Saturday, February 27, 2016

எண்ண ஓட்டங்கள்

மௌனமே மொழியாய் மாற
சலனங்கள் சத்தமாய்ச் சிரிக்க
வாழ்க்கையே விட்டு விலக
நடைபிணமாய் நிற்கிறேன் நான்

கரையும் காலமும்
நிறையும் நினைவுகளும்
மறையும் மாந்தர்களும்
ஆழமான ஆசைகளும்
இவையும் இன்ன பிறவுமாய்
நகரும் நாட்கள்

நீடிக்காத நொடிகளுக்கிடையே ஓடும்
ஆயிரமாயிரம் கால்களுக்கிடையே
நசுங்கும் மனிதம்;
பொறுக்க மாட்டாமல் புழுங்குகின்ற
அத்துணை உயிர்களுக்கும்
தனிமையே உற்ற தோழன்

பேசும் பேச்சு உணர்வின் உச்சமாகிறது
எழுதும் எழுத்து எச்சமாய் நிற்கிறது
காலத்தின் கட்டளையால் இவையனைத்தும்
மறக்கப் படுமெனில்
அமைதியே ஆழப் படரும்;
சாந்தமே சரியெனப் படும்.

8 comments:

  1. புரியாக் கவிதை...பெரிய ஆளாயிட்ட....கலக்குடா...தத்துவம் மாதிரியும் இருக்கு. புரியர மாதிரியும் இருக்கு..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Apdiyaa?? Periya aalu ellaam illa. Unaku yeppavum kozandha dhaan. Thanks a lot maa !!

      Delete
  2. Peace is all that is worth it :)

    Good one da.

    ReplyDelete