முற்றும்
துறக்க முயன்று உலகின்
டாம்பீகச்
சட்டையைக் கழற்றி நிர்வாணமாய்க்
கண்
மூடுகிறான் அவன்
இமைகளுக்குள்
அகப்படுகின்றன கருவிழிகள்
அடைந்து
தவித்துத் தடுமாறும் விழிகள்
தட்டித்
திறக்க முயல்கின்றன
இமைக்கதவுகளை
இறுக
மூடிய இமைகளுக்குள்
கருவிழி
உறங்குமா? விழித்திருக்குமா?
எனில்
உறக்கமே
மாயையன்றோ?
கேள்விக்
கணைகள் மூளையைத் தாக்க
விழிக்கிறான்
முற்றும் துறந்தவன்
கருவிழியை
அடைக்க விருப்பமின்றி
இமை
மூடாது, கண்
துஞ்சாதிருக்கப்
பருகுகிறான்
அரைப்புட்டித் தண்ணீர்
புட்டியில்
அடைபட்டிருந்த நீருக்கு வாய்த்தது
ஒன்றரை
நொடிச் சுதந்திரம் மட்டுமே
உடலுக்குள்
அடைகிறது, அரைகிறது
நீரையும்
துறக்க முயல்கிறான்
சிறுநீராய் – அதற்குத்
தேவை
என்னவோ மேலும் சற்று நீர்தான்!
எனில்
துறத்தலும் பொய்யன்றோ?
அட. . 2019ல் ஞானி ஒருவர் தோன்றி விட்டார் 🤗🤗🤗😂😂😂😂
ReplyDelete