Sunday, September 27, 2015

மடை திறக்கும் நினைவுகள் – 2

           எழுத்து தரும் உன்மத்த நிலை எழுத்தாலேயே வர்ணிக்க இயலாதது. முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு டமிலைப் பேசுமொழியாக மட்டுமே உபயோகித்தவர்கள், முறையான ‘தமிழ்கற்க ஆசையாக இருக்கிறது என்று முகநூலில் பதில் போடும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. மேலும் நான் மனதிற்குள் வைத்துப் பூட்டிய பல்வேறு எண்ணங்களின் தொகுப்பாக உனது எழுத்துகள் தோன்றுகின்றனஎனும் விமர்சனம் கிடைக்க முந்தைய ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். “எழுதி என்னத்தடா பெருசா சாதிக்கப் போற?என்ற வைதலுக்கும், “எலக்கியம்னா என்னன்னு தெரியுமாவே உனக்கு?என்ற கடினமான கேள்விக்கும் ஒரு பதில் கிடைத்துவிட்டதாகவே உணர்கிறேன்.

     மூன்று மாதங்களில் இருபதைக் கடக்க இருக்கும் இந்த ஆறடி மனிதனின் ஒவ்வொரு நொடியையும் ஏதேனும் ஒரு வகையில் ‘நினைவுகள்ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைச் சொல்லியும், எழுதியும் மாளாது என்றாலும், இந்த இயலாக் காரியத்தைச் செயல்படுத்துவதே எனது தற்போதைய நோக்கமாகத் தோன்றுகிறது.

                            **********

     ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்ட. நீயா சாப்பிடமாட்ட? இன்னும் என்ன ஊட்டிவிடணும்னு அழுகை?என்று குழந்தையை அடிக்கும் தாய்மார்கள் வேற்றுலகவாசிகளாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்கள். இன்றும் நான் கல்லூரி விடுமுறையில் வரும்போதெல்லாம் எனக்கு என் அம்மா உணவு ஊட்டிவிடுகிறார். இதைச் சொல்வதில் எனக்கு எவ்வித வெட்கமும் இல்லை. ஆனால் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.

     நான் எல்.கே.ஜியிலிருந்து ஐந்தாவது வரை படித்த பள்ளியில் தினம்தினம் கொடுக்கும் வீட்டுப்பாடங்கள் பற்றிய குறிப்புகளை ‘டைரியில் எழுதி, பெற்றோரிடம் கையொப்பம் வாங்கிவரச் சொல்வார் அந்தந்த வகுப்பாசிரியர்/ஆசிரியை. ஒன்றாம் வகுப்பில் ஒருநாள் அம்மாவிடம் கையெழுத்து வாங்க மறந்து விட்டேன். “அதுசரி! புள்ளயத் தூக்கி வெச்சுக் கொஞ்சிச் சோறூட்டத் தெரியுது. கையெழுத்துப் போடணும்னு நெனப்பில்லையா உங்கம்மாவுக்கு?என்று நக்கலாக அதட்டினார் ஆசிரியை. இவருக்கு எப்படித் தெரியும் என்ற நினைப்பு குடைந்துகொண்டேயிருந்தது. பின்பு அம்மாவே சொன்ன பிறகுதான் தெரிந்த்து, பையனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே, தான் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையயும் இறக்கிஅவனைச் சுயச்செயல்பாட்டில் சிறக்க வைத்த பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டிதான் அந்த ‘அண்டர்கவர் உளவாளிஎன்று.

                            **********

     ரேங்க் கார்டு டேஎன்று ஒரு திருவிழா வைப்பார்கள் வருடத்திற்கு இருமுறை (காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் முடிவில்). மாணவர்களைப் பொறுத்தவரை அது ‘வத்தி வைக்கும் நாள்’ (’போட்டுக் கொடுக்கும் நாள்என்றொரு திருநாமமும் உண்டு). பள்ளி மாணவர்கள் அனைவரும் காலை எட்டரை மணிக்கு வழக்கம்போல வகுப்புக்கு வந்துவிட வேண்டும். பெற்றோர் (அம்மா, அப்பா, தாத்தா யாரேனும் ஒருவர்) 9 மணிக்குமேல் அனுமதிக்கப் படுவார்கள். அவர்கள் வந்த்தும் பிள்ளைகளின் நடத்தை மற்றும் படிப்பைப் பற்றிப் பாரபட்சமே பார்க்காமல் கழுவிக்கழுவி ஊற்றுவார் ஆசிரியர். பெரும்பாலான பெற்றோர், “தயங்காம அடிங்க. நாங்க ஒண்ணும் சொல்லமாட்டோம். கழுத, படிக்கத் துப்பில்ல; திமிரப் பாருங்கஎன்று கர்ஜிப்பர்; ஒரு சிலர் சற்றும் யோசிக்காமல் அந்த இட்த்திலேயே தம் சொந்தப் பிள்ளைகளைக் கதறக்கதற அடிப்பர்; சச்சிதானந்த குணம் கொண்ட வெகுசிலர் மட்டும் சிரித்துக்கொண்டே “நான் பாத்துக்கிறேன் மேடம்என்று முற்றுப்புள்ளியிடுவர் (எனது அம்மா கடைசி வகையறாவுக்குள் அடங்குவார்). அன்று வகுப்புகள் நடைபெறாது. மதிப்பெண் அட்டைவாங்கியபின் வீட்டுக்குச் செல்லலாம். இந்தச் சடங்கானது சனிக்கிழமைகளில் நடைபெறும். படிப்புரீதியாக என்னிடம் எந்தக் குறைகளும் இருந்ததில்லை என்றபோதிலும், ‘காது வரைக்கும் நீளுது வாய்என்ற ஆசிரியர்களின் கருத்து, வகுப்பு வேறுபாடின்றி பள்ளியைவிட்டுச் செல்லும்வரை என்னைப் பின்தொடர்ந்து வந்தது.

     நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என் அண்ணன் வேறு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தான். காலாண்டு முடிந்த ஒரு சனிக்கிழமையில் ‘ரேங்க் கார்டு டேவந்தபோது அவனுக்குப் பள்ளி விடுமுறை நாளாயிருந்தது. அன்று மதியம் இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான பகலிரவு ஒருநாள் ஆட்டம் நடைபெறவிருந்தது. கைப்பேசி புழக்கத்தில் வராத காலமாதலால், ஒரு ரூபாய்த் தொலைபேசியில் அம்மாவின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, அவரிடம் விரைந்து வருமாறு கூறினேன். சொல்லி வெகுநேரமாகியும் அவர் வராததால், வீட்டிற்குத் தொலைபேசி, அண்ணனை வரச்சொன்னேன். எல்லாம் கிரிக்கெட் படுத்திய பாடு!

     அம்மா அப்பா வெளியூருக்குப் போயிருக்காங்க. திங்கள்கிழமை வந்து பார்க்கச் சொல்றேன்என்ற அவனை நம்பி என்னை அனுப்பி வைத்தார் கரோலின் மேடம் (அவன் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்ததால் அப்படியொரு செல்வாக்கு). வீட்டிற்கு வரும் வழியில்தான் உறைத்தது பிரச்சினையின் வீரியம். அம்மா அங்கு போகாமல் தடுத்தாக வேண்டும். வீட்டிற்குள் சென்றவுடன் முதல்வேலையாக அம்மாவின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டால் “அவங்க கெளம்பிட்டாங்களேஎன்று பதில் வந்தது. அடித்துப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு ஓடலாம் என்று எத்தனித்தபோது, அம்மாவே வீட்டிற்கு வந்துவிட்டார். ஸ்கூலுக்குப் போயிட்டுதான் வரேன். அப்படி என்னடா அவசரம்?என்றவரிடம் விஷயத்தை விளக்கியபோது சிரித்துவிட்டார். ஆனால் அந்நிகழ்வின் உண்மையான விளைவு என்னைத் திங்களன்று தாக்கியது. “மொளச்சு மூணு எல விடல. அதுக்குள்ள வாயத் தெறந்தா பொய். நீதான் இப்புடி இருக்கேன்னா உங்க அண்ணன்காரனும் அதே மாதிரிதான் இருக்கான். அன்னிக்கே நீ தொலைஞ்சு போயிருந்தேன்னா நான் யாருக்குப் பதில் சொல்றது?என்ற கரோலின் மேடத்தின் வார்த்தைகளுக்குள் இருந்த அக்கறை அப்போது புரியவில்லை.

                            **********

     இன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் உலா வரும் ‘டிக் டாக் டோஎன்ற விளையாட்டைப் பார்க்கும்போதெல்லாம் ஆரம்ப வகுப்புகளில் படித்தபோது தினமும் காலையில் இறைவழிபாட்டிற்கு முன்னதாக மரத்தடி நிழலில் மண்ணில் ஆடிய ‘நேர்பழம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘டிக்டாக்டோவிற்கான அதிகாரப்பூர்வத் தமிழ்ப்பெயர் தெரியவில்லை; ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இப்பெயரைத்தான் சூட்டுவேன். காகிதங்களிலும் விளையாடப்படும் இதில் x குறியீட்டுக்கு வேப்ப்ம்பழமும், o குறியீட்டுக்கு ‘சூட்டுக்கொட்டைஎன்று சொல்லப்படும் ஒருவகை கொட்டையையும் உபயோகித்தால் அதுதான் ‘நேர்பழம்’. மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு இறைவழிபாட்டின்போது விளையாடி நானும், நண்பன் சரவணசெல்வனும் மாட்டியதை நினைத்தால் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

                            **********

     இன்று பாட்டியின் கைவண்ணத்தில் தயாரான ரவா உப்புமாவைச் சாப்பிடும்போது சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் ஸ்கூலுக்குச் சாப்பாடு எடுத்துண்டு வரும்போது என்னப் பாடு படுத்துவ?இன்றைய நிலையில் பெற்றோர் குழந்தைகளுக்குச் சோறூட்டப் பள்ளியினுள் அனுமதிக்கப் படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நான் எல்.கே.ஜி படிக்கும்போது மதியச் சாப்பாட்டைப் பாட்டிதான் எடுத்துவந்து ஊட்டிவிடுவார். அவர் எடுத்துவரும் பொருட்களின் பட்டியல்:

    1)      சாப்பாட்டு டப்பா, தண்ணீர் பாட்டில் போன்ற சாமான்கள்
    2)      கால்சராய் (தவறாமல் நான் போட்டிருக்கும் கால்சராய் நனைந்திருக்கும். மாற்றியே ஆக வேண்டும்)
    3)      ஃப்ளாஸ்கில் பால் அல்லது காம்பிளான்

   முக்கால்வாசி நாட்களில் நான் சோற்றை லேசில் சாப்பிட்டுவிட மாட்டேன். சிலபல கொஞ்சல்கள், இரண்டு மூன்று ‘மடக்காம்பிளான், ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குச் சித்திரக்குள்ளன் கதை போன்ற அத்தியாயங்கள் இன்றி, சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. இங்குதான் பாட்டிக்குள் மறைந்திருக்கும் கதாசிரியர் வெளிப்படுவார். ஒரே கதையைச் சிற்சில மாற்றங்களோடு வெவ்வேறு முடிவுகளுக்கு இட்டுச் செல்வதில் அவர் வல்லவர். என்னைக் கேட்டால் நான் ரசித்துப் படித்த ‘வாண்டுமாமா சிறுகதைகளைவிட பாட்டியின் கதைகள் நயம்பொருந்தியவை. எனினும் இந்த சொகுசு வாழ்க்கை வெகுநாள் நிலைக்கவில்லை. நான் யூ.கே.ஜி படிக்கும்போது, பள்ளியின் சுத்தம் கெடுகிறதுஎன்று சொல்லி இவ்வழக்கத்தை தடை செய்தனர். அனைவரும் வகுப்பறைக்குள் அமர்ந்து உண்ணுமாறு கட்டளையிடப்பட்டோம். பெற்றோர் வருவதாயிருந்தால் வாயிற்கதவின் பக்கத்தில் நின்று சாப்பாட்டுக்கூடையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். இப்படி ஒரு விசித்திரச் சட்டம் பள்ளியில் அமலுக்கு வந்திராவிட்டால் பாட்டிக்குள் இருந்த மொத்த வித்தையும் என்மூலமாக இவ்வுலகுக்குத் தெரியவந்திருக்கும்.

                         **********

   பள்ளி இடைவேளையின்போதும், விளையாட்டு நேரத்தின்போதும் ஆடிய ‘திருடன் போலீஸ்’, ‘கல்லா மண்ணா’, ‘லாக் அண்ட் கீ’, ‘நேர்பழம்போன்ற ஆட்டங்கள் இன்று ஆடப்படுகிறதா என்பது சந்தேகமே. அதற்கு முன்பாக, விளையாடுவதற்கென்று பிரத்யேகமான நேரம் எத்தனை பள்ளிகளில் இன்றும் ஒதுக்கப்படுகிறது? அப்படியே ஒதுக்கப்பட்டாலும், ‘போர்ஷன் முடிக்கல; நான் எடுத்துக்கிறேன்என்ற அறிவியல் ஆசிரியரின் சர்வாதிகாரம் இல்லாத பள்ளிகள் இருக்கின்றனவா? இவை எல்லாவற்றையும் மீறிய கேள்வி, குழந்தைகளுக்கு இன்னும் இத்தகைய விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருக்கின்றதா? ஏனெனில் இப்போதைய குழந்தைகள் ‘சப்வே சர்ஃபர்ஸில் ஓடி, ‘ஃப்ளாப்பி பேர்டில் இறக்கை கட்டிப் பறந்து, ‘ஆங்ரி பேர்டுகளாக வலம்வருகிறவர்கள்.


காலம் மாறுகிறது. என்னமோ போங்க!

Friday, September 25, 2015

மடை திறக்கும் நினைவுகள்...

     வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்என்று பிறர் சொல்லுமளவுக்கு வயதாகவில்லையென்றாலும், கல்லூரிப் படிப்பிற்காக நரக... மன்னிக்கவும், நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டதால், விடுதியில் வெட்டியாக விட்டத்தைப் பார்த்துப் படுத்திருக்கும் நேரமெல்லாம் கடலூரில் படித்த பள்ளிக்காலங்களை அசைபோடத் தோன்றும்.

     அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் எப்படி எவ்விதத் தொடர்பும் இல்லையோ, அதேபோல பக்ரீத்துக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனால், அப்பண்டிகையைச் சாக்காக வைத்துத்தான் வீட்டுக்கு வந்திருக்கிறேன். ஈத் முபாரக்!

     வீட்டுக்கு வருவது துணிதுவைக்கும் வேலை மிச்சமாகும் என்பதற்காகவும், தாயின் சுவையான சமையலுக்காகவும்தான் என நண்பர்களிடமும், “உங்களைப் பார்ப்பதற்காகத்தான் வருகிறேன்என்று அம்மா அப்பாவிடமும் சொன்னாலும், இவையனைத்தையும் தாண்டிய ஒரு காரணத்துக்காகவே ஊருக்கு அடிக்கடி வந்துபோக வேண்டும் என்ற எண்ணம் எழும். அது, நினைவு. நான் பிறந்த ஊருக்குள் காலடி எடுத்து வைக்கிறேன் எனும் பெருமிதம்; நான் பார்த்து வளர்ந்த சாலைகளில் வானளாவிய கட்டடங்கள் உயர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது வரும் ஆச்சரியம்; மரங்களும் காடுகளுமாக இருந்த இடங்களில் மனை விற்பனைக்கு என்ற அறிவிப்புகள் தென்படும்போது நெஞ்சைக் கவ்வும் சோகம்; ‘நாதன் நாயகி நகருக்குள் கிரிக்கெட் ஆடிய மைதானத்தைப் பார்க்கச் செல்லும்போது, அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடுகளாக உருமாறியிருக்கும்போது மாறியது கிரிக்கெட்டின் தன்மை மட்டுமல்ல, காலத்தின் காட்சியும்தான் என்று அலையடிக்கும் ஞாபகங்கள்.

     துணி காயவைப்பதற்காக மாடிப்படி ஏறிச்செல்லும்போதெல்லாம் தவிர்க்க முடியாமல் வந்துபோகும் ராஜா மாமா – மீரா மாமி தம்பதியர்; மாடி வீட்டில் முதல்முதலாக வாடகைக்கு வந்தவர்கள். இப்போது வீட்டில் சாமான்கள் சேர்ந்துகொண்டே போனதால் மாடி வீட்டில் தட்டுமுட்டுப் பொருட்களைப் போட்டு வைத்தாயிற்று. எனினும் அங்கு செல்லும்போதெல்லாம் குடியிருந்தவர்களின் முகங்கள் மின்னலென வெட்டும். எனக்கு இந்திய ஜனாதிபதிகளின் பெயர்கள் வரிசைப்பிரகாரம் தெரியாது; ஆனால், எங்கள் வீட்டில் குடியிருந்தவர்களின் பெயர்கள் வரிசையாக வாய்ப்பாடு போலக் கொட்டும்.

     தண்ணீர் அளவைச் சரிபார்ப்பதற்காக மொட்டை மாடிக்குப் போகும் ஒவ்வொரு முறையும், எனக்குப் பதினைந்து வருடங்கள் குறைவதை உணர்ந்திருக்கிறேன். எல்.கே.ஜி படிக்கும்போது பள்ளிவிட்டு வந்ததும் மாடிப்படிகளில் ஏறி நின்று, நந்தினிஎன்று எழுதப்பட்ட ஆட்டோ வரும்வரை காத்திருப்பது வழக்கம் (ஏன் அந்த ஆட்டோவை அப்ப்டிக் கவனித்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை; தயவுசெய்து இதை மேற்கொண்டு ஆராயாமல் படிக்கவும்). ஒருநாள் அவசரத்தில் படிகளைக் கவனிக்காமல் எக்குத்தப்பாகக் கால்வைத்ததில் தடுக்கி, உருண்டு விழுந்தேன். அன்று என்னைத் தூக்கிக்கொண்டு சட்டையில் ரத்தக்கறையுடன் ஓடிய அண்ணன் நினைவுக்கு வருகிறான்; முதலுதவி செய்த ராஜா மாமா நினைவுக்கு வருகிறார்.

     வீட்டில் மழை பெய்யும் நேரங்களில் எட்டாம் வகுப்பு கண்ணுக்குள் நிற்கிறது. அந்த வருடம் பேய்மழை அடித்ததால், சுமார் இரண்டு வாரங்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாடியில் குடியிருந்த மணி சித்தப்பா (உரிமையுடன் அவர் அப்பாவை அண்ணா என்றும், அம்மாவை மன்னி என்றும் அழைப்பார்; ஆதலால், நான் அவரைச் சித்தப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தேன்) அவரது நண்பர் விஜயகுமார், அப்பா, நான் நால்வரும் ஆடிய ‘ரவுண்ட் ராபின்சதுரங்க ஆட்டங்களை மறக்கவே முடியாது. இத்ற்காகவே மாடிக்குப் பல பிஸ்கெட் பாக்கெட்டுகளும், தண்ணீர்க் குவளைகளும், அவ்வப்போது தேனீரும் வரும்.

     காம்பவுண்டு சுவருக்கு வலப்புறத்தில் காலியாக இருந்த இடத்தில் வீட்டைக் கட்டும்போது, அவர்களது குடிநீர்த் தொட்டிக்கு எங்கள் வீட்டுத் தென்னைமரம் இடைஞ்சலாக இருக்குமெனக் கூறி அதை வெட்டச் சொன்னார்கள். வீட்டில் யாருக்கும் அதை வெட்ட மனமில்லை; ‘இப்போது செய்கிறோம்அப்போது செய்கிறோம்என்று தள்ளிப்போட்டு வந்தாலும், கடைசியில் ஒருநாள் வெட்டித்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்த்து. 35 – 40 அடி உயரம் இருக்கும் அந்த மரம் வெட்டப்பட்டபோது சலனமின்றி உட்கார்ந்திருந்தது பசுமையாகப் பதிந்துள்ளது. சுவற்றின் மீது மரம் விழாமலிருப்பதற்காக கயிற்றைக் கட்டித் தாங்கி ஒரு பக்கமாகச் சாய்த்தனர். என் கண்களுக்கு எமனே பாசக்கயிற்றுடன் வந்து உயிரை எடுத்தது போலவே தோன்றியது. அது நான் தனி ஒருவனாக வளர்த்த மரம்; எனது உப்புநீரில் காய்த்துக் குலுங்கிய மரம். இன்று மொட்டையாக வெறும் கோழி, ஆடு வெட்டும் கல்லைப் போல முண்டமாக இருக்கும் அதைப் பார்க்கும்போது கண்ணீர் பொங்கிப் பொங்கி வருகிறது. “இருக்குற மரத்தையெல்லாம் வெட்டிட்டு நம்ம எல்லாம் என்ன மயிரவா புடுங்கப் போறோம்?என்று பல்லைக்கடித்துக் கொண்டே வாய் குழறுவதைத் தவிர்க்க முடியவில்லை.

     தோட்டத்தின் மறுமூலையில் செயல்படாத நிலையில் ஊனமாக நின்றுகொண்டிருக்கும் அடிகுழாயைப் பார்க்கும்போதெல்லாம் ‘தானேபுயல் என்னைக் கடந்து செல்கிறது. புயலடித்ததால் மின்சாரம் இல்லாமல் 20 நாட்களுக்கு ஊரே அல்லாடியபோது, எங்கள் தெருவுக்கே தண்ணீர் தந்த கொடை வள்ளல் அக்குழாய். நான் பள்ளி செல்லும் காலங்களில் பாட்டியே தண்ணீர் அடிப்பார்; இப்போது துருபிடித்துக் கிடக்கும் குழாய், ஒருவகையில் பாட்டியின் வயோதிகத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

     சமீபத்தில் அடையாறிலிருந்து வந்திருந்த சித்தி கூடச் சொன்னார். “இங்க எல்லாம் எவ்ளோ மரமிருக்கு; அங்க அபார்ட்மண்டுல மாத்தி மாத்தி ஹால், கிச்சன்னு சுத்தி சுத்தி வரவேண்டியிருக்குஎன்று புலம்பியபோது நகரத்தில் வாழ்வதில் பெருமையடையும் மக்களை நினைத்து சிரிப்பு வந்த்து.

     ஜி.ஆர்.ஈ பரீட்சை எழுதிவிட்டு மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றுவிடுஎன்ற வாசகம் தினம்தினம் யாரேனும் ஒருவரால் என் காதில் ஓதப்படுகிறது. அதற்கு நான் தயங்கக் காரணம் ஒருவேளை நான் திரும்பி வர முடியாமல் போய்விடுமோ என்ற பயமே. “இப்போ என்ன? அதுக்காக வாழ்க்கை முழுக்க இங்கயே இருக்கப் போறியா என்ன? நாலு எடம் பார்க்க வேணாம்? நல்ல சம்பாதிக்கலாம். சீக்கிரம் செட்டில் ஆயிடலாம். மொதல்ல ஃபாரின்ல ஒரு மாதிரியாத்தான் இருக்கும். போகப்போகப் பழகிடும்என்று சொன்ன ஒரு உறவினரிடம் கோபப்படுவதா, அவரைப்பார்த்துப் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.


     ஐந்து நட்சத்திர உணவகங்களில் தின்றாலும், அம்மா சமையலைப் போல் வராது; சொகுசு மெத்தையில் படுத்தாலும் தாயின் மடி போல் வராது; உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்துகொண்டு கோடி கோடி டாலராகவும், யூரோவாகவும் சம்பாதித்தாலும், நம் ரூபாயைப் போல் இருக்காது. “ஆமாம். எனக்கு நாலு எடம் பாக்கணும்தான். ஆனா இங்க இருக்கற பிச்சாவரத்தைப் பாக்கணும், எங்கேயோ இருக்குற பிரிஸ்பேன் இல்ல. இங்க இருக்குற கன்னியாகுமரியப் பாக்கணும்; எங்கேயோ இருக்குற கலிஃபோர்னியாவ இல்லஎன்று உள்மனது எனக்குள் கத்தினாலும், அந்த உறவினரைப் பார்த்து மௌனமான புன்னகையை மட்டுமே உதிர்த்தேன்.

SOJOURN OF A SIX FOOTER…

          I’ve already written about how difficult it is to survive as a six-footer here. It is a clear misconception that being tall is a perk; it’s more of a pain. And especially for someone like me who is abnormally slim for my height, this is the ultimate bane. Such is the intensity of this abnormality that I am forced to think of LOL as Looking Over-Lanky rather than the obvious Laughing Out Loud.
          A day never starts off well in most of my tours because most of the bathrooms in even the luxurious hotels aren’t designed to accommodate the lifting of hands by a six-footer while taking bath. And then, I have also had this embarrassment of being forced to bend down in an awkward fashion to take bath at one such ‘posh’ lodge, as the shower was placed at some 150 centimeters from the ground level.
          I can’t run enthusiastically to hug my friend when I see him at his house after a long time. I need to slow down a bit, accelerate my thoughts to be far more impulsive and stop before the entrance so that my head doesn’t get this hammered feel due to the entry’s height of just above five feet.
          Rarely do I get a chance during a group photo session to stand at a position which would cover my torso fully. And seldom do my legs come into the frame. It’s like, “If you want to be in the photo, show your head or leg. You cannot have the cake and eat it, too.”
          During bus travails, I am pushed to the limits of exhaustion and anger due to the inadequate spacing between consecutive rows of seats. I try to extend my legs in front and it collides with the legs of a girl in that seat. There is a humongous, beast-like human being, who turns and shouts, “Aren’t you people ashamed to board the bus to tease and touch girls like this?” So I then attempt to expand my legs in a V Fashion and the person beside looks at me as if I am pissing on the seat itself. I pretend to be normal and try to sleep as if nothing has ever happened. Now, I can’t rest my head in the seat because its height can accommodate till my neck only.
          After some time, the bus stops for a break and I try to stand up in a hurry so as to get rid of that awkward sitting posture. Bang! My head butts on the luggage placing area. “You got to remember that you are occupying the window seat, mate”, I say to myself, rubbing my head with my right hand.
          When the bus starts again, I try to make myself comfortable by sitting in an inclined position, as if suffering from scoliosis. My butt dashes against the adjacent person and he mistakes me for a gay. “What’s your problem, brother?” he asks, and I know he thinks I am suffering from piles or something more terrible.
          In order to avoid all these conflicts and embarrassments, I book a ticket in a sleeper class bus. I enter with a sense of pride and relief, smile extruding all over my face as if I have represented India in some international event and all the leaders have appreciated my efforts. Alas! Even the berth is of 165 – 170 centimeters long and I am nudged to the brink of exasperation.
          I always sit at the last bench in classrooms because of two reasons. Firstly, I am fucking tall. Secondly, I go late to classes and the other benches are already occupied. It’s not that someone scolds me if I position myself in some middle row (I am not a fucking first bencher), but I am made to play hide and seek between the benches because the people at the back aren’t able to see the board till the bottom. I am made to lean, bend and kneel like David fighting Goliath, and I never think of going to one of those middle rows ever in my lifetime again.
          Using mobiles during really boring class hours is the tradition of college goers, especially engineers, but I am denied that boon forever. If I keep my mobile under the desk and try to operate it, I have to bend a lot which evidently results in me getting caught red-handed.
          Costumes! Whether I use it or not, even the most stylish and costliest pants in my collection has to go to some underprivileged person’s hands after a year or so from the date of purchase, because the length doesn’t fit me; or rather, I don’t fit its size.
          My heart pounds with uncontrollable happiness when I mention to my friends that I don’ burst crackers during Diwali, because I am conscious about the environment, having scored an A in Environmental Science (Sometimes or always, I try to boast like crazy. Never mind!) But reality is that I didn’t abstain from this cracker-bursting activity as a green enthusiast, but my height forced me to back out. I had to bend a lot to ignite a cracker, which would be placed at the floor. My comfortable attempt to light a cracker with relative ease by placing it in the compound wall boomeranged like hell when the wall experienced a small crack, unable to tolerate the explosive effect of this Lakshmi Vedi.
                                      ****************
          There’s an unwritten rule that a boy and a girl should have lesser height difference in order to get married, and I have heard stories about horoscopes being rejected even after all other prerequisites are found to be okay. But given a chance, I would always marry a far shorter girl than me so that at least my child doesn’t suffer from this ‘tallness tantrum’.

          Negatives apart, I have a fair chance of making it to the assembly of the Southernmost state of India, where the subordinates always bend to welcome the spearhead. I have an edge because my natural stance itself has become inclined due to the hunch that normally develops over a period for all lanky people. Name is Giridharan. Good luck!

தொலைக்காட்சியெனும் அடையாளம்

     இன்று ஓலைக்குடிசையில் கூடத் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கும் தொலைக்காட்சியானது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்வச்சீமான்களுக்கே உரித்தானதாயிருந்தது; மெதுமெதுவாகப் பரவிய இப்பெட்டியில் வந்துகொண்டிருந்த தூர்தர்ஷன் என்னும் இணைப்பைப் பார்ப்பது மானிடப்பேறாக இருந்த காலம் மறைந்து, ‘கேபிள்என்னும் அதிசயம் பட்டிதொட்டியெங்கும் ஊடுருவத்தொடங்கியிருந்தது, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து. தெருவில் இருந்த கேபிள் இணைப்பு கொண்ட ஒரே வீட்டில் ‘ஜீபூம்பாஎன்னும் நாடகத்தைப் பள்ளிக் குழந்தையாக நான் பார்த்தது பசுமரத்தாணியாக மனதில் பதிந்துள்ளது.

            எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது, வானில் ‘ஹேலி வால்நட்சத்திரத்தைப் (Halley’s Comet) பார்ப்பதைப் போல மிக அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. ‘ஒலியும் ஒளியும், ‘அமுதசுரபிபோன்ற நிகழ்ச்சிகளைக் குடும்பத்துடன் கண்டுகளித்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே தனிப்பெருமை உண்டு. நான் எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்தபோது தெருவில் ஒரு வீட்டில் மட்டுமே இருந்த இந்த கம்பிவட்த் தொலைக்காட்சி (Cable TV) அடுத்த ஓராண்டுக்குள் அத்தியாவசியான அம்சமானது காலத்தின் விளையாட்டு. 2003 கோடைக்காலத்தில் பெற்றோரிடம் நாங்களும் (நானும், அண்ணனும்) நச்சரிக்கத்தொடங்கினோம். காரணம் கிரிக்கெட் உலக்க் கோப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. 1983ல் தொடங்கி மட்டைப்பந்து இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. கபில் தேவ் செய்த அச்சாதனை, 20 வருடங்களாக நினைவுச் சின்னமாகவே மனதில் தேங்கிக்கொண்டிருந்தது இந்தியர்களிடம். அந்த ஏக்கம் வெறியாக இளம்பருவத்தினரிடம் தோன்றியதற்குச் சாட்சி, நானும் என் அண்ணனும்.

     சரி. ஆனா ரெண்டு மாசம்தான். வேர்ல்டு கப் முடிஞ்சவுடனே டிஸ்கனக்ட் பண்ணச் சொல்லிடுவேன்” என்ற தந்தையின் கறாரான
ட்டளைக்கு இணங்கினோம். உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை; ஆனால், எங்கள் கனவான நிரந்தர கேபிள் இணைப்பு வென்றது. இதுதான் கேபிள் டி.வி எங்கள் வீட்டில் கால்பதித்த கதை.

            கேபிள் வந்த பிறகும் அந்த சிறிய பி.பி.எல் தொலைக்காட்சியில் எட்டுச் சேனல்கள் மட்டுமே வரும். பள்ளியில் நண்பர்களனைவரும் டின்டின், ஸ்கூபிடூ கார்ட்டூன்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, நான் வாண்டுமாமா சிறுகதைப் புத்தகங்களில் மூழ்கியிருந்தேன். அப்போது வந்த புதிய வகைத் தொலைக்காட்சிகளனைத்தும் ‘எஸ் பேண்ட்’ (S Band) என்னும் அதிக அலைவரிசை வகையறாக்களாக இருந்தன; ஆனால் எங்கள் வீட்டிலிருந்த BPL ப்ரைம் பேண்ட் (Prime Band) என்னும் ஹைதர் காலத்து வகையைச் சேர்ந்தது. இன்றும் நான் தொலைக்காட்சிக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டிருப்பது மூன்று காரணிகளுக்கேயாகும் – அம்மா, அப்பா, அந்த அரதப்பழைய தொலைக்காட்சி.

     எங்கள் பகுதி ஆபரேட்டராக இருந்த கோபு அண்ணனுக்குத் தெரியும் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களென்று. அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வருவார் மாதக்கட்டணம் வசூலிக்க. பின்வருபவை மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நிகழ்வுகளின் வரிசை:

1)      சனிக்கிழமையும் அலுவலகத்திற்குச் செல்பவர்களாதலால், ஞாயிறுகளில் வீட்டுவேலைகள் அனைத்தும் இழுத்துக்கட்டிச் செய்யும் வழக்கம் இருந்தது என்னைப் பெற்றவர்களிடத்தில். துணிதுவைத்து, ஒட்டடை அடித்து, பீரோவில் துணிமணிகளை நாள் பிரகாரம் அடுக்கி, அடுக்களை அலமாரிக்குச் செய்தித்தாள் மாற்றி, காலைச் சாப்பாடு சாப்பிடும்போதே கடிகாரத்தின் சிறிய முள் ஒன்றாம் எண்ணைக் காட்டும்.
2)      சிறிது நேரம் கூடத்திலேயே கண்ணயரும் இருவரையும் எழுப்புவது கோபு அண்ணனின் குரல். அரைத்தூக்கத்தில் எழும் இவர்களின் செவிக்கு எட்டும் அடுத்த வாசகம், “சன் டி.விக்காரன் வந்துட்டான் பாருடி ஜெயஸ்ரீஎன்னும் பாட்டியின் குரலாகத்தான் இருக்கும்.

                                                         ******************

     பாட்டிக்கும் தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் பெரிதாகக் கிடையாது. கண்பார்வை நன்றாகத் தெரியுமாதலால், செய்தித்தாள் படிப்பதிலேயே நாளின் பாதிப்பொழுது கழியும் அவருக்கு. இருந்தாலும், அம்மம்மா ஊரிலிருந்து வந்தால், தொலைக்காட்சியை நிறுத்தவே முடியாது. (இவ்வளவு நேரம் பேசப்பட்டுக் கொண்டிருந்த பாட்டியானவர் அப்பாவின் அத்தை) அம்மம்மா சன் டி.வியை வாழ வைத்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் பல லட்சம் தமிழ்ப்பெண்மணிகளில் ஒருவர். ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள், ‘சித்தியில் தொடங்கி, ‘வம்சம்’, ‘வள்ளி’, ‘வாணி ராணிவரை அனைத்துத் தொடர்களையும் பார்த்து, அவையனைத்தையும் நினைவில் வைத்திருக்கும் அபூர்வப்பெண் (இதில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு தொடரில் வரும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை, தஸ்தவெய்ஸ்கியின் ‘காரமசோவ் சகோதரர்களையே மிஞ்சிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது)

     அம்மம்மா கடலூருக்கு வந்தால், அவருடன் பாட்டியும் சேர்ந்து இத்தொடர்களைப் பார்க்க அமர்ந்து விடுவார். இதில் பெரிய தர்மசங்கடம் பாட்டிக்கு இருக்கும் ஆர்வம்தான். அம்மம்மா பல மாமாங்கங்களாகப் பார்த்து வரும் தொடர்களின் சாரங்களை ஒரே நாளில் அறிய முயற்சிப்பார் பாட்டி. “இவன் யாரு, இப்போ வந்தாளே அவளோட ஆம்படையானா?”, “அவ எதுக்கு இப்பொ அழறா?”, “இவளோட அப்பா இல்லையா? எப்போ செத்துப் போனார்?போன்ற கேள்விக் கணைகள் அம்மம்மாவைத் துளைத்தாலும் முடிந்தவரை பொறுமையாகப் பதிலளிப்பார் அவர்.

     அம்மம்மா டி.வி பார்ப்பதால் சில நேரங்களில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்கும் பொன்னான தருணங்களை இழந்திருக்கிறேன். ஆனால், பாட்டி அம்மம்மாவிடம் கேட்கும் தொடர்களைப் பற்றிய சம்பந்தமில்லாத வினாக்கள் அந்த இழப்பை மீறிச் சிரிப்பை வரவழைக்கும்.

     சில நேரங்களில் பாட்டியும் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பார். யாரைப் பார்த்தாலும் “இவன் சச்சின் மாதிரியே இருக்கான்டாஎன்று சொல்வார் (இவ்வாக்கியம் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா விளையாடும் ஆட்டங்களின்போதும் வெளிவரும். ஒருமுறை, ரமேஷ் பவாரைப் பார்த்துப் பாட்டி சச்சின் என்று சொன்னதுதான் உச்சக்கட்டம்). இந்தியர்கள் அடித்து ஆடும்போது கத்தும் என்னைப் பார்த்து, “என்னடா... ச்ச்சின் ஜெயிச்சுட்டானா?என்றும், எதிரணியினர் முன்னேறி வந்தால் சோகமாக இருக்கும் எங்களைப் பார்த்து, “சேவான் தோத்துட்டானா?என்றும் அக்கறையாக விசாரிப்பார் (சேவாக்கைப் பாட்டி சேவான் என்றுதான் கூறுவார்). அவரைப் பொறுத்தவரை, ஒரு ஆட்டத்தில் ஓரணி பலமுறை வெல்லும் என்பதே முடிவாக இருந்தது. எதிரணியின் ஒரு விக்கெட் விழும்போதும் நாங்கள் கத்தினால், இந்தியா ஒருமுறை வென்றுவிட்டது என்று பொருள் பாட்டிக்கு.

                                                          ******************

     கேபிளின் தரம் குறைந்துகொண்டே வந்ததால் இரு ஆண்டுகளுக்கு முன்பு DTH இணைப்பு வீட்டில் கொண்டுவரப்பட்டது. பாட்டியின் கண்பார்வை குறைந்தபடியால், மாலை வேளைகளில் படிக்க முடிவதில்லை. வயோதிகத்தின் தனிமை அவரைத் தொலைக்காட்சியின் பக்கம் இழுத்திருக்க வேண்டும். நானும் சென்னையில் இருப்பதால் அவருக்குப் பேச்சுத்துணை குறைந்திருப்பது, நான் கடலூருக்கு வரும்போதெல்லாம் அவர் நிறுத்தாமல் பேசுவதிலேயே தெரிகிறது. “இப்பொல்லாம் டி.வியப் போட்டா யாரோ ஒரு பொம்பணாட்டி சப்பாத்தி பண்ணிண்டேயிருக்கா. இல்லன்னா, யாரோ ஒரு பையன் கலர், கலரா வெவ்வேற சட்டை – பேண்ட் போட்டுண்டு வந்து நிக்கறான். மாத்தவே தெரியல எனக்குஎன்று DTHன் Home Channelல் வரும் விளம்பரங்களைப் பற்றி வெகுளியாக விளக்குவார். கேபிள் ரிமோட்டை இயக்க அவருக்குச் சொல்லிக் கொடுத்தபின், அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அவருக்காகவே இன்றுவரை கேபிள் இணைப்பைத் துண்டிக்கவே இல்லை. இப்போது புதுயுகத்தில் தோன்றும் ‘சனீஸ்வரன்’, ‘நாயன்மார்ஆகிய தொடர்களையும், ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படும் ‘ஜெய் வீர ஹனுமான்’, ‘ராமாயணம்ஆகிய தொடர்களையும் விடாது பார்க்கிறார்.

                                                           ****************


     தொலைக்காட்சி நல்லதா, கெட்டதா என்னும் தர்க்கத்துக்குள் நுழைய எனக்கு விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைப்பருவத்தையும், பாட்டியின் முதுமையையும் இணைத்த ஒரு முக்கியப் புள்ளி இப்பெட்டியேயாகும்.

Saturday, September 19, 2015

பேச்செனும் இசை…

            இசையெனும் கலை வடிவம் பேச்சிலிருந்துதான் தொடங்கியிருக்கும் என்று படித்திருந்தாலும், தர்க்க குணம் கொண்ட மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்தது இதுநாள் வரை. இப்பதிவினைத் தட்டச்சு செய்யும் இத்தருணத்தில் அத்தர்க்கம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதை உணரமுடிகிறது. இசையும், பேச்சும் ஒன்றோடொன்று கலந்து, பின்னிப் பிணைந்தவையே. இல்லையேல், ராப் (rap) என்று சொல்லக்கூடிய பேச்சு வகைப் பாடல்களை நாம் எப்படி ரசித்துக் கேட்க முடிகிறது? ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவான இசையைத் தழுவி உலகப்புகழ் பெற்ற எமினெம் போன்ற கலைஞர்களை நாம் எப்படி முழுமனதுடன் கொண்டாடுகிறோம்?
            திடீரென இஞ்ஞானோதயம் உதிக்கக் காரணியாயிருந்தது நாகர்கோவிலில் நடந்த திருமணம் ஒன்றுதான். திருமணம் என்பது கலாச்சார அம்சங்களின் கலவையான வெளிப்பாடு என்பதை உணர்த்தும் மற்றுமொரு விழாவாகவே அமைந்திருந்தது.  குடும்பத்துடன் சென்று ரசிக்கக் கூடியவை என்று வரையறுக்கப்பட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் ஒரு விதமான எல்லை கடந்த மகிழ்ச்சி, வந்திருந்த அனைவரிடமும் குடிகொண்டிருந்தது.
            ”எலே… இன்னுமொரு அரை மணிக்கூறு பொறு. சாப்புட்டுடலாம்”, “அடுத்த பந்தி வரை பொறு மக்கா. எல்லாம் சேந்தே சாப்பிடலாம்” போன்ற வாக்கியங்கள் வெவ்வேறு குரல்களில் இருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. இதில் நான் கவனித்த சில நுணுக்கங்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி மீது இருந்த மரியாதையைக் கூட்டியது; தமிழ்த்தாயை நினைத்து வியக்க வைத்தது.
            தமிழகத்தின் பல மாவட்டங்களில் ‘சா’ என்னும் எழுத்து பேசப்படும்போது ‘ஸா’ என்றே ஒலிக்கின்றது. ‘ஸாப்பிடலாம்’, ‘ஸாவியை எடு’ என்று தேவையற்ற ஒரு மென்மையைச் செயற்கையாகத் திணிக்கப் பழகிவிட்டோம் நாம். உண்மையில் ‘சா’ என்னும் எழுத்தில் தொனிக்கும் அழுத்தம் தமிழுக்கு அளிக்கும் அர்த்தங்கள் அபாரமானவை. “சாப்பிடலாம்” என்று ‘சா’வை அழுத்தும்போது, அந்த வார்த்தையே புசிக்க வேண்டும் என்ற ஆவலைப் பெருக்குவதாக அமைகிறது. “சாவி” என்ற சொல் ஒலிக்கும்போதே அது இருளை விலக்கக் கூடிய (கதவைத் திறக்கக் கூடிய) திறவுகோல் என்று விளங்குகிறது. “சங்கடம்” என்னும் சொல்லில் உள்ள குழப்பத்தின் அடையாளம், “ஸங்கடம்” என்று கூறும்போது குறைவது நமக்கே புலனாகிறது.
            நாகர்கோவில் மனிதர்கள் ‘ஒன்றாகக் கூடி’ என்று பொருள் தரக்கூடிய சொல்லைப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் விதமே அலாதியானது. நாம் ‘சேர்ந்து’ என்று சொல்வோம். அவர்கள் தமிழகராதியிலே இல்லாத ஒரு வகையான ‘சே’க்கும், ‘சா’க்கும் இடையிலான ஒரு சப்தத்தைப் பிரயோகிக்கிறார்கள். இது மொழியை மெருகூட்டுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. இத்தகைய அழுத்தமான தமிழ்ப் பரிமாணத்தைத் திருநெல்வேலி பாஷையிலும் உணர முடியும் (என் தாய்க்கு இதில் ரொம்பப் பெருமை; அவரது சொந்த மாவட்டமாயிற்றே?).
            ஒரு சொற்றொடருக்குள் இவர்கள் உள்வைக்கும் ஏற்ற, இறக்கங்களானது, கர்நாடக சங்கீதத்தின் சாஸ்திரத்தை ஒட்டியே அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. கச்சேரி செய்யும் முன்போ, சாதகம் செய்வதற்கு முன்போ பாடகர்கள் ‘ஸா பா ஸா’ என்று அடிவயிற்றிலிருந்து பாடி, ஏற்ற இறக்கங்களுக்குத் தயார்படுத்திக் கொள்வர். இதயத் துடிப்பை உணர்த்தும் கருவியும் இந்த முறையிலேயே செயல்படுகிறது; நிமிடத்திற்கு இவ்வளவு முறை என்ற கணக்கில் செயல்படும் இக்கருவி, இவர்களின் பேச்சைப் பொருத்தமட்டில், ஒரு சொற்றொடருக்கு இத்துணை முறை என்ற ரீதியில் துடித்தால் ஒரு சீரான, மேடுபள்ளங்கள் (crests and troughs) கொண்ட வெளிப்பாடு நமக்குப் புரியும்.
            பேசும்போது அனைத்து வார்த்தைகளும் தெளிவாகக் கேட்கும்வண்ணம், நிதானமாகவே உச்சரிக்கிறார்கள் அனைவரும். Slow Ballad என்றழைக்கப்படும் இசைவகைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும் இவர்களது பேச்சுமொழி. பாரத நாட்டின் தென்கோடியான குமரிமுனைக்கு மிக அருகில் அமைந்துள்ள நாகர்கோவிலின் பேச்சுவழக்கானது, குமரிக் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளைப் போலவே ஆடியசைந்து வரும் தன்மை மிகுந்துள்ளதாகாவே விளங்குகிறது எனக்கு.
            ’மக்கு’ என்னும் சொல், எதற்கும் துப்பற்றவன் என்றொருள் பொருள் இருக்கும்போது, ‘மக்கா’ என்ற வட்டாரச் சொல், ‘மகனே’, ‘கண்ணா’ என்னும் பாச மொழிகளோடு தொடர்புகொண்டிருப்பது வியப்பிலும் வியப்பு. “நல்லா இருக்கியா?” என்ற வழக்கமான நலம் விசாரிக்கும் வாக்கியம், “நல்லா இருக்கியா மக்கா?” என்றாகும்போது தொனிக்கும் கரிசனம் எல்லையில்லாதது.

            அதிகமாகக் குரலுயர்த்திப் பேசுபவரைத் தெரியாமலா ‘சத்தக்காரர்’ என்கிறோம்? உண்மையில் ‘சத்தம்’ என்பதே ‘சப்தம்’ எனும் இசையின் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும் வார்த்தையிலிருந்து வந்ததுதானே? நம் மொழியே இசைக்கு நல்ல அடித்தளமாயிருக்கிறது. இதற்கு ஒரு முன்னுதாரணம் நாகர்கோவில் பேச்சு.