சப்-டைட்டிலிங்கிற்கும் எனக்கும் ராசியே இல்லை போலிருக்கிறது. கல்லூரி இறுதியாண்டில் கார்த்திக் சுப்பாராஜின் "பெஞ்ச் டாக்கீஸ்" அலுவலகத்தில் ஒருவர், "தம்பி, இந்தப் படத்துக்கு மொதல்ல பண்ணிக் குடுங்க. எப்புடிப் பண்றீங்கன்னு பாத்துட்டு நெக்ஸ்ட் ப்ராஜக்ட்ல இருந்து பேமண்ட் பேஸிஸ்ல பண்ணலாம்" என்றார். பெயரெல்லாம் சொல்லிக் கழுவி ஊற்ற மனமில்லை. ஆனால், நான் அவர் கொடுத்த மொக்கை ஆங்கிலப்படத்திற்குத் தமிழ் சப்-டைட்டிலிங் செய்து அனுப்பிய பிறகு என்னுடைய மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி அழைப்புகளுக்கோ பதிலளிக்கவில்லை.
“சரிதான், எச்சையா இருப்பானுங்க போல” என்று விட்டுவிட்டேன். வருடமொன்று கடந்த பின்னர், இப்போது நான் மதிக்கும் ஒருவரது மூலமாக மீண்டும் சப்-டைட்டிலிங்கிற்கான வாய்ப்பு வந்தது (இந்த முறை ‘பேமெண்ட்’ போன்ற பசையான வார்த்தைகளெல்லாம் இல்லை). நான் மதிக்கும் அந்த நண்பரின் தோழி ஒரு ‘ப்ராஜெக்ட்’ செய்வதாகவும், அவரது என்.ஜி.ஓ.விற்காக ஒரு யூட்யூப் காணொலியைத் தமிழிலிருந்து, ஆங்கிலத்திற்கு சப்டைட்டிலிங் செய்ய வேண்டும் என்று சொன்னார்.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மக்கள் பக்கம்” என்ற நிகழ்ச்சியின் 06/01/2018 பகுதிதான் எனக்கான கொடுக்கப்பட்ட காணொலி.
ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்று நாட்களில் வேலையை முடித்து, மின்னஞ்சல் அனுப்பினேன். தன் தோழிக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், விரைவில் ‘ஃபீட்பேக்’ சொல்வதாகவும் சொன்ன அவர், ஆளே காணோம். வாட்ஸப்பில் ‘பிளாக்’ செய்துவிட்டார் போல. கழுதை கெட்டால் குட்டிச்சுவர் இல்லையா? எனக்குத்தான் இருக்கவே இருக்கிறது எனது குட்டிச்சுவரான வலைப்பூ. அதனால் இங்கே பதிவு செய்கிறேன்.
படித்துவிட்டு, கருத்துக்கள் - நல்லவை, கெட்டவை - இருப்பின் கூறவும். நீங்கள் அனைவரும் கூட அந்த நண்பரைப் போல் கருத்து கூறாமல் இருந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக நான் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைபவனில்லை; ஆனால், உங்களுக்கு வேலைதான் ஆக வேண்டும் என்றால், அதை முதலில் சொல்லிவிட்டால், முட்டாள்தனமாக உங்கள் பதிலுக்குக் காத்திருக்க மாட்டேன். மனுஷனுக்கு அடுத்தடுத்து வேல இருக்கு, தல!
காணொலி இணைப்பு, இங்கே.
(இரு முக்கியமான செய்திகள்:
1) கூகிளின் குழந்தையான பிளாக்ஸ்பாட்டில் பிராந்திய மொழிகளுக்கான 'டெக்ஸ்ட் எடிட்டர்' படுமோசமாக இருக்கிறது; வேறு ஒரு இடத்தில் தட்டச்சு செய்த பத்திகளை இங்கு ஒட்ட வைத்தால் 'லைன் ஸ்பேசிங்' கேவலமாக மாறிவிடுகிறது. 'ஜஸ்டிஃபைட்' என மாற்றிப் பின்னர் மீண்டும் ஒவ்வொரு வரியாக நானே இடைவெளியை மாற்ற வேண்டியிருந்தது. 'டெக்ஸ்ட் பிரேக்கிங்' ஏற்பட்டதால் அவ்வபோது எழுத்துச்சுட்டி (கேர்ஸர்) வேறு கண்டமேனிக்குத் தள்ளாடியது. இவற்றைத் தாண்டி இப்பதிவைப் பதிவேற்றம் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி.
2) இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினியை விட மட்டமாகத் தொகுக்கும் தொலைக்காட்சி நபரை நான் இதுவரை கண்டதில்லை. மிக முக்கியமாக விருந்தினராக வருபவர், தனது ஒடுக்கப்பட்ட சூழலைப் பற்றிப் பேச வரும்போது - 'வியாசர்பாடிக்கு ஆட்டோவே வராது' என்று அவர் சொல்லும் இடத்தைக் கவனிக்கவும் - அதை மிக லாவகமாகத் திசைமாற்றும் எச்சைவேலையும் நடந்தேறியதைக் கவனிக்காமல் விட முடியவில்லை.)
*****
மக்கள் வணக்கம்! எப்போதுமே ‘மக்கள் பக்கம்’ நிகழ்ச்சில சமூக ஆர்வலர்கள், சாதனையாளர்கள்,இதே மாதிரி பலதுறைல, ஒரு வித்தியாசமானவங்களை எல்லாம் நாம சந்திச்சுட்டு வந்துட்டிருக்கோம். அதேபோல இன்னிக்கு நம்ம நிகழ்ச்சில ஒருகால்பந்து வீராங்கனை, பீமாபாய், அவர்களை தான் சந்திக்கப் போறோம். வாங்க நிகழ்ச்சில அவங்கள வரவேற்த்துடலாம்.
Hello everyone! In ‘Makkal Pakkam’, we’ve been regularly meeting special people - ranging from social workers, achievers and the like from different walks of life. Similarly, in today’s program, we are going to meet a woman football sensation, Bheemabai. Let’s welcome her.
வணக்கம் பீமாபாய். எப்படி இருக்கீங்க?
Welcome, Bheemabai. How are you doing today?
நல்லா இருக்கேன்.
I am doing great, thanks.
நல்லா இருக்கீங்களா? நீங்க வந்து ஒரு கால்பந்து வீராங்கனைன்னு சொல்லியிருக்கீங்க. அதைத் தவிரவும் நெறைய விஷயங்களும் நீங்க பண்ணிட்டிருக்கீங்க. முதல்ல உங்களப் பத்தி எங்களுக்குக்கொஞ்சம் சொல்லுங்க.
Alright! You are a football player, but you have been juggling several other things as well. Please tell us a bit about yourself.
நான் வந்து பாரதி வுமன்ஸ் காலேஜ்ல பி.எஸ்.சி. மேத்ஸ் செகண்ட் இயர் படிக்கிறேன். நான் ஃபுட்பால் மட்டுமில்ல... ஹாக்கி, ஜாவெலின் இதெல்லாம் டிஸ்ட்ரிக்ட் ப்ளேயரும் கூட. ஆனாலும் ஃபுட்பால்தான் ரொம்பப் பிடிக்கும் எனக்கு. அதனால நான்ஃபுட்பால் ஆடிட்டிருக்கேன். அதுவும் இல்லாம, எங்க ஏரியால இருக்குற பசங்களுக்கெல்லாம் நான் ஃபுட்பாலும் சொல்லித்தருவேன்.
I am doing my second year BSc Math at Bharathi Women’s College. Apart from being a football mainstay, I am also a District player in Hockey and Javelin Throw. However, I like football the most. So, I play football as well as coach other students of my locality.
ஹ்ம்ம். ஒரு ஆசிரியரா கூட இருக்கீங்க. கால்பந்து ஆசிரியரா. இப்போ பாத்தீங்கன்னா எந்த வயசுல இருந்து நீங்க இந்தக் கால்பந்து விளையாட்ட விளையாட ஆரம்பிச்சீங்க?
Right. You are a teacher, a football coach now; when did you start playing football?
பன்னெண்டு வயசுல இருந்து ஃபுட்பால் விளையாடுறேன்.
I have been playing football since when I was 12.
அப்படியா? எப்புடி உங்களுக்கு இவ்ளோ ஒரு ஆர்வம் வந்துச்சு இந்த விளையாட்டுத் துறையில?
Wow, is it? Where did this inspiration in the field of sports come from?
அது வந்து… அங்க… எங்க ஸ்கூல் போயிட்டு வரும்போது பக்கத்துலயே கிரவுண்ட் இருக்கும்.
So, there is this ground on the way to my school.
ம்…
Okay?
அங்க நெறைய அண்ணங்க எல்லாம் வெளையாடிட்டு இருப்பாங்க. சில அக்காங்களும் விளையாடிட்டு இருப்பாங்க. அதைப் பாக்கும்போது, கோல் அடிக்கும்போது அப்போல்லாம், அவங்க எஞ்சாய் பண்றதப் பாக்கும்போது நம்மளுக்கும் ஜாலியா இருக்கும். அதனால, ‘சரி, இவங்கள மாதிரி நம்மளும் வெளையாடலாம்’ அப்படின்னு சொல்லித் தோணுச்சு.
The ground will be brimming with many men and a few women as well. Seeing them play and score goals, and their enjoyment after scoring, was joyful. That was when I decided, “Okay, let’s also play like them.”
ம்…
Right.
செரி சொல்லிட்டு வீட்டுல போய் சொன்னேன். அவங்க ஃபர்ஸ்ட்டு கண்டுக்கவே இல்ல. டெயிலியுமே அதையே பத்திப் பேசிக்கிட்டே இருக்கவே, செரி சொல்லி முடிவு பண்ணி அனுப்பலாம் அப்படி சொன்னாங்க. அப்பறம் ஸ்டெட்ஸ் ஃபுட்பால் கிரவுண்ட்லவந்து சேர்ந்தேன். அங்க வந்து அவங்க அதை ஒரு ப்ளே கிரவுண்ட் மாதிரி ட்ரீட் பண்ண மாட்டாங்க. அது ஒரு ஃபேமிலி மாதிரிதான் ஸ்டெட்ஸ் கிரவுண்ட். அங்கயே பிராக்டீஸ் பண்ணேன் சின்னதுல இருந்தே. நெறைய என்கரேஜ்மெண்ட் அக்காங்க, அண்ணாங்க, கோச்சஸ் அவங்க எல்லாம். அதுனால ஒரு ஒரு ஸ்டெப்ஸா தாண்டி இப்போ ஆல் இந்திய பிளேயரா வந்திருக்கேன்.
I expressed my interest to my parents. Though they ignored my words initially, they consented since I kept repeating the same thing over and over. That was when I joined Stets Football Ground. It is important to mention that it is not just a ground, but more like a family in itself. I have been playing there right from when I was young. And, all the seniors - brothers and sisters - and the coaches kept encouraging me. I progressed levels, and now am representing India.
எப்புடி இருந்துச்சு உங்களோட முதல் டிஸ்ட்ரிக்ட் லெவல் வெளையாட்டு வெளையாடும்போது?
How was your first experience of playing in a district match?
ஃபர்ஸ்டு நம்ப, வெளையாட்டுன்னாலே ஜாலியா இருக்கும். அதுவும் இல்லாம, ஹாக்கி நம்மளோட நேஷனல் கேம். அதை ஃபர்ஸ்ட்டு ப்ளே பண்ணும்போது ரொம்ப ஜாலியா இருந்துது. அதுவும் இல்லாம நம்ம சென்னை டிஸ்ட்ரிக்ட் ஆடும்போது ரொம்பப்பெருமையாவும் இருந்துது. அங்க கோல் அடிக்கும்போது ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதுனாலயே ஹாக்கி ரொம்பப் பிடிக்கும்.
To start with, playing sports is an ecstatic experience by itself. Moreover, hockey is our national game. Hence, I was naturally inclined towards the game. I felt proud to represent Chennai district in hockey matches; scoring goals for the team was interesting. I love hockey to a great extent.
இப்போ நீங்க வந்து இந்த கால்பந்து வெளையாட்டு அப்டின்னு எடுத்தா, இதுக்கான ஒரு வழி இருக்கும். இப்டிதான் நம்ம வெளையாடணும், இப்டிதான் நம்ம இருக்கணும், இதெல்லாம்தான் நாம சாப்பிடணும், இதெல்லாம் சாப்படக் கூடாது. ஏன்னா, நாம வெளையாடும்போது அது நெறைய உங்களுக்கு இது தேவ. ரொம்ப ஒடம்புல ஷக்தி இருக்கணும்.
Considering football as a sport, there are a set of guidelines, starting from rules of play to the diet regime you have to maintain to stay fit, right?
ஆமாம்.
Precisely.
சரியா? சோ அதுக்கு என்னென்ன மாதிரி சாப்பாடு எடுத்தீங்க? எப்படி பண்ணீங்க? இதோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்னு சொல்லுவாங்கல்ல… அதைப் பத்தி எங்களுக்குச் சொல்லுங்க.
Right? So, what kind of diet did you maintain? Also, can you throw some light on the rules and regulations for us?
ப்ளேயர்ஸ் எடுக்குறது வேற. ஆனா நாம வீட்டுல இருக்குறது காலைல கஞ்சிதான் இருக்கும். அதான் குடிச்சிட்டுப் போவோம் கிரவுண்டுக்கு. அப்புறம் அங்க போய் வெளையாடுவோம். வெளையாடிட்டு வந்த உடனே ஒரு முட்டை சாப்பிடணும்.
The kind of diet professionals maintain is different. But, we would drink porridge before going to ground every day. Eating an egg post-play is a good diet.
ம்…
Alright?
முட்டை சாப்பிட்டுட்டு அப்புறம் ஃபுட்டு. மறுபடியும் ஈவ்னிங் பிராக்டீஸ்க்கும் கொஞ்சம் கஞ்சி குடிச்சிட்டு, மறுபடியும் ஒரு முட்டை சாப்பிட்டாப் போதும்.
The regular morning meal comes after the egg. The evening routine is the same as well - porridge before play and an egg after play.
போதும்?
That’s it?
ஆனா ப்ளேயர்க்கான டயட் கண்டிஷன் அது கெடையாது. ஆனா நம்ம வீட்டுல இல்லாததுனால நாம இதப் பண்ணலாம்.
I must confess that this is not the diet that a player should maintain. We get what is affordable to us.
அடுத்துப் பாத்தீங்கன்னா உங்க அம்மா, அப்பா… நீங்க மொதல்ல இந்த வெளையாட்டு வெளையாடணும், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சொன்னதும் நீங்க, மொதல்ல கண்டுக்கல. பட், நீங்க பொருமையா வளர வளர எப்புடி… என்ன உங்களுக்கு ஸப்போர்ட் பண்ணாங்க? இல்ல, எப்புடி உங்களப் பாத்துக்கிட்டாங்க அவங்க?
Coming to the beginning of your interest in sports, your parents were reluctant when you told them initially. However, after you started showing tremendous growth at every stage, how have they supported you? How did they take care of you?
ஃபர்ஸ்ட்டு ஃபுட்பால்ன்னபோது அது பாய்ஸ் கேமாத்தான் தெரியும். அதோட இல்லாம, எப்போ அடிபடும்ன்னே தெரியாது ஃபுட்பால் ஆடும்போது. நான் ஃபர்ஸ்ட்டு நாள் கிரவுண்டுக்குப் போனப்பவே ரெண்டு கண்லயும் பால் பட்டுடுச்சு. ஆனாலும் நம்பளுக்குப்புடிச்ச வெளையாட்டு சொல்லிட்டு நான்கண்டிப்பா இதுலதான் இருப்பேன் அப்புடின்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். எங்க வீட்டுல ஃபர்ஸ்ட்டு வேணாம்னுதான் சொன்னாங்க. அதுக்கப்புறம், ‘சரி… பாப்பா போட்டும்’ அப்புடி சொல்லிட்டு. அப்புறம் நான் போய் வெளையாடுவேன். வெளையாடிஃபர்ஸ்ட்டு ஸ்டேட்டு அண்டர்-14 வெளையாடுனோம். ஃபர்ஸ்ட்டு நான் பன்னெண்டு வயசுலதான் ஃபுட்பால்க்கு வந்தேன். அப்புறம் ஒரு வுமன்ஸ் டோர்னமெண்ட்லாம் போயி, ஸ்டேட் அண்டர்-14 வெளையாடணும். 14 வெளையாடும்போது, அண்டர்-14 வெளையாடிட்டு, ஸ்கூல்லல்லாம் ரொம்ப ‘கப்’லாம் குடுத்தாங்க. ‘பரவால்ல பாப்பா, க்ரோத் ஆயிட்டே வர்றா’ அப்டி சொல்லிட்டு அதுலயே விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் கேர்ள்ஸ்க்கெல்லாம் ப்ராப்ளம் வந்துது. அடலசெண்ட் ஏஜ். நம்ம அத அடையும்போது ரொம்ப டஃப்பா இருக்கும். அதில்லாம ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் வெளையாடணும்ன்றப்ப, அங்க வீட்டுல கொஞ்சம், ‘பெரிய பாப்பா ஆயிட்டா, இப்ப எப்புடி ஷார்ட்ஸ் போட்டுட்டு வெளையாடுறது?’ சொல்லிட்டு நெறைய தடைகள்ல்லாம் இருந்துது. அதைப் பத்தி வீட்டாண்ட… நாங்க வேற ஸ்லம் ஏரியால இருக்குறதுனால அங்க ரொம்பப் பேசுவாங்க சொல்லிட்டும், அவங்க கவலப்பட்டாங்க. அதுக்கப்புறம் எங்களோட கோச்சஸ்லாம் வந்து பேசி, 'நம்ப சாதிக்கணும்னா சிலத தாண்டித்தான் ஆகணும்' அப்டில்லாம் சொல்லி கன்வின்ஸ் பண்ணி, அப்பியும் ஒரு 3 மன்த்து போகவேயில்ல பிராக்டிஸ்க்கு. அதுக்கப்புறம் கன்வின்ஸ் பண்ணி மறுபடியும் போயிட்டேன். போய்தான் அண்டர்-16 வெளையாடுனேன். அப்புறம், 12த், காலேஜ் அப்புடியே வந்துச்சு.
The first prejudice is imagining football as a game for men alone. Then, there is the impending risk of getting injured at any point in time during the course of a match. I got hurt in both my eyes when I first played football in that ground. However, I did not get deterred, thanks to my passion. My parents, who were hesitant towards the beginning, agreed, stating, “Let the little girl play”. I started playing at 12 years. The first major tournament was the State Under-14’s, for which the school awarded me with a cup. Parents left me to my interest seeing my growth. However, we girls face a lot of challenges once we reach adolescence. Since I had to wear shorts to play, my parents stepped back, thinking, “She’s grown up now. How can she play wearing shorts from now on?” Because we live in a slum, they were also hesitant to face the neighbors speaking about this. But then, our coaches convinced my parents, explaining “You need to overcome challenges in order to become achievers.” After three months of lull, I resumed practice and played Under-16. After that came my higher secondary and college matches.
அப்ப்டி வந்துச்சு? இப்போ வந்து நீங்க ஒரு 12 வயசுல இருந்து வெளையாட ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் அதுக்கு ஏத்த பயிற்சியும் எடுக்க ஆரம்பிச்சீங்க. இந்த பயிற்சி எடுத்ததுனால என்னென்ன பலன் இருக்கு உங்களுக்கு இந்த வெளையாட்டுல?
Ah, after that! So, you’ve been playing since you were 12, and have been practicing appropriately ever since. How has the training benefitted you and your game?
இப்போ நாங்க ஹெல்த்தியா இருக்கோம்.
It has made us healthy now.
ம்…
Okay?
அதுவும் இல்லாம, இந்த ஏரியாவுல இருந்து பசங்க வராங்க அப்டி சொல்லிட்டு. ஸ்லம்ஸ் ஏரியாவுலஇருந்தும் பசங்களுக்கு டேலண்ட் இருக்கு அப்டி சொல்லிட்டும் நாங்க நிரூபிக்கறோம் அங்க போயி. அது ஒன் பெனிஃபிட். அதுவும் இல்லாம எங்களப்பாத்து நெறைய பசங்க வளருவாங்கல்ல?
Not only that, we have been proving that people from slums - like us - have got the right talent. This is a significant output, thanks to our training. Others will be drawn in because of our accomplishments, right?
கண்டிப்பா.
Definitely.
அதுனால நான்…
So, I…
ஆமா, ஏன்னா எப்போவுமே நம்மளுக்கு வந்து இந்த விஷயம் இல்ல, அந்த விஷயம் இல்லன்னு எப்போவுமே நாம கவலப்பட்டுட்டுத்தான் இருப்போம். ஆனா, நம்மளாலயும் ஒரு விஷயம் முடியும் அப்புடின்னு நெனச்சு, நாம சாதிக்கணும் அப்டின்னு நெனைக்குறதுக்கான ஒரு உதாரணம்தான் நீங்க, இன்னும் நெறைய பேரு இருந்துட்டிருக்காங்க. அது, சோ, ரொம்ப நல்ல விஷயம்தான்னு சொல்ல முடியும். இப்ப நீங்க கால்பந்து வெளையாடலன்னா, அந்த ஒரு வெளையாட்டுல நீங்க இல்லைன்னா,என்ன பண்ணிருப்பீங்க? என்ன பண்ணப் பிடிக்கும் உங்களுக்கு, அது தவிர?
We always get bogged down with what we do not have. But, you stand testimony to the saying, “Nothing is impossible”, “Everybody can achieve great things”, etc. There are also quite a few other inspiring people as well. So I must regard this is definitely a positive sign. Talking of football, what would you have done had you not been associated with football? What do you like to do, other than playing football?
டீச் பண்ண ரொம்பப் பிடிக்கும்.
I love teaching a lot.
ம்…
Okay?
நான் ஸ்கூல்லயே எஸ்.பீ.எல்.லா இருந்திருக்கேன். க்ளாஸ் லீடர்தான் வருஷா வருஷம். அப்ப, டீச்சிங்தான் போயிருப்பேன்.
I have been School Pupil Leader during my school days. Every year, I was the class leader. So, I would have chosen to teach, naturally.
அப்போ கண்டிப்பா அந்த ஒரு ஆசிரியராப் போயிருப்பீங்க? இப்பியே நீங்க ஒரு ஆசிரியராத்தானே இருக்கீங்க? உங்களோட வீட்டுப் பக்கத்துல வந்து எல்லா பசங்களுக்கும் கால்பந்து சொல்லிக்குடுத்துட்டிருக்கீஙகல்ல? எப்புடி நம்ம கத்துக்கிட்டத மத்தவங்களுக்கும் கத்துக்குடுக்கணும்னு இந்த ஒரு எண்ணம் வந்துச்சு?
Are you saying you would have opted for the teaching profession? Aren’t you a teacher even now? You’ve been coaching football for children in your neighborhood. Where did this thought of disseminating what you’ve learned to others originate?
நம்மளே சாதிக்க முடியாத நெறைய இருக்கோம். இப்போ வந்து நான் 12த் ஸ்டேண்டர்ட்ல தான் ஸ்டார்ட்டிங்கே கத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியும் நெறைய இருக்கு சாதிக்க வேண்டியது. அப்போ பசங்கள நாம அதுக்கு முன்னாடியே அவங்களுக்கு இந்தகேமுன்னு ஒண்ணு இருக்குன்னே தெரியாது. அப்போ அவங்களுக்கு சொல்லி, அவங்கள நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் ப்ளேயராக் கொண்டுவரலாம்; அதுக்கான டேலண்ட்ஸும் அங்க இருக்கு. அதுனால அவங்களுக்குக் கோச்சிங் தரேன்.
We have a lot of people who don’t get adequate exposure. I started learning the game when I was in my 12th grade. But, it could have started even earlier. Most of the children do not even know that a game called football exists. We need to educate them and make them aware, groom them into national and international players. We have loads of unidentified talents there. That’s why I coach them.
நெறைய விஷயம் இவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிட்டிருக்கோம். இதுல பாத்தீங்கன்னா எல்லாத்துலயுமே ஆர்வம் இருக்கு, ஆனா அந்த ஆர்வத்தோட சாதிச்சிட்டும் இருக்காங்க. நம்ம மொதல்ல கால்பந்துலதானே அவங்க ஒரு சாதனையாளர் அப்டினு பார்த்தோம். ஆனா ஈட்டி எறிதலாவும் இருக்கட்டும், இல்ல ஹாக்கியாவும் இருக்கட்டும். இது ரெண்டுத்துலயும் பாத்தீங்கன்னா டிஸ்ட்ரிக்ட் அளவுல பதக்கம் எல்லாம் நெறைய வென்றுருக்காங்க. இதே மாதிரி அவங்க கிட்ட நெறைய விஷயம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன இடைவேளை.
We’ve been learning quite a lot of things from her. The most important thing to be noted is that while she is passionate about several things, she has been achieving in all of them as well. We thought initially that she is an achiever only in football, but she has also garnered a chunk of laurels at the District level in Javelin Throw and Hockey. There is more to hear from her, but before that, let’s take a short commercial break.
இந்த ஒரு சின்ன வயசுல, இவ்ளோ சாதனைகள் படைச்சிருக்கீங்க. இதுக்கான ஒரு காரணமாவும்இருக்கும். அந்தக் காரணம் அடுத்த உச்சக்கட்டத்துல இல்ல அடுத்த இதுல என்ன பண்ணணும்ன்ற ஒரு கேள்விக்குறி இருக்கும். என்ன சாதிக்கணும்னு நீங்க நினைக்குறீங்க?
You have accomplished quite a lot of records at this young age. Taking this as a stepping stone, what do you want to achieve in the long run?
இந்தியா ப்ளேயராகணும்ன்றதுதான் என்னோட ஆசை.
My dream is to become a member of the Indian team.
ம்…
Wow.
அதைத்தான் கண்டிப்பா சாதிக்கணும்னு…
I want to realize that dream…
நீங்க சாதிக்கணும்னு. தேசிய அளவுல ஒரு நல்ல கால்பந்து வீராங்கனை ஆகணும். இப்போ வந்து பாத்தீங்கன்னா கால்பந்து வீராங்கனை அப்டின்னாலே எல்லாரும் வந்து கால்பந்து அப்டின்னாலே நாம வந்து ஒரு எட்டி உதைக்குறது அப்புடின்னுதான் சொல்லுவாங்க. ஆனா இந்த வெளையாட்டைப் பத்தி கொஞ்சம் எங்களுக்கு நெறைய சொல்லுங்க. இது எப்புடி வெளையாடணும்? நீங்க சொன்னீங்கல்ல இவ்ளோ கோல் அடிச்சா இவ்ளோ, அந்த கோல்ஸ்லாம் என்னென்ன அதெல்லாம் சொல்றீங்களா கொஞ்சம்?
You are trying to achieve that, trying to become a national player. Now speaking about the game, football is known as a ball game which involves kicking and running around. Can you tell us a little bit about the game - how to play, how do you score, etc.?
ஃபர்ஸ்ட்டு கால்பந்துன்றது நம்ம எனர்ஜியோ, இல்ல நம்ம ஸ்கில்ஸ் மட்டும் இல்ல. அது ஒரு குரூப் கேம். எல்லாரோட மெண்டாலிட்டியும் அந்த டைம்ல எப்டி இருக்குறது அப்புடின்றதப் பொறுத்துத்தான் கோல் அடிப்பாங்க ஒரு டீம். அது மட்டும் இல்லாம, கோல்… கோல் வாங்குன உடனேயுமே ஒரு டீம் அப்ஸெட் ஆகக் கூடாது. திரும்பவும் கோல் திருப்பும்போது அவங்களுக்குள்ள இருக்குற கான்ஃபிடெண்ட் லெவல் அதிகமா இருக்கும். அப்ப கான்ஃபிடெண்ட் அதிகமா இருக்கவங்கதான் கண்டிப்பா ஃபுட்பால் ப்ளேயரா இருப்பாங்க. அதுவும் இல்லாம எந்த முடிவும் எடுக்கணும், எடுத்து அதைச் செயல்படுத்துறவங்கதான் கண்டிப்பா ஃபுட்பால் ப்ளேயரா இருப்பாங்க.
First of all, football is not about our energy and skills. It is a group game. The mentality of the team as a whole on that particular match day decides how a team plays and scores. More importantly, when opponents score a goal, the team should not get upset; how a team maintains its confidence level to score back decides the game. In essence, football players are more confident. Also, football players are people who have the ability to take quick decisions and make them actionable.
எப்டி இவ்ளோ ஒரு நம்பிக்கை, இவ்ளோ ஒரு ஆர்வம் எடுத்து இவ்ளோ விஷயங்கள இந்த ஒரு சின்ன வயசுல சாதிச்சிட்டு வந்துட்டிருக்கீங்க?
How do you motivate yourself with confidence and passion to achieve consistently at this young age?
நான் வந்து 12த்துலயே ஸ்டெட்ஸ் கிரவுண்டுக்குப் போனதுனால அங்க வெறும் ஃபுட்பால் மட்டும் சொல்லித்தர மாட்டாங்க.
When I joined Stets Ground in my 12th grade, they did not coach me just on football.
ம்…
Then?
அதுகூட நெறைய ஃபேமிலி கூட எப்டி இருக்கணும், சொசைட்டில எப்டி இருக்கணும், சொசைட்டிக்கு எப்டி நம்ம யூஸ்ஃபுல்லா இருக்கணும்.
They also teach how one should behave in a family, with the society, and how to be a useful part of the society.
ம்…
And?
நம்ம எப்டி நம்ம டெய்லியும் செல்ஃப் மோட்டிவ் பண்ணணும் அது எல்லாமே சொல்லித் தருவாங்க.
They also tell us how to keep ourselves self-motivated daily.
ம்…
Okay?
அது மட்டுமில்லாம எல்லா லீடர்ஸயும் உருவாக்கிட்டிருக்காங்க. இனிமேட்டும் உருவாக்குறாங்க.
In addition, they have been creating leaders. They will keep doing that.
ம்…
Mhmm.
அதுனாலதான் இப்டி, இந்த லெவலுக்கு நாங்க வந்துருக்கோம்.
That’s the reason we are able to perform at this level.
இப்போ நீங்க வந்து தேசிய அளவுல ஒரு கால்பந்து போட்டியில வெற்றியாளரா இருக்கீங்கன்னா அதுக்கடுத்து என்ன பண்ணணும்னு நீங்க நெனைப்பீங்க?
What are your next steps, now that you are a national football player?
அதுக்கடுத்து ஒரு நல்ல பொசிஷனாகி நம்ம ஸ்லம் அப்டின்ற ஒரு வார்த்தைய எடுக்கணும்ன்றதுதான் எங்க எல்லாரோட நோக்கமும்.
Reaching a respectable stature and eradicating the word “slums”, are our long-term ambitions.
ம். இப்போ நீங்க ஏன் அந்த ஸ்லம்ன்ற வார்த்தைய எடுக்கணும்னு ஆர்வமா இருக்கீங்க?
Interesting. Why do you emphasize on the idea of removing the word “slum”?
வியாசர்பாடிக்கு ஆட்டோன்னாலே வராது. அது.. அது ஏன்னு தெரில, அந்த ஸ்பெசிஃபையான எடத்துக்கு மட்டும் வராது. ஆட்டோவே வராது அப்டின்றப்ப, அப்ப அதுல ஒரு நல்லவங்க கூட இல்லையா அப்டின்றதுதான் கேள்வியே. அத மாத்துனாதானே எங்க…
Not even an auto comes to Vyasarpadi. I… I just don’t know why, but autos do not come to that specific place. If this is the case with an auto itself, it raises the question, “Are there no good people in the locality?” Changing that thought will…
கண்டிப்பா.
Definitely.
சொசைட்டி நல்லா இருக்கும் அதுனால.
… be a good sign for the society.
இதுக்காக ஒரு விஷயம் சாதிக்கணும் அப்டின்றது வந்து எல்லாருக்கும் இருக்காது. சோ, அதுக்கேஅந்த ஒரு பெரிய சந்தோஷம்ன்னு சொல்லலாம் உங்ககிட்ட. இதுக்கடுத்து நீங்க வந்து இந்த கால்பந்துல, நீங்க வந்து ஃபார்வேர்டா, பேக்வேர்டா?
Not many people will have the drive to achieve, keeping in mind the bigger social cause. I appreciate you for that vision itself. So now, in football, do you play as a forward or a backward?
பேக்வேர்ட். டிஃபன்ஸ் ஆடுறோம்.
Backward. We are defenders.
டிஃபன்ஸ்னா என்னது, அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.
What is 'defence'? Can you explain?
டிஃபன்ஸ்னா அவங்க நம்ம மேல கோலடிக்காம பாத்துக்கிட்டோம். அதுவும் இல்லாம ஃபார்வேர்ட் வெளையாடுறவங்களுக்கு நெறைய எங்கரேஜ் பண்ணணும்.
Defenders are the ones who prevent the opposition from scoring goals. We create scoring opportunities for the forwards and encourage them.
ம். இப்போ வந்து இந்த கால்பந்து போட்டியே நீங்க பாத்துருப்பீங்க நெறைய தொலைபேசியிலயும் நெறைய இந்த மாதிரி கேம்ஸ் எல்லாம் வெளையாடுறது பாத்துருப்பீங்கல்ல, யூட்யூப் அந்த மாதிரி. அதுல உங்களுக்கு ரொம்பப் பிடித்த வீராங்கனை யாரு?
Nice. You would’ve seen a lot of these mobile games and other such football videos on YouTube. Who is your favorite woman player?
வீராங்கனை இல்ல, வீரர்தான்.
It’s not a woman, it is a man.
வீரரா? வீரங்கனை இல்ல. வீரர், ஓகே. ம்.
A male? Not a woman, okay. Interesting.
அவரு வந்து பூட்டையா. நம்மளோட முன்னாள் கேப்டன் அவருதான், இந்தியா டீமோட. அவரோடகிராமம் ரொம்பச் சின்னது ஆனா அதுல இருந்து அவரு அவ்ளோ பெரிய ப்ளேயர் ஆனாரு. அவுங்கரோடே கரடு, முரடா இருக்கும் அப்டி சொல்லுவாங்க அவரு இருக்க ப்ளேஸ்ல. இப்போ அவரு அவ்ளோ பெரிய ப்ளேயர் ஆகி அந்த ப்ளேசியே மாத்திட்டாரு. அதனால அவர ரொம்பப் பிடிக்கும். அதுவும் இல்லாம அவரு கேமும் செம்மையா இருக்கும்.
He is none other than (Baichung) Bhutia, India’s former captain. He came from a very small village but rose to fame. We’ve heard stories about the bad road conditions in his place; now after becoming a star, he has improved the place. I like him for that, and also because his game is phenomenal.
ம்…
Mhmm…
ஒருத்தருக்கு லீடர்ஷிப் குடுக்குறதுன்னா ஒண்ணும் அது சாதாரணமாத் தர மாட்டாங்க. அவ்ளோ எஃபோர்ட், ஹார்ட்வொர்க் அதெல்லாம் பண்ணி அவரு நம்ம இந்திய டீமோட கேப்டனா இருக்காரு. அதுனால அவரோட கேம் எல்லாமே அவரப் பிடிக்கும்.
A person cannot become a leader overnight, it is not that easy. He has put in a lot of effort and hard work and has been our captain. That’s why I like him.
சில பேருல்லாம், சில பசங்கல்லாம் கொஞ்ச நாள் வெளையாட்டுல சேருவாங்க, போவாங்க. ‘எனக்கு இந்த ஷூஸ் செரியில்ல, அந்த பேக் செரியில்ல’ அப்டில்லாம். பட், நெறைய பேருக்கு வெளையாட்டுல சேர்ந்தா மட்டும் போதும்னு அப்டின்னு இருக்குறவங்க. இந்த நிகழ்ச்சியப் பார்க்குற நெறைய பேருக்குத் தெரியும் நம்மளுக்கு வந்து இது வேணும், அது வேணும்ன்னு வெச்சுச் சாதிக்கணும். நம்ம சாதிக்கணும்னா எப்படியாது அத வந்து சாதிச்சிடணும் அப்டின்ற அளவுல. இப்போ வந்து நீங்க ஃபுட்பால், கால்பந்து இதுல வந்து இப்போ இந்தியா அளவுல ஒரு நெறைய கோப்பைகள் வென்றுருக்கீங்கல்ல? உங்களோட மொதல் மேட்ச் என்னது?
There are people who join coaching in an impulse, but quit because of trivial reasons, like “My bag is not good”, “The shoes aren’t comfortable”, and so on. However, there are also people who desperately want to become sportspersons. Those who are watching this program now know what they want. They have the drive to achieve their goals somehow. Now, you have won a lot of medals at the national football arena, right? Which was your first match?
என்னோட மொதல் மேட்ச் வந்து ஆல் இந்தியா.
My first match was an All India Tournament.
ம்…
Mmm.
குவாலியர் போய் வெளையாடுனோம். அப்போ வந்து தமிழ்நாட்டுல இருக்க மூணு டீம்தான் அதுல ப்ளேஸ் ஆனதே. நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டு வெளையாடுனோம். ஆனா ஈசியாதான் இருந்துது மேட்ச்சு. அன்னிக்கு எங்களோட நாளில்லாததுனால நாங்க தேர்ட் ப்ளேஸ் வந்துட்டோம்.
We went to Gwalior for that match. Only three teams from Tamil Nadu had qualified. We played well and tried our best. Though the match was easy, it wasn’t meant to be our day. We ended up in the third position.
ஏன் உங்களோட நாள் இல்லைன்னு சொல்றீங்க?
How do you reckon it was not your day?
அதான் டீம் ப்ளேயர்ஸ் எல்லாரோட மைண்ட்செட்டும் ஒரே மாதிரி இருந்தாத்தான் கோல் போட முடியும். ஒரு பொண்ணுக்கு இஞ்சூரி ஆயிட்டதுனால டீம் எல்லாம் அது மேலயே கான்சென்ட்ரேஷன் ஆயி ஒரே மேட்ச்தான் செமிஃபைனல்ல, அந்த மேட்ச்வின் பண்ணா ஃபைனல் டைரக்டா போயிருவோம். அந்த மேட்ச் லூஸ் பண்ணதுனால தேர்ட் அண்ட் ஃபோர்த்துக்கு ஆடுனோம்.
So, we can score goals only if the mindset remains in sync throughout the team. On that day, one of our teammates got injured and our concentration got distracted. It was the semi-final game, and we could’ve gone to the finals had we won that one. However, we lost and had to remain contented, playing for the third-fourth place game.
அப்புடியா?
Oh, is it?
அப்புறம் தேர்ட் ப்ளேஸ்.
Yes, and we came third.
அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனாலும், அந்த நேரத்துல இதுலேருந்து என்ன தெரியவருதுன்னு பாத்தோம்ன்னா, எந்த நேரத்துலயுமே ஒருத்தருக்கு எதாவது ஆனாலுமே வந்து ரொம்பகஷ்டம். டீம் வொர்க். தட் இஸ், நாம ஒற்றுமையா இருந்து என்ன பண்ணாலும் அப்போதான் நாமஜெய்க்க முடியும் அப்புடின்னீங்க. நெறைய விஷயம் நாம பீமாபாய்கிட்ட பேசித் தெரிஞ்சிக்கிட்டிருக்கோம். இன்னும் இதே மாதிரி நெறைய விஷயங்கள் சொல்லப் போறாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒருசின்ன இடைவேளை.
Wow, this is fabulous. One important takeaway here is that it is not easy even if one person in a team gets hurt. Teamwork, that is, sticking together is important to win a game, according to you. We’ve been getting to know a lot of things from Bheemabai. There is more to discuss. But before that, let’s take a short, commercial break.
இப்போ ஆல் இந்தியா லெவல்ல மேட்ச் போய்ட்டு வந்தீங்கல்ல? அதைப் பத்திச் சொல்லுங்க கொஞ்சம்.
You told us that you went for the All India match, right? Can you describe your experiences there?
அப்போ நாங்க குவாலியர்ல தான் நடந்துது அந்த மேட்ச்சு. வுமன்ஸ் எல்லாரும் ஆடுனாங்க. வேற வேற ஸ்டேட்ல இருந்து வந்தாங்க. ஆனாலும் சவுத் சோன், அதான் தமிழ்நாட்டுல இருக்க மூணு டீம்தான் ப்ளேஸ் பண்ணது. அதுல தேர்ட்தான் மெட்ராஸ் யுனிவர்சிட்டி நாங்க.
The match was conducted in Gwalior. It was a women’s game. Teams had come from different states. From South Zone, three teams represented Tamil Nadu, out of which one was our team from the Madras University.
இப்போ மெட்ராஸ் யுனிவர்சிட்டி அளவுல ஒரு… என்ன சொல்றது… ஒரு பெண் கால்பந்து வெளையாட்டு இருக்குறதுக்கு எவ்ளோ முக்கியத்துவம் குடுக்குறாங்க?
How much of an attention is being paid to women football in Madras University?
அவுங்க ஒரு பெண் கால்பந்து வெளையாட்டுக்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் தருவாங்க.
They provide us with all necessities for women’s football.
ம்…
…
அது மட்டுமில்லாம, நல்லா என்கரேஜ் பண்ணியும் அனுப்புவாங்க, வெளிய போகும்போது மேட்ச்சுக்கு.
They make sure to encourage us, whenever we go out and represent the University.
இப்போ நீங்க வந்து சொன்னீங்க, இந்த மாதிரி ஆல் இந்தியா மேட்ச்லாம் போனீங்க அப்டின்னு. நம்ம இந்தியால எவ்ளோ அளவுக்கு இந்தக் கால்பந்துப் போட்டி பெண்களுக்குச் சாதகமா இருக்கா, இல்ல எப்டி இருக்கு?
You’ve played at the All India level. What do you think is the state of women’s football in India - is it positive, encouraging? What do you think?
கிரிக்கெட் அளவுக்கு எல்லாம் இல்ல ஃபுட்பால். மென்ஸுக்கே இப்போ ஐ.எஸ்.எல்.ன்ற ஒண்ணு வந்தப்பதான் ஃபுட்பால்ன்ற கேம் இந்தியல இருக்குறதே பலபேருக்குத் தெரிய வந்துது. இனிமேட்டுதான் வுமென்ஸுக்கு வருவாங்க.
Not on par with cricket. Even men’s football got adequate attention only after the ISL came into the picture. Women’s will follow suit.
கரெக்ட். அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்னு சொல்லலாம். ஏன்னா, நெறைய விஷயங்கள் இப்போதான் நாம வெளி எடுத்துக்கொண்டு வரோம். கண்டிப்பா இந்தப் பெண்மணிகளுக்கு இந்த ஒரு அடையாளம் வரணும்னு நெனைக்குறீங்க. நீங்க என்ன நெனைக்குறீங்க இதைப்பத்தி, இந்த அடையாளம் வரது?
Correct, that’s a very important point. We’ve been bringing a lot of things to the limelight only recently. What are your thoughts on women players getting an identity through the sport?
அது கண்டிப்பா, அந்த அடையாளம் சீக்கிரம் வந்தாத்தான் நெறைய ப்ளேயர்ஸ் உருவாவாங்க. அதுவுமில்லாம நம்ம ஃபுட்பால்ல வந்து, வேர்ள்ட் லெவல்ல ரொம்ப லாஸ்ட் பொசிஷன்ல இருக்கோம். அதில்லாம நாம ஃபர்ஸ்ட்டா வர நெறைய சான்ஸஸ் இருக்கு.
That is very important because only then, the number of interested sportswomen will increase. Another aspect to be noted is, we are languishing at the bottom of the football rankings. There are opportunities for us to top the rankings.
நெறைய வாய்ப்புகள் இருக்கு. கண்டிப்பா. ஏன்னா, இதைப் பாக்குற நெறைய பெண்மணிகளா இருக்கட்டும், இல்ல நீங்களே சொன்னீங்க உங்க வியாசர்பாடில நெறைய பேரு வந்து கால்பந்து வெளையாட்டுல நெறைய சாதனையாளர்களா இருக்காங்க, நெறைய சாதனைகள் படைச்சிட்டும் இருக்காங்க. கண்டிப்பா அவங்க எல்லாரும், நீங்க எல்லாரும் சேர்ந்து கண்டிப்பா ஒரு பெரிய அளவுல சாதனை படைக்கணும்னு நான் சொல்லுவேன். இது தவிர பாத்தீங்கன்னா வந்து உங்களுக்கு யாரு ரொம்ப தூக்கிவிட்டது உங்க வாழ்க்கையில, இந்த கால்பந்து விளையாட்டுல?
There are chances, yes. People who are watching this program, and those from Vyasarpadi - those you were mentioning, and a lot of other achievers… they need to come together to accomplish something huge, in my opinion. Having said that, who has been the pillar of support in your life, and in your football career?
அந்த ஸ்டெட்ஸ் கிரவுண்டு சொன்னேன்ல? அதுலதான் ஒரு ஃபேமிலி மாதிரி நாங்க எல்லாரும். அதுல வந்து ஷக்தீஷ்வரின்னு ஒரு அக்கா, அவங்க வந்து இண்டர்நேஷனல் ப்ளேயர்.
The Stets Ground I was talking about… it is a family. Shaktheeshwari akka, who played at the international level…
ம்.
Mmm.
அவங்க தான் வியாசர்பாடியில வந்துட்டு ஃபர்ஸ்ட்டு வுமன். ஃப்ரான்ஸ்க்கு போய் விளையாடுனாங்க.அவங்கல்லாம் அப்போ காலேஜ் படிச்சிட்டிருந்தாங்க. அப்போதான் நான் புதுசாச் சேர்ந்தேன். அப்போ அவங்கள எல்லாம் பாக்கும்போது நம்மளுக்குநெறைய தோணும். ‘இவங்கல்லாம் சாதிச்சிருக்காங்களே, நாமளும் சாதிக்கணும்’ அப்டின்னு சொல்லிட்டு. அது மட்டுமில்லாம திலீபன், தியாகு அந்த மாதிரி நெறைய அண்ணாங்க அப்போ ஸ்வீடனும் போனாங்க.அப்போ ‘அவங்க ஸ்வீடன்லாம் போய்ட்டுவந்தாங்களே’ சொல்லிட்டு நெறைய ஆசைங்கல்லாம் இருந்துச்சு. அவங்களும் ‘நாங்களே இந்த லெவலுக்கு வந்துட்டோம், நீங்க நல்லா முயற்சி பண்ணீங்கன்னா கண்டிப்பா ஒரு ப்ளேஸ் நம்ம இந்தியாக்காண்டி ஒண்ணு சாதிச்சோம்ன்ற மாதிரிபண்ணலாம்’ அப்டி சொல்லி…
… she was the first woman football player from Vyasarpadi. She went as far as France to play football; she was in her college days at that time. That was when I joined for practice. I got inspired by them, thinking, “Even I must achieve something big as them.” Furthermore, Dileepan, Thiyagu, and many other annas also played at Sweden, triggering our enthusiasm. They kept saying, “We’ve reached this level; even you can achieve something for the country, provided you try harder.”
சொன்னாங்க.
They told that?
சொன்னாங்க.
Yes, they did.
உங்களுக்குக் கூடப் பொறந்தவங்க யாராவது இருக்காங்களா?
Do you have siblings?
இருக்காங்க. அண்ணா.
Yes, a brother…
எவ்ளோ பேரு?
How many?
ரெண்டு அண்ணா. ஒரு அக்கா.
Two brothers and a sister.
ரெண்டு அண்ணா, ஒரு அக்காவா? அவங்க இந்த மாதிரி எதாவது வெளையாட்டுல சாதனை படைச்சிட்டிருக்காங்களா?
Two brothers and a sister? Have they been achieving milestones in some sport as well?
அண்ணா ஃபுட்பால் ப்ளேயர். அதுனாலதான் நானும் ஃபுட்பால் சேர்ந்தேன்.
My brother is a football player; that’s how I got inclined towards football.
அப்படியா? அப்போ அண்ணா என்னென்னல்லாம் உங்களுக்குச் சொல்லிக் குடுத்துருக்காரு?
Is it? What has your brother taught you?
அந்த ஸ்வீடன்… வியாசர்பாடியில இருந்து ஒரு டீம் ஸ்வீடன் போனப்ப அண்ணாவும் ஒருத்தர் அந்த டீம்ல. அப்போ அங்க வெளிய போயிட்டு வரும்போது அவங்க சொல்லுவாங்க, ‘ஸ்வீடன்ல வந்து அந்த இந்தியா ஃப்ளாக் ஹாயிஸ்ட்டிங் பண்ணும்போதே,அவ்ளோ பெருமையா இருந்துது’ அப்டி சொல்லி. ‘நம்ம டைரெக்டா எந்த டீமும் போனதில்ல. வியாசர்பாடில இருந்துதான் ஃபர்ஸ்ட்டு டீம் போச்சு, அப்டின்றப்ப அது ரொம்பப் பெருமையா இருக்கும்’ அப்டி சொல்லுவாங்க.
My brother was the team that played at Sweden. He used to tell me how proud it was to see the Indian flag being hoisted. “No other team has represented the country at this level, our Vyasarpadi team is the first; it is a pride”, he would say.
ம்.
Mmm.
கேம விட்டுடக் கூடாது. நம்ம கேம் அப்டி சொல்லுவாங்க அடிக்கடி.
He also would tell, “We should not forget this game. This is our game.”
அப்போ வீட்டுலயும் உங்கள வந்து, மனதளவுல வந்து பயிற்சி குடுத்துட்டிருக்காங்க. அதேபோல உங்களோட கோச்சஸ், உங்களோட ஆசிரியர்கள் எல்லாருமே வந்து உடலளவுல இந்த விளையாட்டுக்கான பயிற்சிகளைக் குடுக்குறாங்க. ரெண்டு எடத்துலயுமே நல்ல பயிற்சி இருக்கு உங்களுக்கு. உங்கள நெறைய விஷயங்கள் ‘பண்ணுங்க. இப்டி பண்ணா நல்லாயிருக்கும், அப்டி பண்ணா நல்லாயிருக்கும்’ன்னும் சொல்றாங்கல்ல? ரொம்ப நல்லாயிருக்குல்ல… இந்த நிகழ்ச்சி பாத்தீங்கன்னா நெறைய மக்கள் பாத்துட்டிருப்பாங்க. அவுங்க எல்லாருக்கும் நீங்க எதாச்சும் சொல்லணும்னு ஆசைப்படுறீங்களா?
So you have been getting the psychological impetus from your family and physical training from your coaches and mentors. The training seems to be two-fold. It is good to know that there are people who keep pushing your limits, encouraging you to do more and more. Isn’t this great? So, what do you want to say to the viewers who are watching this programme?
கண்டிப்பா சொல்லணும். எல்லாருமே ஃபுட்பால்ன்ற ஒரு கேம வந்து ரொம்ப டஃப்பான கேம்ன்னு நெனைச்சுட்டிருக்காங்க. ஆனா அதுதான் ஈசியஸ்ட் கேம். மனசாலயும் சரி, ஒடம்பாலயும் சரி ஃபிட்டா இருக்குறவங்கதான் அத ஆட முடியும். அதனால ஃபுட்பால் மட்டுமில்ல, எல்லா கேம்ஸ்லயும் கேர்ள்ஸ் முன்னாடி வரதுக்கு நீங்கதான் காரணமா இருக்கணும். அதனால எல்லாருக்கும்… அதுவுமில்லாம பசங்களும் அதுக்கேத்த மாதிரி அம்மாக்கு, அம்மா அப்பாக்கு, ஃபேமிலிக்கு ஒரு நம்பிக்கை ஊட்டிட்டே இருங்க அடிக்கடி. அப்போதான் அவங்களுக்கும் உங்க மேல ஒரு நம்பிக்கை வந்து நம்ம வேர்ள்ட ஒரு நல்ல நெலமைக்குக் கொண்டு போக முடியும்.
Definitely, there is a lot to say. People misconceive football as a tough sport, but it is not. It is the easiest game. People who are fit - mentally and physically - are the only ones who can play this game. You should be the reason for more and more girls to want to play football. Even the boys should instill hope and confidence to their parents and families very often. Only then will they have trust in you, and this is how we could make this world a better place.
ரொம்ப அருமையான விஷயம் சொன்னீங்க பீமாபாய். ஏன்னா, இப்போ இருக்குற காலகட்டத்துல நெறைய பேருக்கு வந்து மதிப்பு, மரியாதை எல்லாமே இப்போ இருக்குற பசங்களுக்குத் தெரியல. ஆனா நெறைய பேரு கத்துக்கிட்டும் இருக்காங்க. மாறுறாங்க. காலம் போக்குற வழியில நெறைய மாறணும்ன்னும் சொல்லிருக்காங்க. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. உங்க கிட்ட பேசுனதுல ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ரொம்ப நன்றி.
You’ve told some enlightening words, Bheemabai; because, in today’s scenario, not many children know the importance of values and respect. On the other hand, there are people who learn these things and change. With time, the change should be profound. It’s been a pleasure talking to you. Thank you very much.