Thursday, August 27, 2015

FILMING THE WAY OUT...

         Cinema – one medium that we all relate to, follow and oblige with great devotion and fervour. With the current trend inclining positively towards the independent filmmakers with no absolute background but with bubbling, out-of-the-world thoughts and ideas, I had an opportunity to chat with one such Tamil short-film maker based in Singapore – Thoufiq Ahamed, the owner of DTB Productions. With daring notions and innovative screenplay, his short films have particularly changed my perspective with regards to the making of a movie and the behind-the-scenes-hardwork the crew puts in to bring the output in a pleasing way to the audience.
He has already worked in short films like Watch Out, Theeyavan and Yogi. With his upcoming production Heartbeat releasing on 29th August, he spoke about all his previous experiences of acting, directing, composing and producing short films with absolutely no funding from outside. (Note: During the course of our conversation, he asked me to publish this in Whimsicality To The Core and I was amazed as to how he really believed this could have a massive reach).

Excerpts:

1)   How do you see the prospect of independent filmmaking in the near future?
     Well, there was a time when those who were passionate about becoming a film maker or actor had to meet a film director or producer to get a chance to act or be their assistant. But now, they have got adequate platforms through social media to showcase their talents and passion by doing short films. I’m very sure that, in the near future, there will be many independent successful film makers, making quality films pertaining to various genres.

2)   In the current scenario, there are many crowdfunded films being released in many languages. What’s your take on this?
     It's really good. Movies are a reflection of our culture and traditions, and people are generally ready to donate funds - monetarily or otherwise – to something that would do something for the society. Nowaday, if people are bored or tired, they don’t have to depend on television and theatres alone. They can just go to Youtube or Facebook and watch short films of different genres from different languages. Moreover, crowdfunding develops social contacts and it’s a mutual give-and-take for both the filmmaker and the people who fund the film.

3)   Can you shed some light on your personal journey from ‘Watch Out’ to ‘Heartbeat’?
      It has been wonderful, like really. I have discovered myself as a          completely different person from what I thought I was sometime back.          I am still in the process of learning and would like to improve with                each of my films.

4)   Seeing the posters of ‘Heartbeat’, it looks like a romantic plot is on the cards, completely different from the earlier ones. Do you forcefully involve yourself in different genres, or is it something that naturally comes to you?
    (Laughs) As far as ‘Heartbeat’ is concerned, I can’t comment on it before it has officially been released. Frankly speaking, I want to try out all types of genres and bring it down to the target audience at the right time with the right proportions. Nothing comes naturally to me; I think and contemplate, and zero down on a plot.

5)   How did you people (the crew) mingle as a group?
     We are all like-minded people with a common passion – filmmaking. It has never been really difficult for us to stay together. Rather, I would say that we all mingled just like that in a natural way. This creates a possibility of exploring and brainstorming different ideas, and each one gets to learn a new thing, that he/she had no idea about, previously.

6)   I am sure each of you in the group must have got his/her share of work also. How do you tend to balance that?
     First of all, it is important that each and every technician and cast imbibes the thought process of a director and work accordingly. But, this doesn’t necessarily mean that the Director is the King and others work under him. Once a particular situation is given, human beings tend to improvise on it and come out with a transcended output.

     Since we know each other personally, we do understand the others’ personal responsibilities, and it is not that difficult for us to fill in another person’s shoes, if the need arises.

7)   A few words on the ‘Heartbeat’ crew...
     In Heartbeat, the cinematography has been done by Kevin William. He is the one who did posters for the film and take care of the distribution also. He has done a strong supporting role, too. Composing, rerecording, editing and most of the post production works were taken care of by Stanley Vincent - a very talented person. The heroine of the film is Aisha Alina, who is a very funny person to be with. She has also worked on the make-up for the film. My two good friends, Abraham and Barathan, have done a small supporting role in the film. Overall, it was fun working with each other. Each outing teaches us a lot.

8)   You mentioned that some of your shortfilms get funded sometimes from other production houses also, while some others are funded from your own pocket. How do you view this sense of harmony among the different production houses?
     Short film industry is not a big industry yet. Most of the short-filmmakers don't earn any income from their films, including myself. So in that case, one production house helps another production house. This sense of harmony is really healthy.

9)   You are releasing short films at a steady pace. Does this imply that you want to become a big screen movie director or actor?
     (Blushes) Yes definitely; that's my dream. That is why we are slowly learning the art of film making by doing short films.

10) Some of the scenes in 'Watch Out' and 'Theeyavan; show the amateurish acting skills of the people involved such that the mood of the situation doesn't get conveyed to the audience completely. What’s your opinion on this?
     Well, some of us imagine the visual and flow of a particular scene to be in our way while it changes totally opposite when we see it from the director's view. Sometimes, we accept it & sometimes we don't. After all, we are still toddlers in the field off cinema and it’s a matter of time before we learn and catch up with the nuances.

11) Do you conduct trial sessions for selection? Or choose people just like that?
     For my films, I will choose people who are close to me and those who share the same dream as mine. Sometimes, there is preference for those who have previous experience in short films and plays. But, I think it's important to conduct audition before choosing the actor. Maybe, I will conduct one in my next project.

12)Any noteworthy glimpses en route to this journey?
      I would say the most exciting and unforgettable moment came when Yogi (one of the short films in which he starred), was released in the silver screen. It was a huge boost not only for me but for the crew. When something gets noticed, appreciated and rewarded, you tend to work with your heart and soul in it.

                      I would like to express my sincere gratitude for Thoufiq Ahamed, who has been kind enough to spend time off from his college and filming schedules to have a chit-chat with me. WTTC wishes best of luck to Thoufiq and DTB Productions for all the future projects.

To watch all his previous short films, visit the following links:

Watch Out

Theeyavan

Yogi

Tuesday, August 25, 2015

எங்களின் தலைவிதியே!!!

            சென்னைச் சாலைகளில் செல்லும்போது இரண்டு விஷயங்கள் அனைவரின் கண்களிலும் தட்டுப்படும். ஒன்று, சென்னை மெட்ரோ ரயில் பணிகளும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும்; மற்றொன்று, வீதிகளெங்கும் பரவி, ஊடுருவிச் செல்லும் தம்பட்ட ஊடகங்களாகிய (media of self-propoganda) சுவரொட்டிகளும், அவற்றுள் அடங்கும் இன்ன பிற இதர வகையறாக்களும்.
            முன்னது அரசு இயந்திர வேலைகளுக்கான ஒரு முன்னோட்டம்; அது தேசமெங்கும் நிறைந்திருக்கும் கொடிய நோய். ஆனால் பின்னது சற்று சுவாரசியமானது; தமிழர்கள் என்று தம்மைத்தாமே சொல்லிக்கொண்டு, ஊரில் வாழும் மற்றவர்கள் அனைவரும் வேற்றுக்கிரகவாசிகள் என்ற நினைப்பில் காலந்தள்ளும் சில மனிதர்களின் ‘உணர்வு வெடிப்பு’ எனப்படும் நிகழ்வின் வெளிப்பாடு.
            சிறிது காலமாக சில காரணங்களால் தினந்தோறும் பேருந்தில் பயணிக்கும் பேறு கிட்டியதில், அடியேனின் எண்ண ஓட்டங்கள் தாறுமாறாகச் சிதறி ஓடியதன் விளைவே இக்கட்டுரை. எந்தத் தலைவரையும், நடிகரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுட்டிக்காட்டுமானால், அதற்காக முன்ஜாமீன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
            ஒரு பேருந்து நிறுத்தத்திற்கருகே திருமண வாழ்த்துக்கென வைக்கப்பட்டிருந்த, பிரம்மாண்டமான விளம்பரப்பலகையைக்கண்டு குலுங்கிக்குலுங்கிச் சிரிப்பதா, மணமக்களைக்கண்டு பரிதாபப்படுவதா என்று புரியவில்லை. தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகரும், மணப்பெண்ணும் ஒரு ஓரத்தில் சிரித்துக்கொண்டிருந்தனர்; மறுபுறம், தமிழே பேசத்தெரியாமல், கோலிவுட்டில் நடித்துக்கொண்டு, ‘கலைமாமணி’ விருது வாங்கிய நடிகை ஒருவர், மணமகனுடன் நின்றுகொண்டிருந்தார். வேறு மாநிலத்தவர் எவரேனும் அக்காட்சியைப் பார்த்திருந்தால் ஒரே மேடையில் இரு திருமணங்கள் நடைபெறப்போகிறது என்னும் முடிவுக்கு வருமளவிற்கு இருந்தது அவ்விளம்பரப்பலகையின் தோற்றம் (நானே கண்ணாடியணியாமல் அதைப் பார்த்திருந்தால், இதே முடிவுக்கு வந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது). நடுவில் அந்த நடிகரின் பெயரும், நடிகையின் பெயரும் குறிப்பிடப்பட்டு, அவர்களின் ஆசிகளுடன் நடக்கும் திருமணம் என எழுதப்பட்டிருந்தது. இப்போது இன்னொரு சத்திய சோதனை. அந்த நடிகர், நடிகையின் பெயர்கள், ’-’ குறியீட்டால் பிரிக்கப்பட்டிருந்தது; இது பார்ப்பவர் கண்களுக்கு, அவர்கள் இருவரும் தம்பதியர் என்னும் தோற்றத்தை வேறு ஏற்படுத்தியது.
            இதை மன்னித்துவிடலாம். அடுத்தக் கேடுகெட்ட கலாச்சாரம் ‘ரசிகர் மன்றங்கள்’ என்ற பெயரில் தொடங்கப்படும் குப்பைத்தொட்டிகள். உழைத்துப் பிழைக்கும் ஒருவன், ஊர்சுற்றித் திரிவதற்கும், ஏற்கனவே ஊர் சுற்றுபவன், அதைவிட வெட்டி வேலைகளில் ஈடுபடுவதற்கும் முக்கியக் காரணிகள் இந்த ரசிகர் மன்றங்கள்தாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியைப் பாராட்டி (படம் வெளியாகிய இரண்டாம் நாளிலேயே) ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றில், ‘எங்களின் விசிறியே’ என்று ரசிகர் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். விழுந்து, விழுந்து சிரித்த என்னைப்பார்த்து முறைத்தார் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர்; சிரிப்பை நிறுத்தினேன். பின்பு ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அச்செய்திக்கோர் உண்மையான அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது. நியாயமாகப் பார்த்தால், பத்துப்பைசாவுக்குக் கூடப் பிரயோஜனப்படாத அத்தகைய திரைப்படங்களில் நடிக்கும் ‘நட்சத்திரங்கள்’, 120 ரூபாய் (சில நேரங்களில் இத்தொகை 300, 400 என்று கூடிக்கொண்டே போகும். ஆனால் என்ன செய்ய? அவர்களின் திருமுகங்களை முதல் நாளிலேயே பார்க்க வேண்டுமே?) கொடுத்துப் படத்தைப் பார்த்துவிட்டு, அப்படம் கேவலமாக இருந்தாலும், “மச்சான்… செம்ம படம்ல. தலைவரு என்னா நடிப்பு?” என்று சொல்லிப் பீலா விடும் ரசிகப்பெருமக்களுக்கு விசிறிவிட வேண்டும் அல்லவா? (இக்கருத்தை மேற்சொன்ன சுவரொட்டிக்குக் காரணமான ஆசாமி காண்பாராயின், அவரது சொந்தக் கருத்தாகக் கூறிச் சமாளிப்பதற்கான முழு உரிமை அளிக்கப்படுகிறது)
            திருமதி. சுப்புலட்சுமி ரெட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்துக்கு வேறு ஒரு அரசியல் தலைவியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. ”ஒருவேளை இவருக்குச் சுப்புலட்சுமி ரெட்டி என்றொரு பெயர் இருக்குமோ? இல்லையேல் கூடுவிட்டுக்கூடு பாய்ந்திருப்பாரோ? அவரது ஆவி இவரது உடலில் புகுந்திருக்குமோ?” என்ற ரீதியில் எனது புத்தி தறிகெட்டு ஓடியது. இதன் உச்சக்கட்டமாக கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தேன்; ஆனால், அதற்குலள் பேருந்து அவ்விடத்தைத் தாண்டியிருந்தது. “ஒருவேளை என் பார்வைதான் சரியில்லையோ?” என்னும் ஐயம் எழுந்தது. குழப்பத்தில் தவித்த எனக்கு விரைவில் தெளிவு கிடைத்தது. அதே சுவரொட்டியை வேறிடத்தில் பார்த்தபோது, என் கண்ணில் பெரிய கோளாறு எதுவும் இல்லை என்னும் உறுதி கிடைத்தது. ஏனெனில் உண்மையாகவே அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு இவரது புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.
இப்போது மூளைக்கும், மனதிற்கும் சண்டை தொடங்கியது.
மூளை: அதுசரி, எல்லாம் தேசியக் கொடியின் வழியில்தான் சென்றுகொண்டிருக்கின்றது; மூவர்ணத்தில் முதலில் வரும் வண்ணத்தைப் பிரபலப்படுத்த தேசியக் கட்சி ஒன்றிருக்கிறது; மூன்றாவதாக இருக்கும் வர்ணத்தைப் பிரபலப்படுத்த மாநிலக்கட்சி ஒன்றிருக்கிறது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாகத்தானே வருகிறது?
மனம்: எப்படிக் கணக்குச் சரியாக வரும்? நடுவில் இருக்கும் நிறம் பற்றி எதுவும் கூறவில்லையே?
மூளை: அட, மிலேச்ச மனமே! அவ்வர்ணத்தில் இருக்கும் சுண்ணாம்பைத்தான் பொதுமக்களின் தலையில் தடவிவிட்டு, அவர்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார்களே மக்களின் தலைவர்கள்? இப்போது கணக்கு சரியாக வருகிறதா?
மனம்: ??!!
            இதற்கெல்லாம் உச்சக்கட்டமாகத் தேசியத் தலைவர் ஒருவர் சென்னை வந்தபோது, “எங்களின் ஜன் தன் யோஜனாவே”, “எங்களின் நிதி ஆயோகே” போன்ற வாழ்த்து விளம்பரங்களைக் காண நேர்ந்தது. தமிழில் பெருமக்களை வாழ்த்திப் புகழ்வதற்குக் கோடான கோடி வாக்கியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு அரசின் திட்டங்களைத் தனிமனிதர் ஒருவரைப் பாராட்டுவதற்கு உபயோகப்படுத்துவதைவிட ஒரு வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படி வாழ்த்துவதற்குப் பதிலாகப் பின்வரும் வாக்கியங்களைப் பிரயோகித்தால்கூட, நன்றாயிருக்கும் என்று தோன்றியது. அவை:
1)     எங்களின் கைவிரலே!
எங்களை அரைக்கும் உரலே!
2)     எங்கள் வீட்டுத் திண்ணையே!
பின்கட்டில் இருக்கும் கோழிப் பண்ணையே!
3)     இம்மண்ணின் உரமே!
மக்களை அணைத்துப் பின் அடிக்கும் கரமே!
4)     இந்தியாவின் ‘காவி’யமே!
சுவற்றில் தொங்கும் ஓவியமே!
5)     காவி ஜிப்பாவே!
நாட்டை முன்னேற்றும் அப்பாவே!
6)     பத்து ரூபாய்ப் பிளாஸ்டிக் டப்பாவே!
தெருவோரத்தில் விற்கும் கோல்கப்பாவே!

குறைந்தபட்சம் சந்த நயங்களாவது நிறைந்திருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு ‘செண்டிமண்டுல தார்மாரு’ என்று பாடப்பட்டவரைத் தொடர்புகொள்ளுமாறு, வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, July 31, 2015

LIFE


Lives are lost, tears are shed,
War makes people live in dread;
Yearning for a crumb of bread
The fear of living hangs by a thread.

Days may go, months may pass,
The sands of time always a crass,
Whatever, wherever… Life is a toss,
Heads or tails, the moment is our boss.

Bliss or sorrow, none to share,
‘Cause there’s no soul left to care;
Left with no one – alone and bare,
Speak to yourself, would you dare?

Greed does push for more and more – And
Hate and despair fill to the core;
Love and joy are shown the door – As
Lust for dosh comes to the fore.

Gossip fills in, humans pry,
Making the world dull and dry;
Come on, my friend, don’t you cry,
We will unite, let us try.

Wednesday, July 29, 2015

அப்துல் கலாமிற்கு அஞ்சலி!!!


கண்டதில்லை உன்னை நேரில் இதுவரை இறைவா…
உனது வடிவில் வந்தவரை அணைத்தது மறைவா?
நல்லவரைக் கொண்டுசெல்ல இத்துணை விரைவா?
புவியைத் துயரில் தள்ளினாயே இப்போது நிறைவா?

இளைஞராக வாழ்ந்தவர்தாம் அவரோ நேற்று – இன்று
அவர்தம் ஆன்மா கலந்து வீசுது வாடைக் காற்று;
அப்துல் கலாமின் உயிருக்கில்லை இன்னொரு மாற்று
அவரை எமக்குத் திருப்பிக்கொடுத்து நல்வினையாற்று

ஏவுகணைப் பொறியியலில் அவதாரம் எடுத்தார் – பின்பு
கனவு எனும் வார்த்தைக்கொரு அர்த்தம் கொடுத்தார்;
மாணவரின் எண்ணங்களை மாற்றியமைத்தார் – கண்களில்
அறிவியலையும் ஆசிரியத்தையும் சேர்த்தே இமைத்தார்

கூற்றுவனின் ஆற்றலின்முன் நாம் வெறும் ஏழை – அவன்
பின்னிருந்து தாக்கியழிக்கும் மற்றொரு கோழை;
உடலை பிரிந்து சென்றபின்பும் வாழ்பவன் மேதை – அந்த
உயிரைப் பிரித்து எடுத்துச்சென்ற இறைவனோ பேதை

அன்பு நிறைந்த கலாமின் உள்ளத்தில் இருந்தது மாட்சி – நெஞ்சை
உலுக்கிக் கரைத்து, உருக்கியது அக்கடைசி காட்சி;
அவர் பயணம் செய்து விட்டுச்சென்ற பாதையின் நீட்சி – அங்கு
தொடங்குகிறது இந்தியாவின் புதிதொரு மீட்சி!
                    ***********************
அழ மாட்டோம் – கண்ணீரில்
அவரேற்றிய அறிவுச் சுடர்
அணையக் கூடாது என்பதற்காக

உறங்காமல் இருக்கச் செய்வதே
கனவென்றார்;
மரணச்செய்தி கேட்டபின்
வரவில்லை உறக்கம்
இதுவும் கனவுதானோ?

Sunday, July 19, 2015

THE JOY OF SUDOKUING…..



         There is a uniqueness for each and every numeral right from 0 to 9; 0 is the epitome of co – operation and teamwork (musters nothing individually), 1 for standing out from the lot (neither prime nor composite), 2 for doing things different rather than working towards different things (it’s the only even prime number), 7 for the number of notes in music. And for 9, it’s the SuDoKu.
         Focussing my interest in Mathematics and number crunching was nothing but a myth for me until I came across this Game of Grids. My affair with SuDoKu just began as a pastime due to my bro’s interest but now, it’s a part of my day – to – day life. A day neither begins nor ends without this 9*9 miniature model of the Microsoft Excel flirting with me.
         Starting in my 9th grade, I didn’t know at that time that some variants of the game existed as I was well into the CLASSIC puzzles. Just when I started to imagine, “Arey whaahh… You’re a legend in this game”, college festivals started mocking by showing the exit door to me. I was nothing short of dejected to know that there existed other different types of Sudoku, which were alien to me – Hex, Diagonal, Odd and Even, Chaotic, Diabolical, etc.
         Okay kid… you’re still a toddler. Maybe, it’s better to step out of this world of numeral checkers”, said I to myself. But, that wasn’t to be. I was oblivious to the prick of a fate that one bus travel would move me back to this number game. An old man, sitting next to me, was reading one of Sundara Ramaswamy’s short stories, Vikaasam. Thoughts meandered, covering several mean free paths between them, and a light dawned upon me. I took out my Sony Xperia C and solved a HARD level puzzle with my personal best timing. But what was that that could change my mind so easily by noticing the title of a short story?
         Vikaasam is not just a story merely. It just shows how the true love and care of human beings towards one another cannot be replaced by a machine, however programmed it may be. There’s an old man called Rowther, an illiterate villager who is unaware of the nuances of Abacus, but calculates at such speeds that he becomes an inseparable part of the large textile shop, maintained by another man. There comes few misunderstandings and Rowther is dethroned from his job and enter the calculator – the costly, mind – boggling machine – that replaces him at the cash counter. The story proceeds through a chain of events post Rowther’s exit that reveals that the old man is but more than a solving machine. He remains a friend, caretaker, well – wisher, and also a calculator for his master and his family. The trick of using calculator as an analogy to stress that Rowther doesn’t only solve numbers, but also the number of problems of his master, forms the crux of this story.
         All these thoughts of the story that had been a part of my English non – detail (translated version) in my 9th grade whizzed from one side of my brain to another just like the Auro 3D sound system. And, that was the reason I solved my immediate attempt with relatively better concentration and determination. Now, I have bagged four prizes (trust me, the cash awards are a way to avoid imploring and whining for pocket money) and the list is about to continue.
         But, what matters here am not me but the game itself. It teaches the way of leading a life. Each rule is philosophical in its own way, enlightening me towards a moulded state.
1)   Only one number can fit in one cell
This seconds the saying, Jack of All but Master of None. There’ll be something which I would be worthy of doing. Focus towards only one aspect of life and we’re sure to be rewarded. This made me contemplate on my area of expertise, and though I may be a boring writer producing junk in my blog, I have managed to keep up the enthusiasm of continuously staying on the line. Writing is my key to the unexplored doors of the world.

2)   Focus on rows, columns and grids, all at the same time.
This made me realize that though there are our own, ‘within the circle’ commitments, we ought to maximize our horizon beyond this closed circle called the safe zone. Grid symbolizes our closed circle, while rows and columns are the exposures to lead us to glory.

3)   There may be two logical solutions for a puzzle.
Never be a stereotype is what this one taught me. There may be alternative aspects which, when done, would make us feel pessimistic and outdone. But then, that second solution may prove to be the pathway of true success.

         There are many other psychological and visible effects after Sudoku embraced me, or rather, I became part of this logical sport. Such is the intensity of the game that I am forced to type this piece of junk in the gap between two rounds of the Times of India SuDoKu contest. Life is full of problems like SuDoKu, but once we start solving them, we fall for them even without our knowledge and long for more and more of them to come.

Monday, June 29, 2015

CAN WE DO IT?

          After two months of eating and sleeping, today was the time to pack up things and get back to my second home. Bus travels are hectic in Monday mornings as all the office – goers and students tend to get back to their respective places after enjoying the weekend. Luckily, this has never been a problem for me as dad, who always accompanies me to the bus stand (courtesy the amount of luggage), is an expert in climbing up the bus at the right time to get me a window seat mostly.
          Since it was early morning, the bus was going at a good speed due to less traffic. Suddenly, the brakes screeched. Apparently, a cow or dog must have crossed the road; it might have been a cyclist or a pedestrian, too. But then, grumbles arose from the passengers. “You idiot, be responsible to your duty!” said one; “Son of a *****, can’t you drive carefully?” yelled another; “Have you gone mad? Why don’t you slow up a bit?” shouted a third fellow. Till now, it was okay.
          The next moment, everyone started discussing previous incidents which they’ve witnessed, heard, or imagined, that had resulted in a disastrous note, in a loud tone. The ultimate thing happened when a fellow passenger, on seeing me sitting quite, said: “Thambi! Enna amaidhiyaa ukkaandhurukinga? Unga pangukku naalu vaartha kaelunga…” (Brother! Why do you stay calm? Utter some swearing words towards the driver) He had told it very sharply as if I was to bid some amount in an auction but this made me wonder what has happened to us.
          This attitude reflected quite a few flaws in the basic nature of individuals. First of all, we’re not ready to stand against something on our own. We need the company of someone. Secondly, we force the same kind of behavior into the psychology of a stranger. As this chain goes on, there will be no one left with courage and dare.
          Now, getting back to the incident, even I have been a severe critic of the Government bus drivers (in particular) in the past, muttering words like, “Sena maadu! Katta vandi maadhiri oatraan?” (Lazy buffalo, driving like a bullock cart!!) These swear words were constantly coming out of my mouth in almost every bus journey, thanks to the slow driving due to the ‘great’ road conditions of Tamil Nadu. Not after I met one of my friends’ dad, a bus driver. Seeing him just once would reveal how much a driver suffers to complete each and every trip; his eyes would show up the tiredness due to extensive sleeplessness during nights; the rough palm of his hand would depict the hardships of holding the steering for a long time; his occasional momentary pauses at the college entrance to meet his son for a fraction of second would convey how much he had missed his family owing to his job.
          How many of us know that there are inadequate drivers for the innumerable number of buses available throughout the state? How many of us have ever thought of the extra trips a driver is burdened with in order to compensate for the lack of workforce? In addition, the supervising, administrative authorities are mostly appointed by the direction of the local politicians. These irresponsible people would willingly appoint the driver in a worst route; but in order to revert to an easy bus route, he would have to pay a huge sum to the authority, which would in turn be transferred to the coffers of that politician (What, according to you, is the source of money that is given during elections to lure us? Dosh earned through these kinds of illegal activities). There are instances of drivers superior in terms of age being humiliated and abused by their senior officials, who would be younger, with no appropriate reason.
          A bus driver is, in some way, Lord Paarthasaarathi Himself. After all, Krishna became driver for just one person (Arjuna). But, a bus driver is doing this Godly job for a comparatively less salary. He toils day and night, overcomes back spasms, controls his emotions at times of abuses, all these to earn his living. Moreover, the money he gets doesn’t justify the incredible work he does. Have we not experienced awful situations due to the strike organized statewide and nationwide in the recent times? Haven’t we been at the mercy of them? So, please never complain. If a driver speeds up, do understand that while it’s risky, the fault is not his. The system has to be blamed. And as it is, from education to cricket, and media to transport, politics has spread its evil roots everywhere.
          Even the Public Sector Employees and the Corporate Workers are being granted enough days as holidays per month/year. The same is not guaranteed for a driver. He has to work, he ought to work, he is forced to work. We’ve to be thankful actually; if it can’t be done, at least don’t scold them. There is a 19 – year – old (it’s me), who has already suffered from a strained spinal cord. There are people complaining of not able to sit comfortably for two hours continuously; there are bike riders, who feel inconvenient after driving some 25 kilometers at a stretch. Can we project us into the same situation as a bus driver? Perhaps, that is the only way to show the greatness of the multiple incarnations of Paarthasaarathi.

          Similar fate strikes scavengers, when they take leave for one or two days. After all, the 50 or 100 bucks we give for their picking up garbage from all houses in a region is not even worth 25% the service they do to make us exist in a clean environment, free of dust and pollution. The healthy physical state of us is not due to the eradication of 10 different kinds of diseases by the Hamam soap, but due to these poor workers, in front of whom the White Collar Job Holders are literally nothing. Please respect these noble workers by asking yourself, ‘Can we, or would we do their work?

Sunday, June 28, 2015

துப்பாக்கித் தோட்டா

     டமால் டுமீல்என்ற வெடிச் சத்தங்களுக்கிடையே  சிரமப்பட்டு மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் செய்தித்தாள் போடும் பையன்; தீபாவளித் திருநாளில் கங்காஸ்நானம் செய்து, விளக்கேற்றி, பட்டாசு வெடித்தாலும், பசியிருள் தீரவும், அறிவொளி பரவவும் பாலும், செய்தித்தாளும் வேண்டியிருக்கிறதே!

     மடிசார் மாமி வீட்டுவாசலில் கோலம் வரைந்துகொண்டிருந்தார்; பக்கத்து வீட்டு மாமா அன்றும் வாய்க்கு ஒளியேற்ற (புகைப்பிடிக்க என்று பொருள் கொள்க) லுங்கியுடன் சென்றார்; நகராட்சிக் குடிநீர் பிடிப்பதற்குத் தெருமுனையில் வழக்கம்போலவே கூட்டம். “என்னைத் தவிர கஷ்டப்படுறவங்க இவ்ளோ பேர் இருக்காங்களா? அந்நினைப்பு அவனுக்கு இதத்தைத் தந்தது.

     வாத்தியார் வீட்டுக்குச் சென்று பேப்பர் போடும்போது, ஏதேனும் பழைய துணி கிடைக்கும்; அதிர்ஷ்டமிருந்தால் ஐம்பதோ, நூறோ தருவார்கள். எண்ணங்கள் முட்டிமோதத் திடீரென்று இருவர் அவனை இடித்துத் தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள்; ஒருவனின் கையில் துப்பாக்கி வேறு இருந்தது. இவன் சுதாரிப்பதற்குள் தெருவைத் தாண்டியிருந்தனர்.

     ஓடுகிறவனைப் பிடித்தே ஆக வேண்டும் துரத்துபவனுக்கு; துப்பாக்கியால் சுட்டுவிடலாமா?என்று கூட யோசித்தான்; ஆனால் அவனுக்கு இடப்பட்ட கட்டளை அதுவன்று; சுடக்கூடாது என்று மட்டும் சொன்னவன், வேறெப்படிப் பிடிப்பது என்னும் உபாயத்தைக் கூறவேயில்லை. இவனுக்கும் தோன்றவில்லை கேட்க வேண்டும் என்று.

     நேரமாக ஆக வியர்வைத்துளிகள் முகத்தில் அரும்பி வழிந்தன; ஈரத்தால் சட்டை உடம்போடு ஒட்டியது. எனினும் ஓட்டத்தை நிறுத்தவேயில்லை இருவரும். தெருவெங்கும் வெடித்த, வெடிக்காத பட்டாசுகள் சிதறிக்கிடந்தன. எதிலேனும் கால்வைத்து வெடித்து விடப்போகிறது என்னும் பயம் இப்போது தோன்றவேயில்லை.

     குறுகிய சந்தில் ஓடிக்கொண்டிருந்தனர்; கொண்டாட்டம் என்பதே அறியாததைப் போல் அங்கு அனைவரும் ‘இது மற்றொரு நாள்என்னும் முகபாவத்துடன் வேலைசெய்து கொண்டிருந்தனர்; சோற்றுக்கே வழியில்லாதவர்களுக்கு கொண்டாட்டமேது, கும்மாளமேது? விரைவாக ஒடியதில் தெருவோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை இடறிவிட்டுத் தாவினான். “அப்டி இன்னாடா அவசரம் உங்களுக்கு? என் வூட்டுப் பாத்திரம்தான் கெடச்சுச்சா? சாவு கிராக்கிங்க, தீபாவளியும் அதுவுமாஎன்று திட்டினாள் பெண்ணொருத்தி.

     பதற்றத்தில் எந்தத் தெருவுக்குப் போகிறோம் என்றறியாமலேயே ஓடினர். திடிரென்று ஓரிடத்தில் அதிர்ந்துபோய் நின்றான் அதுவரை உயிரைக் கையில் பிடித்து ஓடிக்கொண்டிருந்தவன். ‘5000 வாலாபற்றவைத்துக் கொண்டிருந்தனர் தெருவையே மறித்தபடி. “இதைத் தாண்டிக் கண்டிப்பாக ஓட முடியாது; என்ன செய்யலாம்?என்று யோசிப்பதற்குள் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் பின்னவன்.

     மாட்டுனியா? என்ன பாக்குற? வா இன்ஸ்பெக்டர் கிட்டஎன்றபடி ‘ரோல் கேப்சுடும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான்.


     தனியார் பள்ளியில் படிக்கவைப்பதே பெரிய கஷ்டமாக இருந்த தினக்கூலிகளின் மகன்களான அவர்களிருவருக்கும் தீபாவளியே அந்தத் துப்பாக்கியும், திருடன் – போலீஸ் விளையாட்டும்தான். கான்ஸ்டபிளாக நடித்தவன், துப்பாக்கிமுனையில் கைதுசெய்த திருடனை உயரதிகாரியிடம் (மற்றொரு பையன்) கூட்டிச் சென்றான்.