பேருந்தினின்று இறங்கியவுடன்
அந்த ஊர் தன்
சொந்த ஊரா எனும் கேள்வி
மண் வீதியில் ஓடி விளையாடிய
கால்கள்
சிமெண்ட் சாலையில் மெல்ல நடந்தன
கால வேகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினூடே
தொலைத்த அடையாளம் தேடி
சட்டென எங்கிருந்தோ வெளிப்பட்ட
குழந்தையொன்று
சிரித்தபடியே வழிகாட்டியது;
வீட்டில் அம்மா அப்பாவைத்
தவிர
அனைத்தும் புதிதாய்த் தெரிந்தன;
தோட்டத்தில் சுள்ளெனக் கொளுத்திய
வெயில்
வெட்டப்பட்ட தென்னை மரத்தினை
– இவன்
சிறுநீரூற்றி வளர்த்த மரத்தினை
– நினைவூட்டியது.
பள்ளிக்குச் சென்றபோது மனத்தில்
இனம்புரியா உற்சாகம்
துள்ளிக்குதித்த இதயத்துடிப்பைச்
சுமந்தபடி
உள்சென்றவனுக்குப் பேரிடி
சிரிக்கும் ஆசிரியப் பெருமக்கள்
கூக்குரலிடும் மாணவர்கள்
”அவர்கள் இப்போது இல்லை;
காலம் மாறிவிட்டது” சொன்னது
குழந்தை
கணினி கற்பித்துக் கொண்டிருந்தது,
52 எந்திரங்கள் கவனித்துக்
கொண்டிருந்தன
வகுப்பறையெனும் மயானத்தில்
உளம் சிறுத்து – வெயிலில்
முகம் கறுத்து, முற்றும்
வெறுத்துச்
சோர்வாய் நின்றவன்
“நல்லா இருக்கியாய்யா?” எனும்
குரல் கேட்டுத் திரும்பினான்
வழிந்த எண்ணெய்யும் கிழிந்த
சேலையுமாக
காரைப்பல் தெரியச் சிரித்தாள்
பள்ளி ஆயா,
“கொழந்ததான் கூட்டி வந்தானா?”
சிரித்தது குழந்தை ஆயா கேட்டவுடன்;
அன்னியமாய்த் தெரிந்த சுற்றுப்புறம்
அன்னியோன்யமானது அப்புன்னகையால்!
உடன் வந்த குழந்தைக்குப்
பாதையனைத்தும் அத்துப்படியாய்த்
தெரிந்தது
ஆச்சரியத்துடன் அதனிடமே கேட்டான்
“உன் பெயர் என்ன?” என்று
“நினைவுகள்” என்றது.
12th tamil book la sethurlam _/\_
ReplyDelete~ Ippadiku Giri enbavarin theevira rasigan
Ada paavi. Andha alavuku worth illaye daa !!! Rasigan it seems. Lol dei. But thanks for the read. Keep following !
DeleteNandri nandri !!
ReplyDeleteமாறாத எளிய மனிதர்கள் சிலர் இருப்பதாலேயே அன்பும் கரிசனமும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.அருமை...கை பிடித்து வந்த குழந்தை நினைவுகள் என்று முடித்திருப்பது அருமை...நினைவுகளை குழந்தை மாதிரி போற்றுபவர்களாலேயே இன்னும் உலகம் வாழ்கிறது...வாழ்த்துக்கள்..கவிதைக்கும் சிந்தனைக்கும்...
ReplyDeleteThanks a lot maa !
DeleteNothing Sweeter thn memories :) Worth Reading bro :) Nice one :)
ReplyDeleteThanks bro. Glad you liked it. Keep following !
Delete😶 Wonderful!!!
ReplyDelete_/\_
Thanks a lot daa !
DeletePresident jii sema:)
ReplyDeleteVera level...
Thank you daa !! :D
Deletenice da
ReplyDeleteThanks a lot dude ! :D
Delete