டா?” “ப்ளேஸ் ஆகலையாம் மாப்ள, அதான் கதவைச் சாத்திக்கிட்டானாம்என்று முணுமுணுப்புகள் கூட்டத்தினிடையே பரவியிருந்தன. “மச்சான், இதோ பார்றா காமெடிய. அதெல்லாம் ஒரு மயிரும் இருக்காது. எதாச்சும் பொண்ணு கிட்ட வாங்கிக்கட்டினு வந்திருப்பான்என்று எவனோ ஒருவன் வம்பிழுக்க, வாய்வார்த்தை கைகலப்பாக மாறியது. அபாண்டம் பேசியவன் குடித்திருக்க வேண்டும்; தள்ளாடினான்.

“**மாள டேய், உனக்காக இங்க சண்ட நடக்குது. அவ்ளோ ** கொழுப்பாயிடுச்சா உனக்கு?” - விரக்தியில் நண்பன் கத்தினான். பத்தாவது வினாடியில் கதவு திறந்தது. அழுது வீங்கிய முகம், அதன் விளைவாய் வந்த சளி என பார்த்தவுடன் பரிதாபப்படும் நிலையில் இருந்தான். “டேய், என்ன மச்சான் இப்புடிப் பண்ணிட்ட!”, “பயமுறுத்திட்டியேடா”, “மச்சான், அந்த ஹெச்.ஆர். எவன்னு சொல்லு, **** பையனத் தூக்கிடுவோம்என பல்வேறு குரல்கள் ஆறுதல்களும், அலறல்களுமாய்ச் செவிப்பறையைக் கிழித்தன.

டேய் மச்சான், கோச்சுக்காதீங்க. நான் கொஞ்சம் தனியாப் பேசுறேன் அவனோட; நீங்க எல்லாம் கெளம்புங்க. தேங்க்ஸ்டாஎன்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு, அவனுடன் சென்றமர்ந்தான் நண்பன்.

அமைதியாயிருப்பது உசிதம் எனப்பட்டது. முதுகில் தட்டிக்கொடுத்தபடியே இருந்தான். “மாசத்துக்கு ஏன் மச்சான் நம்ம டிப்பார்ட்மெண்டுக்கு மட்டும் ரெண்டு கம்பெனிதான் வருது? கம்ப்யூட்டர் சயின்ஸ் *** மவனுங்களுக்கு மட்டும் நெறைய கம்பெனிங்க வர்றாங்க?” - எதிர்பார்த்தபடியே மடை திறந்தது. உணர்ச்சிப்பெருக்கில் எழுந்த வினாவெனினும், அக்கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ‘இது கணினிக்காலம்என்று சப்பைக்கட்டு கட்டும் அதிகாரிகள் அக்கல்லூரியின் வேலைவாய்ப்பு முகமையை ஆக்கிரமித்திருந்தனர்.

செரி, வர்ற ரெண்டு கம்பெனியாச்சும் நம்பள மட்டும் கூப்பிட்டாப் பரவாயில்ல. ங்**தா ஊருல இருக்குற அத்தனை டிப்பார்ட்மெண்டையும் கூப்பிடுறாங்க. கேட்டா கிராஸ் டொமெயின் நாலேஜ் வேணுமாம். அப்போ சீ.எஸ். கம்பெனி எல்லாம் நம்பள எடுக்க வேண்டிதானே? நான் உக்காந்ததுல பதினெட்டு கம்பெனிகோர்இல்ல; கேட்டாமேனேஜ்மெண்ட்கம்பெனிப்பான்றானுங்க” - ஒவ்வொரு நிறுவனத் தேர்விலும் தோல்வியுறும் பலரும் இவனிடம் புலம்பும் அதே வார்த்தைகள்.

கணினிமயம் என்பதை மறுக்க முடியாத நிலையிலும், தனியார் கல்லூரிகளிலும், வேறு சில அரசுக் கல்லூரிகளிலும் கூட இவர்கள் துறைக்கான வேலைவாய்ப்பு அதிகமாகவே இருந்தது. “ப்ளேஸ்மெண்ட் செல்லுல இருக்குற ஒருத்தனக் கூட விடக்கூடாது மாப்ளஎன்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, “இந்த நிலைமையை இப்படியே விட்டுவிடக் கூடாதுஎன்று நண்பனுக்கு தோன்றியது.

—————

மச்சான், லக்கேஜ் எல்லாம் சித்தி வீட்டுல ஏற்கனவே வெச்சுட்டேன். யாருகிட்டயும் சொல்லிக்க மனசு வரல. ப்ளேஸ் ஆனவங்க மூஞ்சிய எல்லாம் பாத்தா எனக்கு அசிங்கமா இருக்குடா. உன்கிட்ட மட்டும்தான் கெளம்புறது பத்தியே சொல்றேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடு” - கல்லூரியி வாழ்வின் கடைசித் தேர்வை முடித்து வெளியே வந்து வாட்ஸப்பைத் திறந்தபோது, குரல்பதிவுச் செய்தியனுப்பியிருந்தான்.

மதிய நெரிசலில் தொடர்வண்டி நிலையம் செல்வது பெரும்பாடாகிப் போனது. நிலையத்தை அடைந்தபோது, புகைவண்டி புறப்பட ஐந்தே நிமிடங்கள்தாம் இருந்தன. தூரத்தில் இருந்து அவன் கையசைத்துத் தனது இருப்பைத் தெரிவித்தான். ஓடிச்சென்று கட்டித்தழுவினான் நண்பன். “மச்சான், ப்ளேஸ் ஆகலையேன்னுதான் கஷ்டமா இருக்கு. தேங்க்ஸ் ஃபார் ஆல் ஹெல்ப்டா. விஷ் வேர் வொர்த்தி ஆஃப் வாட்டெவர் யூ டிட் ஃபார் மீஎன்று அவன் சொன்னபோது இருவரும் கண் கலங்கினர். உடைந்த குரலினூடே, “ச்சீ, *** மூடு. நீ ஆஃப் கேம்பஸ்ல சீக்கிரம் ப்ளேஸ் ஆயிடுவ. சத்தியமாச் சொல்றேன்என்று நண்பன் கூறியபோது, புகைவண்டி அலறியது. அறுபது வினாடிக் கையசைப்பில் கண்பார்வையின் எல்லை கடந்து சென்றுவிட்டிருந்தது.

—————

டேய், கல்ஃப் கண்ட்ரீஸ் பத்தி வர்ற ஆஃபர் எல்லாம் தயவு செஞ்சு நம்பாத. அதுல மோஸ்ட்லி எல்லாமே ஸ்கேம் தாண்டா” - துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக வந்த மின்னஞ்சல் பற்றி நண்பனிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். “டேய், அண்டர்ஸ்டேண்ட் டா. நோ இட் இஸ் ஸ்கேம். பட் ஹவ் லாங் கேன் ஸ்டே ஐடில் ஆட் ஹோம்?” என்று கத்தினான். போட்டித் தேர்வுகள், நேர்காணல்கள் என்று வெற்றிகளற்ற ஆறுமாதங்கள் கடந்திருந்தன. வீட்டினருகே அப்பாவின் பரிந்துரையில் ஒரு சிறிய வேலை கிடைத்திருந்தபோதிலும், ஒவ்வொரு முறையும் வேலையைப் பற்றிய பேச்செழுந்தபோதெல்லாம் விருந்தினரின் முன்பும், உறவினரின் முன்பும் தன் பெற்றோர் சற்றே அடங்குவது உறுத்திக்கொண்டேயிருந்தது.

டேய் இருக்கியா? பதில் சொல்லுடா. மச்சான், ப்ளீஸ் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். டோண்ட் அப்ளைடாஎன்று நண்பன் மறுமுனையில் கதறிய தருவாயில், இணைப்பைத் துண்டித்தான்.

சட்னி அரைக்கவா?” எனும் அம்மாவின் குரலும், “உனக்கும் அப்பா செய்யுற சப்பாத்தி தானே பிடிக்கும்?” என்ற அப்பாவின் வாஞ்சையும் மனதைப் பிசைந்தன. இதுவரை ஒருமுறையேனும் இவனுக்கு வேலை இல்லாதது தொடர்பாக முகம் சுளித்ததில்லை; ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை. புன்னகை மாறாமல் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

வீட்டில் தான் தனியாயிருப்பதை மறந்து, “நான் ஒண்ணும் உங்க தயவுல இல்ல, புரிஞ்சுச்சா? என்னைக் கொழந்த மாதிரி நடத்தாதீங்கஎன்று கர்ஜித்தான். அறையின் அமைப்பு காரணமாக எதிர்க்குரல் ரீங்கரித்தது. அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பைச் சொடுக்கத் தயாராகச்சுட்டியை நகர்த்தினான். “வேணாம் மச்சான்”, “அம்மா உன் கூடவேதான் இருக்கேன்”, “தம்பி, நீ ஒண்ணும் கவலைப்படாத. அப்பா நான் இருக்கேன்என்ற குரல்கள் இடக்காதின் வழியே மூளையின் பின்புறம் சென்று வலக்காது வழியே வெளிப்பட்டது.

இறுகக் கண் மூடினான். தெம்பும் உற்சாகமும் தரும் வார்த்தைகளும், அதலபாதாளத்தில் தள்ளும் வசவுகளும் மாறிமாறி உட்புகுந்து வெளியே சென்றன. கடிகார முட்களின் ஓசை இதயத்துடிப்பைவிடப் பலமடங்கு குறைவானதாகத் தெரிந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவனாகக் கண் திறந்தான்.


**********

(ஓவியம் - ஆக்கம் & வடிவமைப்பு: கோமதி வர்ஷினி)

Saturday, November 11, 2017

சட்டை

கந்தன்சாவடிப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற வேளச்சேரி நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கூட்ட நெரிசல் மிகுந்திருந்தன. அலுவலகத்திற்கு மிக அருகில் தங்கியிருந்த வீட்டைக் காலிசெய்துவிட்டு, வேளச்சேரியில் மழைக்காலத்தில் வீடு மாறிய தவற்றிற்காக வருந்திக்கொண்டிருந்த அவனுக்கு, தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு ஏறமுடியாத பேருந்தும் எரிச்சலை வரவழைத்துக் கொண்டிருந்தது.

தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் வேலை செய்யும் இளைஞர்களும், அதே அலுவலகத்தின் அடித்தட்டு வேலைகள் செய்யும் மக்களும் பயணிக்கும் 102களையும், 119களையும் பார்த்தாலே, எவ்வித வரலாற்றுப் பின்புலமும் இல்லாமல் சமூக வேற்றுமைகள் அனைத்தும் சரிவரப் புரியும். கண்ணகி நகரிலிருந்து திருவான்மியூருக்கும், வேளச்சேரிக்கும் செல்லும் பேருந்துகளின் சத்தங்கள் அடக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் குரலுக்கான ஒரு வெளிப்பாடாகவே ஓ.எம்.ஆரின் தார்ச்சாலைகளில் பயணிக்கும்.

முதலில் கடந்து சென்ற ஓரிரண்டு பேருந்துகளில் ஏறாமல் விட்டதற்கு, "அது டிஜிட்டல் போர்ட்", "இது சுத்திப் போகும்" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிச் சமாளிக்க முற்பட்டாலும், அதற்கு மேல் சுய ஆறுதல்கள் ஒத்துவரவில்லை. காரணமேயின்றி தன் கையில் இருந்த கைப்பேசியில் தொடங்கி, தன் அருகில் நின்றிருந்த அப்பாவிப் பெரியவர் வரை அனைவரின்/அனைத்தின் மீதும் அளவில்லாத கோபம் வந்துகொண்டிருந்தது.

"மணி என்னப்பா ஆகுது தம்பி?" என்று கேட்ட, சென்னையின் இயல்பு கண்டு மிரண்டு போயிருந்த, ஐம்பது கடந்த மனிதர் ஒருவரை எரித்துவிடுவதைப் போல் பார்த்தான். இவனது பார்வை அவரது மிரட்சியைக் கூட்டியிருக்க வேண்டும்; நகர்ந்து சென்று ஒதுங்கிக் கொண்டார்.

வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தவன், தொடர்ந்து வந்த ஒரு கூட்டமான பேருந்தில் ஏறினான்.
நெரிசல் காரணமாகவும், விடலைப் பருவத்தின் விட்டேத்தி மனோபாவத்தின் விளைவாகவும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஏறிய அந்த ஓரிரண்டு நொடி இடைவெளியில் முடிந்தவரை உள்ளே முன்னேறிச் செல்ல முண்டியடித்தான். முக்கி, முனகிப் பார்த்தாலும் இரண்டாவது படியைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.

மடிக்கணினியைச் சுமந்துகொண்டிருந்த முதுகுப்பை கடைசிப் படிகளில் தொங்கியவர்களின் மூக்கிலும், முகத்திலும் உரசியதால் எழுந்த முனகல்கள், "பையைக் கழட்டித் தொலையேன் டா சாவுக் கிராக்கி" என்பதன் சுருக்க வடிவம். முனகல்கள் கெட்ட வார்த்தைகளாக மாறுவதற்கு முன்பாகப் பையைச் சிரமப்பட்டுக் கால்களுக்கிடையில் வைத்தான். "நீ பாத்து வெச்சுக்கோ சார். பாத்துப் பாத்து, அண்ணாத்தே" என்று ஒரு தாடிக்காரர் படியிலிருந்தபடியே சொல்லிக்கொண்டிருந்தார்.

கடுப்பாகப் பின்னால் திரும்பி அவரை முகத்திற்கு நேராகப் பார்த்தபோது, வாசம் குப்பென்று நாசியைத் துளைத்தது. முட்டக் குடித்திருக்க வேண்டும்.  இவன் லேசாகத் தும்மிவிட்டுத் திரும்பினான். பேருந்தின் அக்கணநேரத்து ஆட்டம் பக்கத்தில் இருந்தவனின் மீது இடிக்க வைத்தது. தோசைக் கல்லில் நொடிப்பொழுது கையை வைத்து எடுத்தது போன்ற சூடு தன் முழங்கையில் படர்வதை உணர்ந்தான்.

அப்போதுதான் அந்த மெலிந்த பையனைக் கவனித்தான். பார்த்தவுடன் வகைப்படுத்தக்கூடிய வடகிழக்கிந்திய முகம். ஒட்டிய கன்னமும், ஒடுங்கிய கண்களும் அரைச்சம்பளத்துக்கு அவன் செய்யக்கூடிய செக்குமாடு வேலைக்கான சாட்சியங்களாகச் சுரண்டலுக்குக் கட்டியம் கூறின. கடைசிப் படியில் தொங்கிக்கொண்டு, இரண்டு கைகளையும் கைப்பிடிகளில் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவ்வப்போது இருமியபோது சளி ஒழுகியது; அதைத் துடைக்க ஒரு கையைப் பிடியிலிருந்து எடுத்தபோதெல்லாம் தானும் தடுமாறிப் பிறரையும் தடுமாற வைத்துக்கொண்டிருந்தான். காய்ச்சலின் விளைவாகக் கண்களில் தேங்கியிருந்த நீர், முகத்திற்கே ஒரு பரிதாபத் தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது.

எஸ்.ஆர்.பி. சிக்னலில் பேருந்து நின்றபோது மீண்டும் ஒருமுறை அவனது கையில் இவன் இடித்துவிட்டான். காய்ச்சலேதான். உடல் உலையாகத் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு கால் படியிலும், ஒரு கால் அந்தரத்திலுமாக அந்த அரை மயக்கத்திலும் பயணித்துக் கொண்டிருந்த அவனது துன்பங்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், பேருந்தின் முக்கால்வாசிப் பயணிகள் காதுக்கருவிகளில் அனிருத்திலும், அண்ணன் ஹிப்ஹாப் ஆதியிலும் மூழ்கியிருந்தனர். முகநூலில் தோன்றிய ஷெரில் மற்றும் ஓவியாவின் புகைப்படங்கள் மற்றவர்களை ஆட்கொள்ளப் போதுமானதாயிருந்தன.

சிக்னலிலிருந்து பேருந்து புறப்பட்டபோது நிகழ்ந்த ஆட்டத்தின் விளைவாக வடகிழக்கிந்தியப் பையன், குடித்திருந்தவரின் மேல் இடித்துவிட்டான். சிறிதே அடங்கியிருந்த அவரது அலப்பறை மீண்டும் செவ்வனே தொடங்கியது. "என்னப்பா, ஜொரம் அடிக்குதா?" என்று கேட்டார். அவன் வெறுமையாகப் பார்த்தான். மொழி புரியாத நிலையிலும் அவர் என்ன கேட்டிருப்பார் என்று விளங்கியிருக்க வேண்டும். தலையாட்டினான். உண்மையில் அவருக்குப் பதிலேதும் தேவைப் பட்டிருக்கவில்லை. புலம்பத் தொடங்கினார். "யப்பா சாமிங்களா, தெய்வங்களா! யாராச்சும் இந்தத் தம்பிக்கு உக்கார எடம் குடுங்களேன்.கொதிக்குதுய்யா ஒடம்பு" என்று படியிலிருந்தபடியே கத்தினார். செவிப்பறையைக் கிழிக்கும் கிடார் இசையைத் தாண்டிப் பலருக்கு அவரது புலம்பல் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டுக் கொண்டிருந்த சிலரும் அதை ஒரு குடிகாரனின் போதை என்ற சினத்திலோ, அல்லது அவரது வார்த்தைக் குழறல்களால் ஏற்பட்ட பரிகாசத்திலோதான் கேட்டனரே தவிர, அது ஒரு கெஞ்சலாக யாருக்கும் கேட்கவில்லை.

தரமணி பேருந்து நிறுத்தம் வரை, "ஜொரம் அடிக்குதாப்பா?" என்று அவனைப் பார்த்துக் கேட்பதும், பின்னர், "யாராச்சும் எடம் குடுங்களேன்" என்று இலக்கே இல்லாமல் கத்துவதுமாக இருந்த அவருக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. நிறுத்தத்தில் இறங்கியவர்களுக்குப் பிறகு, மீண்டும் படியில் ஏறியபோது அனைவரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு பேருந்தின் முன்பக்கமாகச் சென்றார். காய்ச்சலால் அவதியுற்றவன் அப்போதும் கூட இறங்கியேறத் திராணியற்று, சுவற்றில் ஒட்டிய பல்லியைப் போலவே, கம்பியை இறுகப் பற்றியபடி இருந்தான்.

உள்ளே சென்றிருந்த குடிமகன், இப்போது வெறியேறியிருந்தார். "எடம் குடுங்கன்னு மருவாதையா கேட்டுன்னுக்கிறேன்; எவனாச்சும் வழி வுட்றானான்னு பாரு. ஒருத்தனுக்கும் மனிதாபிமானமே இல்ல, செவுட்டுப் பசங்க. காதுல கண்டதையும் மாட்டிக்கினு போவுதுங்க பாரு" என்று கூக்குரலிட்டார். மேலும் முன்னேறி ஓட்டுநருக்கு அருகில் செல்ல முயன்றபோது, ஒருவன் வீம்பாக வழிமறித்து நின்றுகொண்டிருந்தான். தோளைத் தட்டியபோதும், "சார், கொஞ்சம் வழிவுடு சார்" என்று கேட்டபோதும் சிறிதும் அசராமல் நின்றுகொண்டிருந்தான்.

எல்லைகடந்த ஆத்திரத்துடன், "ஓத்தா, வழிவுட மாட்டியா நீ? அவ்ளோ கெராக்கி காட்ற. ஏன், இந்தக் கம்பியத்தான் புடிக்கணுமா நீ? தோ, இந்தக் கம்பியப் புடிக்க மாட்டியா?" என்று பேருந்துக் கம்பியில் ஓங்கிக் குத்தினார். அவருக்கிருந்த போதையில் வலி உறைத்திருக்க வாய்ப்பில்லை. இப்போது மறித்தவன் சற்றே பயந்து வழிவிட்டான். ஆனால், அதற்குள்ளாகப் பேருந்தில் குடிமகனுக்கெதிராக சலசலப்புகள் எழத் தொடங்கியிருந்தன. "அந்தப் புண்ட மவன எறக்கி விடுங்க கண்டக்டர்", "யோவ் போத, சூத்தைப் பொத்திக்கிட்டுக் கமுக்கமா வா. சும்மா சவுண்டு போடாத" போன்ற ஓரிரண்டு கூச்சல்கள், ஏற்கனவே கூட்டத்தில் பயணச்சீட்டு கொடுக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நடத்துனரைக் கோபத்தில் ஆழ்த்தின.

பேபி நகரை நெருங்கியபோது வலுக்கட்டாயமாகக் குடிமகனைப் பிடித்துத் தள்ளிவிடத் தொடங்கியிருந்தனர். பையைக் காலுக்கிடையில் வைத்திருந்த இவன் மேலும் சாய்ந்தார் குடிமகன். பேருந்து நிறுத்தத்தில், "யோவ், இன்னா? எறங்குய்யா. எறங்குய்யா கீழன்றேன்ல" என்றபடி ஓட்டுனர் அவரைக் கீழே தள்ளியபோதுதான், குடிமகன் போட்டிருந்த சட்டையைக் கவனித்தான். முழுமையாகப் படிக்க முடியவில்லை எனினும், "சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை" போன்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்தன.


பேருந்தின் உள்ளே கவனித்தான். குடிமகன் ஏன் குடித்திருப்பார் என்ற காரணம் கூச்சலிட்டவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; அவருக்கிருந்த அக்கறையான பாசம், பலருக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. சென்னையின் மக்கள் கூட்டத்தைச் சுமந்துகொண்டு பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது.

Monday, October 2, 2017

கடவு – 3

(முதல் மற்றும் இரண்டாம் பதிவைப் படிக்க)

டேய், டீம் ட்ரிப் கொலொம்போ போறோம்டா. வர்றியா?” என்று அலுவலகத்தில் உடன்பணியாற்றும் நண்பர் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “அவரும் வர்றாரா?” என்று கேட்டான், அந்தஅவர்யாரென்பது நண்பருக்குப் புரியவே செய்தது. “ஆமாம்டா. அதுனால என்ன? நீ பாட்டுக்கு வரப்போற? என்ன சொல்ற?” என்றார். தன்னிடம் கடவுச்சீட்டு இல்லையென்பது நினைவிற்கு வந்தது. இரண்டு வருடங்கள் பின்னோக்கி உருளலாம் என நினைத்த நினைவுப்பந்தைக் காலால் வலுவாக நிறுத்தி, “எப்போப் போறீங்க?” என்றான். “செப்டம்பர் கடைசிஎன்றார். கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒரு 35 நாட்கள் இருந்தன. நப்பாசை பிறந்தது. “வீட்டுல கேட்டுட்டுச் சொல்றேன்என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டான்.

அன்று வீட்டிற்கு வந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. பாஸ்போர்ட் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிப்பதற்கான படிவத்தை ஒருமுறை பார்த்தான். ஆர்வம் மேலோங்கவே, விவரங்களையெல்லாம் உடனே நிரப்பினான். ‘தட்கல்மற்றும்சாதாஎனும் இரு வழிமுறைகள் இருந்தன. முன்னது, வேகமாகக் கடவுச்சீட்டு பயனாளியைச் சென்றடைவதற்கான, கொஞ்சம் கூடுதலாகச் செலவு பிடிக்கும் வழி; பின்னது நத்தையைப் போல் ஊர்ந்து வரும் வழக்கமான அரசாங்க வழிமுறை. முன்னதைப் பின்பற்றினால், ஐந்திலிருந்து ஏழு நாட்களில் கடவுச்சீட்டு வீடு தேடி வரும், ஆனால் அதற்கு மிகவும் உயரிய பதவிகளில் இருக்கும் ஒரு மனிதர்/மனிதி அத்தாட்சிக் கையெழுத்திட வேண்டும்.

சுரப்பிகள் சூடாக மூளைக்குள் சுரந்தபோதும், ஒரு நிமிடம் நிதானப்படுத்தி யோசித்தான். ‘கண்டிப்பா ஸ்ரீலங்கா போயே ஆகணுமா?’ என்றெல்லாம் யோசனைகள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, “அம்மா அப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாது. இந்த முறை நாமளே செய்வோம்என்று முடிவுசெய்து இணையதளத்தில் தட்கல் விதிமுறைகள் அத்தனையும் மனனம் செய்தான். ”இந்தக் கையெழுத்துக்கு மட்டும் ஏதாச்சும் ஒரு ஏற்பாடு பண்ணணும்என்று சொல்லிக்கொண்டான்.

அவனது மனவுறுதிக்கு முதல் வெற்றி கிடைக்கவே செய்தது. அலுவலக நண்பர் ஒருவரின் தாயார் மத்திய அரசு நிறுவனமொன்றில் பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதவியில் இருப்பதாகவும், அவர் அக்கையெழுத்திடத் தகுதியானவர்தாம் என்றும் முடிவானது. ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொண்ட பிறகு, தட்கலில் விண்ணப்பித்தான். விண்ணப்பித்த பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் தேதியைத் தேர்வு செய்யும் ஒரு பொத்தான் இருந்தது. சொடுக்கும் முன்பாக, அதைப் பற்றிப் படித்துவிடலாம் என்ற நோக்கில், வலையை அலசினான். மூன்று முறை முயற்சிக்கலாம் என்றும், அதற்குப் பிறகு தட்கல் விண்ணப்பம் சாதா விண்ணப்பமாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தட்கல் அப்பாயிண்ட்மெண்ட் பகுதிக்குச் சென்றபோது, அடுத்த வேலை நாளுக்கான அவகாசம் மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. ‘இதென்னடா வம்பாப் போச்சு? தட்கல்ல வர்றவன் கொஞ்சம் அவனுக்கு ஏத்த மாதிரி நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்னு பாத்தா, லுச்சாப் பயலுக மாதிரி வெச்சுருக்கானுகஎன்று தோன்றியது. எனினும் அத்திரையில் வெறும் தேதி மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தபடியால், தகுந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்குமாறு அடுத்த திரையில் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாளுக்கான தேதியைத் தேர்வு செய்தான். ‘தங்களது பார்வை நேரம், நாள்என்று அனைத்தையும் காட்டியது திரை. இவனுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியவில்லை. விக்கித்துப் போயிருந்தான். பொதுவாக அனைத்து இணையதளங்களிலும், “நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது உங்கள் இறுதியான முடிவா?” என்று கேட்கும் ஒரு திரை வந்த பிறகு, “ஆம்என்று சொன்னால் மட்டுமே தொடரும். இங்கு அப்படியில்லை. ‘கவர்மெண்டு வெப்சைட்ல? அப்புடித்தான் இருக்கும்என்று மனச்சாட்சி கைக்கொட்டிச் சிரித்தது.

தலைவிதியை நொந்துகொண்டு பதிவு செய்யப்பட்ட பார்வை நேரத்தை ரத்து செய்தான். ‘இன்னும் ரெண்டு முயற்சி இருக்குல்ல? அதுல மொதல் முயற்சியிலயே வேல முடிஞ்சிடும்டா, கவலப்படாதஎன்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். எனினும் அவன் செய்த அச்சிறு தவறு, நெஞ்சில் குமைந்துகொண்டே இருந்தது. ’அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை இதெல்லாம் கேட்டிருக்கலாமோ?’ என்று தோன்றியது. ஆனால் அவர்கள் பாஸ்போர்ட் ஏஜண்டிடம் போகச் சொல்லுவார்கள் என்று தெரியும்; அதெல்லாம் தேவையில்லாத வெட்டிச் செலவு, காசைக் கரியாக்குவதற்கான வழிமுறைகள் என்பது இவனுடைய பார்வை.

இனிமேல் செய்யப்போகும் ஒவ்வொரு முடிவிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அந்தக் கையெழுத்து வாங்குவதற்கான படிவத்தை தளத்திலிருந்து தரவிறக்கம் செய்தான். நண்பரிடம் விஷயத்தைக் கூறியவுடன், “கிவ் மீ டூ டேஸ். நான் அம்மா கிட்டயிருந்து சைன் வாங்கித் தரேன்என்று சொன்னார். சொன்னபடியே செய்யவும் செய்தார். இப்போது எல்லாப் பத்திரங்களும் தயாராக இருந்தன. வாக்காளர் அட்டையில் மட்டும் அப்பாவின் பெயரில் எழுத்துப்பிழை இருந்தது (முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்யும்போது ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லாத அரசாங்கப் பிறவிகளுக்கு வாங்கும் காசிற்கான சோறு செரிக்குமா எனத் தெரியவில்லை. குறைந்தபட்சம் ஐந்தில் ஒருவருக்கு வாக்காளர் அட்டையில் பிரச்சனை இருக்கும் என்பது நிதர்சனம்). ஆனால் அது இல்லாமலே மூன்று ஆதாரங்கள் இருந்ததால், நம்பிக்கையுடன் இரண்டாம் முறையாகப் பதிவு செய்தான். திரையில் நேரம், தேதி என அடுத்த நாளுக்கான விவரங்களைக் காண்பித்தபோது தான் ஒரு உண்மை முகத்திலறைந்தது. அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டும், அல்லது நேர விடுப்பு எடுக்க வேண்டும். அதற்கு மேலாளரிடம் கேட்க வேண்டும். அவருக்கும், இவனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. ‘இதென்னாடா எனக்கு வந்த சோதனை?’ என்று யோசித்துக் கையைப் பிசைந்துகொண்டு, இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் குழந்தையைப் போன்ற தர்மசங்கடத்தில் இருந்தபோது, மீண்டும் நண்பர் கைகொடுத்தார். அவரே பேசி நேர விடுப்பு வாங்கிக் கொடுத்தார். இரண்டாவது சிறிய வெற்றி கிடைத்தது. ‘டேய், கொஞ்சம் கொஞ்சமா நல்லது நடக்குதுடா. கவலையே படாத, கண்டிப்பாப் பாஸ்போர்ட் கெடைச்சிடும்என்று பூரிப்புடன் சொல்லிக்கொண்டான்.

அடுத்த நாள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றான். ‘ஸ்டேட் கவர்மெண்டு ஆஃபீஸ்தான் தலவலிக்குப் பொறந்தது. நம்ம அம்மால்லாம் பப்ளிக் செக்டார்லதானே இருக்காங்க? அவங்க எல்லாம் இழுத்துப் போட்டு வேலை செய்யுறாங்களே? ஸோ, இது ஆர்.டி.. மாதிரியெல்லாம் இருக்காதுஎன்று நம்பிக்கையுடன் வீறுநடைபோட்டுச் சென்றான். தட்கல் விண்ணப்பங்கள் அண்ணா சாலையில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டுமே பரீசிலிக்கப்படும் என்பதால், வேலையெல்லாம் முடிந்தபின்னர், எல்..சி.யிலிருந்து சாந்தி தியேட்டர் சென்று அங்கு சாலையோரத்தில்சாட்சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். இரண்டுங்கெட்டான் நேரமாக இருந்ததால், மதிய உணவு உண்டிருக்கவில்லை.

 வரிசை எண் முறையில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். இவன் நாற்காலியில் அமர்ந்திருந்தபோதுதான் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்பட்டது. மூன்று கட்டங்களாக நடக்கும் பரிசோதனைகளில், முதல் கட்டப் பரிசோதனை செய்யும் நபரின் முக்கிய நோக்கமே ஏதாவதொரு காரணம் சொல்லி, வருபவர்களைத் திருப்பி அனுப்புவதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. ‘இவரது மனநிலை சரியில்லையா? அல்லது வேலையே இதுதானா?’ என்று குழப்பமும், பீதியும் அடைந்தவனாக உட்கார்ந்திருந்தான். இவனது முறை வந்தபோது, ஆதாரங்கள் எல்லாவற்றையும் காட்டினான். “வோட்டர் .டி. எங்கப்பா?” என்றார் அலுவலர். “இல்லைங்க சார்என்றான். “அப்போன்னா தட்கல்ல அப்ளை பண்ண முடியாது. கெளம்புங்க. நார்மல்ல மாத்தி விட்டுடுறேன்என்று பொரிந்தார். “சார், அதுல வெரிஃபிகேஷன் சர்டிஃபிகேட் இருக்கு சார். கன்சேர்ண்ட் அத்தாரிட்டி கிட்ட சைன் வாங்கியிருக்கேன்என்று அமைதியாக ஆனால் பொட்டிலறைந்தாற்போல் சொன்னான். அடியில் இருந்த அச்சான்றிதழைப் பார்த்துவிட்டு, “ம்.. சரி, இது இருக்கா? அப்போ .கே. இதெல்லாம் தெளிவாச் சொல்ல மாட்டீங்களா?” என்று தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சப்பைக்கட்டு கட்டினார் அந்த ஆபீசர். ’பார்க்கப் பொதிகை சேனல்ல பி.எஸ்.என்.எல். ஸ்போர்ட்ஸ் க்விஸ் நடத்துற சுமந்த் ராமன் மாதிரி இருந்துட்டு என்னாப் பேச்சுப் பேசுது பயபுள்ளஎன்று உள்ளுக்குள் நினைத்தபடி அடுத்தகட்ட பரிசோதனைக் கூடத்திற்குள் நுழைந்தான்.

அங்கு தொலைக்காட்சித் தொடர்களில் ஈவிரக்கமில்லாத மாமியார் கதாபாத்திரத்திற்கு அளவெடுத்துச் செய்ததைப் போன்ற ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். “யெஸ், கம்என்றார். சென்றமர்ந்து, மீண்டும் அதே காகிதங்களைக் காண்பித்தான். “ஓகே, ஒகேஎன்று ஒவ்வொன்றுக்கும் சொல்லிக்கொண்டே வந்தவர், “இதென்ன?” என்று அந்தக் கையெழுத்து வாங்கியிருந்த சான்றிதழைக் காட்டிக் கேட்டார். “மேடம், வெரிஃபிகேஷன் சர்ட்டிஃபிக்கேட்டு. தட்கல்னா தேவைன்னு சொன்னாங்…” என்று இழுத்தபோதே இடைமறித்து, “அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். நாங்க இந்த வேலையில தானே இருக்கோம்? எங்களுக்கே பாடம் நடத்துறீங்க?” என்றார். கோபம் வந்தாலும், வேலை ஆக வேண்டும் என்ற நினைப்பில்ஆகே, பீச்சேமூடிக்கொண்டு நின்றான். “என்ன அமைதியாயிட்டீங்க?” என்றார். ‘யம்மா தாயே, இப்போ நான் பேசணுமா, கூடாதா?’ என்று மனத்தில் நினைத்தபடியே, “ஏன் மேடம், ஏதாச்சும் தப்பாயிடுச்சுங்களா?” என்று கேட்டான். “இந்த டெம்ப்ளேட் பழசு தம்பி. யாரு குடுத்தா இது?” என்று முறைத்தார். “மேடம், வெப்சைட்ல இருந்துச்சுஎன்றான். அடுத்த கால் மணிநேரத்திற்கு அவர்களது சொந்த இணையதளத்தில் இருப்பதை அப்படியே நம்பக் கூடாது எனவும், சந்தேகமிருப்பின் அவர்களது வாடிக்கையாளர் சேவைக்கான எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ரிஜெக்ட்ட்என்று அவர் பச்சை மையால் எழுதியது கிலியை மூட்டியது. அவர் திட்டத் திட்ட, நிதானமாக வேறெதுவும் தவறு இருக்கிறதா, திருத்த வேண்டுமா என்று அனைத்தையும் கேட்டுக்கொண்டு, ‘சரி, இது ஒரு தப்புத்தானே? சரி பண்ணிடலாம். கவலைப்படாதடாஎன்று சொல்லி மனத்தைத் தேற்றிக் கொண்டான். வெளியே வந்தபோது சாப்பிடுவதற்கான மன்நிலை இல்லை. கடவுச்சீட்டு எனும் ஒரு தேவையைத் தாண்டி, அவனது மனவுறுதியைச் சோதிக்கும் ஒரு சம்பவமாக அது மாறிக்கொண்டிருந்தது. ‘சந்தேகம் இருந்தாத்தானே ஃபோன் பண்ணிக் கேக்கணும்? அதுக்குச் சரியா, தப்பான்ற கேள்வி வரணும். இவங்க ஒண்ணு குடுத்திருந்தா அது சரின்னுதானே நம்புவோம்?’ என்று பல கேள்விகள் மனத்தில் வட்டமிட்டன. உச்சி வெயிலில் தலை வலித்தது. எல்லாவற்றையும் தாண்டி, இன்னொரு நாள் மீண்டும் வர வேண்டும், அதற்கு மீண்டும் அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்று நினைத்தபோது வயிற்றில் புளியைக் கரைத்தது.

அங்கிருந்து நேராக நண்பரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விவரத்தைக் கூறினான். புதிதாக ஒரு சான்றிதழை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார் நண்பர். அந்நம்பிக்கை அதுவரை கேவலமாகச் சென்றுகொண்டிருந்த அந்நாளில் ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியது. நன்றாகச் சாப்பிட்டு, வீட்டுக்கு வந்தான். அன்றைய அலைச்சலும், மனக்குழப்பங்களும் சேர்ந்து மண்டையைப் பிளந்துகொண்டிருந்தன. அம்மாவிடம் தொலைபேசினான். “கண்டிப்பா அடுத்த முறை அப்ரூவ் ஆயிடும். கவலையே படாதஎன்று நம்பிக்கையூட்டியது பெற்ற ஜீவன். ஆதரவான அவ்வார்த்தைகள் எதைக் காட்டிலும் அந்நொடியில் அவனுக்குத் தேவையாயிருந்தது. படுக்கையில் சுருண்டு விழுந்துதான் தெரியும், அலாரம் அடித்து எழுந்து அடுத்த நாள் அலுவலகம் செல்லத் தயாரானான்.

ஓரிரு நாட்களில் மீண்டும் சென்றான். கடைசி முறை என்பதும், அதை விட்டால் சாதா முறைக்கு மாற்றிவிடுவார்கள் என்ற நினைப்பும் வியர்வை முத்துக்கள் முகத்தில் கோலமிட வழிசெய்தன. முதல் பரிசோதனையில் அதே கேள்விகள். அதே பதில்கள். இரண்டாவது அறைக்குள் இம்முறை வேறொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் அனைத்து ஆதாரங்களையும் காண்பித்தபோது, அவர் வேறு சிலதவறுகளைச் சுட்டிக்காட்டினார். அவர் சொல்லச் சொல்ல, இவனுக்கு ரத்தம் கொதித்தது. முடிவாக, “படிச்சவங்க தானே நீங்க? வெப்சைட் எல்லாம் ஒழுங்காப் பாக்கமாட்டீங்களா?” என்று அவர் கேட்ட கேள்வியில் இவனுக்கு இருந்த பொறுமை முற்றிலுமாக்க் கரைந்தது.

எக்ஸ்யூஸ் மீ, சார். மைண்ட் யுவர் டங். யூ ஆர் அன் ஆஃபீசர். ஆம் அன் அப்ளிகெண்ட். தப்புன்னா தப்புன்னு சொல்லுங்க. மாத்திட்டு வரேன். படிப்பைப் பத்தியெல்லாம் எதுக்குப் பேசுறீங்க? என்ன சொன்னீங்க, வெப்சைட்டா? அதை ஃபாலோ பண்ணி எடுத்துட்டு வந்தா, அன்னிக்கு ஒரு மேடம் ஃபோன் பண்ணிக் கேக்கச் சொன்னாங்க. அவங்க சொன்னதையெல்லாம் மாத்திட்டு வந்தா இப்போ நீங்க ஒண்ணு சொல்றீங்க. என்னையப் பார்த்தா எப்புடித் தெரியுது? ஆல் ஆஃப் அஸ் ஹூ கம் ஹியர் அவைல் லீவ் அண்ட் கம். டோண்ட் ப்ளே வித் யுவர் இடியாட்டிக் அண்ட் ஷிட்டி ப்ரொசிஜர்ஸ்என்று இவனும் பதிலுக்குப் பொரிந்தான். நிதானமாகக் கேட்ட அவர், “உங்களுக்கு என்ன வேணுமோ கத்திக்கோங்க சார். ஆனா, உங்க கிட்ட சஃபிஷியண்ட் டாக்குமெண்ட்ஸ் இல்லஎன்றபடி ரிஜெக்ட்ட் என்று முத்திரையிட்டார்.

அமைதியாக வெளியே வந்தவன் கழிவறைக்குள் சென்று தொண்டை கிழியக் கத்தினான். உலகமே இருண்டு கண்ணுக்குள் சுருங்கி வருவதைப் போல் இருந்தது. முதல்முறையாக அப்பாவிடம் பேசினான். அழுகையினூடே விவரத்தைக் கூறினான். “சரி சரி விடுப்பா. முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல? ஒண்ணும் கெட்டுப் போகல. எனக்கு ஒரு ஏஜண்ட் தெரியும். அவரைப் போயிப் பாரு அமிஞ்சிக்கரையில. ஹீ வில் ஹெல்ப் யூ அவுட்என்றார். உடனே அங்கிருந்து கிளம்பி ஏஜண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்றான். தட்கலிலிருந்து, சாதாவிற்கு மாற்றப்பட்டதையும், கடவுச்சீட்டின் உடனடித் தேவையையும்பயணத் தேதி உட்பட - விவரித்தான். “இன்னும் 15 நாள் இருக்கு. கஷ்டம்தான். பட் டோண்ட் வொரி. பண்ணித் தரேன்என்று முன்பணம் வாங்கிக்கொண்டார். அந்நேரத்தில் பணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ‘கவர்மெண்ட் ஆஃபீஸ் ****** ********* %#&^* கிட்ட மாரடிக்குறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லஎன்று ஆசுவாசமாகத்தான் இருந்தது.

அதற்கடுத்த இரண்டாவது நாளில், அமைந்தகரையிலிருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில், அவனது பரிசீலனை இனிதே நிறைவடைந்தது. மண்டல அலுவலகத்தில் இல்லாத ஒரு நேர்த்தி இங்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டபோதுதான் அவ்வுண்மை பளிச்சிட்டது. இங்கு இருந்த அனைத்து அலுவலர்களும் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். ஒப்பந்தத்தின்படி வேலை செய்பவர்கள். வேலையைச்  சரியாக செய்யவில்லையெனின், சீட்டுக் கிழிக்கப்படும் என்ற பயம் அவர்களை நூறு சதவிகித நேர்த்தியில் பணிபுரியச் செய்தது. “போலீஸ் வெரிஃபிகேஷன் சொந்த ஊருக்கும் போடுவாங்க. டெம்ப்ரவரி அட்ரஸ்க்கும் போடுவாங்க. ஊர்ல நீங்க மூவ் பண்ணுங்க. இங்க ஆக வேண்டிய வேலைகளை நான் பாத்துக்குறேன்என்றார் ஏஜண்ட்.

ஏஜண்ட் தொலைபேசியில் கொடுத்த வழிகாட்டுதலின்படி. சென்னையில் வேலையை விரைந்து முடிப்பதற்காக அவனும், அம்மாவும் காவல் நிலையத்திற்கே சென்று பிரசாதம் கொடுத்து வேலையை முடிக்க முயன்றனர். “லேடிஸ் வந்தாக் கொஞ்சம் இரக்கம் வரும்டா ஸ்டேஷன்லஎன்பது அம்மாவின் கூற்றாக இருந்தது. ஆனால் அந்த ஏட்டு, “பொம்பளையத் துணைக்கு அழைச்சிடு வர்றியா? இருடீஎன்றா ரீதியில் மறுநாள் மீண்டும் அழைத்து வறுத்தெடுத்து பின்னர் கடமையைச் செய்தான்(ர்). கடலூரில் எஸ்.பி. அலுவகத்தில் தேங்கிக்கிடந்த அவனுடைய கோப்பை அம்மாவின் நண்பரின் நண்பர் உதவி மூலம் எடுத்து, அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அனுப்பி, பிரசாதம் கொடுத்து, வேலையை முடித்தனர். இதற்காக அவன் அவசர கதியில் ஒரு நாள் மாலைப் பேருந்தில் கிளம்பி, ஊருக்குச் சென்று, நேராகக் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட்டு, மீண்டும் நள்ளிரவில் கிளம்பி அடுத்த நாள் வேலைக்குச் சென்றது தனிக்கதை.

இவையனைத்தையும் மீறி, கிளம்புவதற்கு இரண்டே நாட்கள் இருந்த நிலையில், ஏஜண்டிடம் பெரிய தகவல் எதுவும் இல்லை. நேரில் சென்றபோது, “சென்னை ரிபோர்ட் மட்டும் பெண்டிங்ல இருக்கு. நீங்க ஒரு எட்டுப் போயிட்டுக் கமிஷனர் ஆஃபீஸ்ல செக் பண்ணிட்டு வாங்கஎன்று பார்க்க வேண்டிய ஆளின் விவரங்களைத் தந்தார். அதை வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆணையர் அலுவலகம் சென்று அங்கு சில பல வடைகளை வாயில் சுட்ட பின்னர், வேலையாயிற்று. பிரசாதம் எதுவும் தர வேண்டியிருக்கவில்லை. ஏஜண்டிடம் இருந்து கட்டிங் போய்விடும் போல.

இதற்கிடையில் அம்மா அவனுக்கும், அவன் அம்மாவுக்கும், அப்பா அவனுக்கும், அவன் அப்பாவிற்கும், அவர்கள் இருவரும் ஏஜண்டிற்கும் என ஒரு நூறு, நூற்றைம்பது தொலைபேசி உரையாடல்கள் நடந்திருக்கும். “கவலைப் படாதீங்க. தம்பிக்கு நான் இன்னிக்கு முடிச்சித் தர்றேன்என்ற அவரது உறுதிமொழி மட்டுமே அக்கடைசி நொடியிலும் ஆறுதலாயிருந்தது. வேலை முடிந்தவுடன், “சார், இங்க வேலை ஆயிடுச்சு. உங்க ஆஃபிஸ்க்கு வர்றேன்என்று தொலைபேசியபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. “எதுக்கு தம்பி ஆஃபீஸ்க்கு? நீங்க நைட்டு கால் பண்ணுங்க. பாக்கலாம்என்றார். அடுத்த நாள் விமானப் பயணம் என்று அவரிடம் நினைவுபடுத்தியபோது, “, சரி சரி. நீங்க நேர்ல வாங்க, பேசுவோம்என்றார். ஏனோ, நெஞ்சைப் பயம் கவ்வியது. அவரது குரலில் ஒரு நம்பிக்கை இருக்கவில்லையோ என ஐயம் ஏற்பட்டது. அவரது அலுவலகத்தை அடைந்தபோது, “ஏன் தம்பி, இப்போ சொல்றீங்க? இனிமே எப்புடி இன்னிக்குக் கெடைக்கும் பாஸ்போர்ட்? உங்க சொந்த ஊருல வெரிஃபிகேஷன் லேட் ஆயிடுச்சு. நான் ஒண்ணுமே பண்ண முடியாதுஎன்று வாதிட்டார்.


நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். ஒரு இருபது, இருபத்தைந்து நாள் பிரயத்தனங்கள் அனைத்தும் நொடியில் சின்னாபின்னமாய்ச் சிதறி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தன. ஊரில் அம்மாவின் கஷ்டங்களும், அவர் சொன்னதற்காக எவ்வளவு பேர் வேலை செய்திருப்பார்களோ என்று எண்ணிப் பார்க்கையில் கண்ணில் ஒரு துளி நீர் எட்டிப் பார்த்த்து. எதுவுமே சொல்லாமல் எழுந்து வெளியே வந்தான். “என்னோட டிக்கெட்டைக் கேன்சல் பண்ணிடுங்க, நான் வரலஎன்று நண்பரிடம் தொலைபேசிவிட்டு, அவரது பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தான். சத்தமாக அழ வேண்டுமெனத் தோன்றியது. அடக்கி அடக்கி விசும்பியதால் கண்ணீர்த் துளிகள் சூடாகக் கன்னத்தை நனைத்தன. சோவெனப் பெய்து கொண்டிருந்த அடைமழையில் நனைந்தபடியே இலக்கின்றி நடக்கத் தொடங்கினான்.