Thursday, June 25, 2015

புலம்பல்

     நான் யாரு என்னன்றதெல்லாம் இப்ப முக்கியம் இல்ல. நான் பாட்டுக்கு இந்தப் போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துல சின்னதா ஒரு வீடு கட்டியிருந்தேன். நான்னா நான் மட்டும் இல்ல. எங்க ஆளுங்க எல்லாமே இந்தச் சுத்துவட்டாரத்துலதான் வாழ்ந்துட்டிருக்கோம். ஒரு நோட்டீஸ் கூடக் குடுக்கல, படுபாவிப் பசங்க; அவனுங்க பாட்டுக்கு வந்து இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டானுங்க. பெரிய புல்டோசரெல்லாம் தேவப்படல, சார். கை, கால் வெச்சு எத்துனா செதறிப் போற சாதாரண வீடு எங்களோடது. ஏதோ கட்டடத்த விரிவுபடுத்தப் போறாங்களாம்.

     எங்க பாட்டன், முப்பாட்டன் எல்லாரும் வாழ்ந்த எடம் சார் இது. நாங்க பாட்டுக்குக் கெடச்சதச் சாப்புட்டு, நிம்மதியா இருந்தோம். நிம்மதியான்னா, சோம்பேறியா இல்ல; இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் அவ்ளோ சுறுசுறுப்பானவங்க சார். ஏதாச்சும் வேல செஞ்சுக்கிட்டேதான் இருப்பாங்க. பத்து வயசுலயே கண்ணாடி போட்ற பசங்களப் பாக்கவே முடியாது; கைத்தடி ஊனிக்கிட்டுத் தள்ளாடற பெரியவங்களும் இங்க இல்ல. சாகுறவரையில தெம்பா இருந்துட்டுச் சாவுற நல்லவங்க சார் நாங்க. ஏதோ மலைவாழ் கிராமங்கள்ல எல்லாம் கூட இப்படித்தான் நடக்குதாமே. நமக்கு எங்க சார் இதெல்லாம் தெரியும்? அப்பப்ப டீக்கடையில பெருசுங்க பேசிக்குங்க. திக்குத்தெரியாத எங்கள மாதிரி அப்பாவிங்கள கட்டடம் கட்டணும், தொழிற்சாலை கட்டணும், அணு உலை கட்டணும்னு இப்டியே சொந்த எடத்த வுட்டுப் போக சொன்னா எங்க சார் போவறது?

     நேரடியாச் சொல்லியும் கேக்கலன்னா என்னா பண்ணுவாங்கனு எனக்கு ஒரு தெனாவட்டு இருந்துச்சு சார். அதுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கு. அதான் இப்ப விவசாயிங்களுக்கெல்லாம் ஏதோ நெலத்தோட மதிப்பவிட அதிகமா காசு தந்து, ஆசை காட்டியே புடுங்கிடுறாங்களாமே; அந்த எடத்த கார் தயாரிக்குறதுக்கு, மின்சாரம் உற்பத்தி பண்றதுக்குனு மாத்திடுறாங்களாம். ஏன் சார், நான் தெரியாமதான் கேக்குறேன்; திங்கிற சோத்துக்கு வழியில்லன்னா எதக்கொண்டு வயித்த நெரப்புறது? காரையும், செல்ஃபோனையும் அரைச்சு மாவாத் தின்றதுக்கு ஏதாச்சும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கணும் சார். பின்ன என்ன? நாட்டுல இது ரெண்டும்தான் பெருகிக் கெடக்கு.

     இந்த போலீஸ் ஸ்டேஷன்ல வேல செய்யுற போலீஸ்காரங்களவிட இங்க நிக்குற காருங்களோட எண்ணிக்கதான் அதிகமா இருக்கு. இதுகூடப் பரவாயில்லங்க; ஒருத்தன் ஒருத்தன் கையிலயும் கொறஞ்சபட்சம் ரெண்டு ஃபோனாச்சும் இருக்கு.

     என்னது, கம்பிளெயிண்ட் குடுக்கறதா? அங்கதானே சிக்கலே; இங்க இருக்குற எந்த வீட்டுக்கும் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு எதுவும் கெடையாது. இது என்ன மாடமாளிகை, கூடகோபுரமா சார், பதிவெல்லாம் பண்ணி வைக்க? பரம்பரை, பரம்பரையா இருக்குற இடம்; எங்க மண்ணுக்கு உரிமை கொண்டாடுறதுக்கு எதுக்கு சார் பத்திரம் எல்லாம்? இது எங்க எடம் மட்டும் இல்ல; எங்க சந்தோஷ துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்ட தெய்வீக்க்கோயில் சார். அதிகாரம் இருக்குங்கறதுக்காக ஏன் சார் எளியவங்களச் சித்திரவதை பண்றாங்க?

     நீங்களே யோசிச்சுப் பாருங்க. நீங்க வேலபாக்குற எடத்துல உங்கள இடமாற்றல் பண்றதாச் சொன்னாக்கூட கொஞ்சம் அவகாசம் கேக்குறீங்கல்ல? பையனுக்கு நல்ல ஸ்கூல் பாக்கணும், பாட்டிக்குக் கோயில் பக்கத்துலயே இருக்கணும்னு இவ்ளோ யோசிச்சுச் சரியா வராதுன்னு தோணுச்சுன்னா வேணாம்னு சொல்றீங்கல்ல? முடியாதவங்கள மட்டும் ஏன் சார் தொரத்துறாங்க? அவங்கள எதிர்க்க முடியாதுன்ற திமிரா?


     என்ன சார் கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்ல மாட்டேன்றீங்க? என்னது... தேங்க் யூவா? இங்க நான் பொலம்பிட்டிருக்கேன்... எனக்கு எதுக்கு சார் இதெல்லாம் சொல்லிக்கிட்டு? ஹ்ம்ம்ம்... என்னதிது? ஆங்... ஃபோனு. அடப்பாவி, அப்போ கம்பிளெயிண்ட் குடுன்னு சொன்னது, இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்தது எல்லாமே அந்தப் பாழாப்போன ஃபோன்லதானா? அதுசரி.. என் பேச்சக் கேக்க யாரு இருக்கா இந்த உலகத்துலஎன்று புலம்பியபடியே ஊர்ந்து சென்றது எறும்பு.

உணர்வெனும் சங்கிலி

            மாலையில் அலுவலக வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு ரயிலேறுவது வாடிக்கையாகவே மாறிவிட்டது அவளுக்கு. மணிரத்னத்துக்கடுத்தபடியாக ரயில் பயணங்களை ரசிப்பவள் அவள். உண்மையில், பணிமாற்றத்தால் பயணம் அவளுக்கு உற்ற தோழியாக மாறியிருந்தது. காலையில் கடைசி நேரப் பரபரப்பில் கிளம்பினாலும் ரயிலின் ‘தடக் தடக்இசையினூடே ‘தி இந்துபடிப்பது ஏகாந்த அனுபவமாயிருந்தது. சொந்த ஊரில் வேலைசெய்தபோதுகூட இல்லாத மன அமைதி, தண்டவாளங்களும், ரயிலும் சேர்ந்து பாடும் தாலாட்டில் கிட்டியது. மகனுக்கு நொறுக்குகள் வாங்குவதற்கென்று, புதிய இடத்திலும் கடையொன்றைக் கண்டுபிடித்துவிட்டாள்.

     அன்று ரயிலில் பெரிதாகக் கூட்டமில்லை. நெற்றியில் படிந்த வியர்வைத்துளிகளை ஒற்றியபடி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். மொத்தமே நான்கு பேர் மட்டுமே இருந்த அப்பெட்டியில் மற்ற மூவருமே வியாபாரிகள். ரயிலில் தினம்தினம் சுண்டல், போளி, பலாச்சுளைகள் விற்கும் அன்றாடங்காய்ச்சிகள். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து சோர்வு மிகுந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆண், முதுமையின் அடையாளங்கள் தெளிவாகத் தென்பட்ட ஒரு மூதாட்டி, 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் – மூன்று தலைமுறைகள் வறுமை என்னும் நேர்க்கோட்டில் சந்தித்திருந்தனர் அவர்களையறியாமலேயே.

     ஆனந்த விகடனைப் படித்துவிட்டதால் பொழுதுபோக்க வழி தெரியாமல் வந்தவள், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள். “இந்த ட்ரெயின்லதாம்மா தெனம் வியாபாரம் பண்ணுவேன். சுண்டல், கடலை, போளி இப்டி ஒரு ஒரு நாளைக்கு ஒண்ணொண்ணுஎன்றான் அந்த திடகாத்திரமான மனிதன். கூடையில் மீதமிருந்த சுண்டலைப் பற்றிக் கேட்டபோது, “அவ்ளோதாம்மா. இன்னிக்குக் குடுத்து வெச்சது அம்புட்டுதேன். காலைல எடுத்துட்டு வர்றது. சில நாள் ரெண்டு கிலோ கூட மிஞ்சிப்போயிடும். அதெல்லாம் மாட்டுக்குதான். சாயங்காலம் அஞ்சு மணி, ஆறு மணி தாண்டுனா சுண்டல் நமுத்துப்போயிடும். அப்புறம் விக்கமுடியாது.

     பரிதாப உணர்ச்சி மேலிட 5 ரூபாய்க்குச் சுண்டல் கேட்டாள். பெரிய பொட்டலமாகத் தந்தான். 20 ரூபாய் பெறும். “இப்போ ரெண்டு மாசமா லீவு வுட்ருந்தாங்கல்ல? சரியான சேல்ஸ். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூட சம்பாதிச்சுருக்கேன். ரயிலுக்குள்ள விக்கணும்னா 10 நாளைக்கு 1000 ரூபா கட்டி ரசீது வாங்கணும். ஆனா ஸ்குவாட் வந்தாங்கன்னா பிரச்சனையாயிரும். 250 ரூபா ஃபைன் போட்டுடுவாங்க. இப்ப இருக்குற ஒரு அதிகாரி நல்லவரு. அவங்க வந்தாக்க, முந்தினயே ஃபோன் பண்ணிடுவாரு; எறங்கிடுவோம்”, என்றவனிடம், “இவ்ளோ சிரமம் இருக்குல்ல, வேற ஏதாச்சும் தொழில் பாக்கலாம்ல? கடைல எதுவும் வேல செஞ்சாக்கூட நல்ல சம்பளம் கெடைக்குமே”, என்றாள்.

     வேற வேல எதுவும் தெரியாதும்மா. இது பழகிடுச்சு. கூட்டிக் கழிச்சுப் பாத்தாத் தண்டல் போக ஒரு நாளைக்கு எப்புடியும் 300 ரூபா நிக்கும்.அவனது தொழில்பக்தி, பணத்திற்காகவே வேலைசெய்யும் தனது நடுத்தர வர்க்க மனநிலையைச் சம்மட்டியால் அடித்தது போலவே உணர்ந்தாள். “அதுசரி! மத்தவங்க பண்றாங்கன்றதுக்காகப் பிள்ளைகள இஞ்சினியருக்குத்தான் படிக்க வைப்பேன், டாக்டருக்குத்தான் படிக்க வைப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்போது, பணம் கெடச்சாலும் மத்த வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்ற அவனோட பிடிவாதமும் நியாயம்தான்”, என்று உள்ளுணர்வு எகத்தாளம் செய்தது.

     பலாச்சொள சாப்படறியாம்மா? மீதமிருந்தவற்றை ஆளுக்கொன்றாகக் கொடுத்தாள் கிழவி. பல்லில்லாத வாயில் வைத்து அவள் மென்றுகொண்டே வந்தது சிரிப்பாகத்தான் இருந்தது. திடிரெனச் சத்தமாக இருமினாள்; புரையேறியிருக்கக்கூடும்.
“ஆயா? உங்கள யாரோ நெனைக்கறாங்க போல.
அட, இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

                                                            ***************

     இரவு புதிதாக அரைத்திருந்த மிளகாய்ப்பொடியுடன் தோசை சாப்பிடுவது அருமையாயிருந்தது. காரம் சற்று அதிகமாகவே இருந்தபடியால், இருமல் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்தது. தண்ணீர்க் குவளையை நீட்டிய மகன், “என்னம்மா, உன்ன யாரோ நெனைக்கறாங்க போல?என்றான். சட்டெனக் கிழவியின் நினைப்பு வந்தது அவளுக்கு. கூடவே அவளுடைய கேள்வியும்: “இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

     நினைப்பு என்பதும், மறத்தல் என்பதும் ஒருவரின் உடல்ரீதியான இருப்பு சம்பந்தப்பட்டது அல்ல; நினைப்பு என்பது ஒருவர் ஏற்படுத்திய உணர்வுகளின் நீட்சி; அந்த யாரோ ஒருவர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் சங்கிலித்தொடர்பு. பரஸ்பரம் இருக்கும் எண்ண ஓட்டங்களின் சங்கமம். இல்லையேல், அரைமணி நேரம் மட்டுமே உடனிருந்த அக்கிழவியின் நினைப்பு ஏன் அந்நேரத்தில் வரவேண்டும்?

Friday, June 12, 2015

THE BLIP CALLED KISS…

          It’s a rarity to see mom and dad going for a movie together. But now, when the whole world and beyond speaks about Kaakkaa Muttai and their own son has written a review after enjoying the movie thoroughly, the ultimate duty of parents is to go and watch in the theatre, right?
          Fate had its own plans. If a comedian could’ve created chaos within a serene family, it sure is to be Santhanam, for Inime Ippadithaan starring this legendary hero has hit the screens today. At 11:05 AM, five minutes after the scheduled showtime, my phone rang at home and I was surprised that the tone was Lukka Chuppi (assigned only for mom). Her voice suggested she was a bit dejected because the timings were split, courtesy the arrival of the new movie.
          Since The Crow’s Egg was scheduled for the matinee and evening shows, they had to return back, while I kept cursing Santhanam at home. Apparently, the timings had been mistakenly printed in the posters throughout the town and dad was misguided obviously.
          This gave me various thoughts. Inspite of Kaakkaa Muttai getting accolades and being received well in all centers, doesn’t it deserve a run in the box office for some more time? Aren’t the viewers ready to accept these kinds of non – commercial movies? Or, is it the greed of theater owners and distributors to play second fiddle to the stars in the limelight?
          Let’s get back to our main content now. It would all have ended well had mom and dad returned home straightaway. But, life sometimes requires a twist from the routine, eh?
          Dad has been suffering from back spasms recently and a day off from work was meant to relax and refresh. With the bike ride going in vain, dad was already tensed up (according to mom). In the meantime, mom had other ideas. She had to meet one of her colleagues, who had fractured her leg long time back (that the wound was almost healing). Mom, being extensively caring towards all, had come to a conclusion that the time can be compensated by visiting the lady, whose family has been known to us since my childhood.
          Dad didn’t seem to be interested to go there and he asked mom to be ready sometime soon while he went to attend to some other work. I am surprised by the way dad lost his common sense (!) at that moment because ladies normally don’t have the knack of cutting short a conversation (P. S.: The author is NOT a male chauvinist). When he came back, mom wasn’t ready and he had to wait for a long time.
          And, this created a sudden bitterness. When I opened the gates for them and smiled, the same wasn’t reciprocated. And then, when I asked in common, “You are going for the evening show, right?”, dad just bluntly replied, “I am not. Maybe, she will.” These are situations a 20 – year – old doesn’t know to deal with. I just kept blankly staring at them, standing at the alcove and then drifted off to my room to browse. But then, a flurry of emotions started running through my mind and I was unable to read online. Hence, the result.
          When I had to stay with some of my friends outside recently, I noticed a lady with a toddler, buying provisions for the day. Her ragged clothes and the way she was buying teeny quantities of the groceries showed she (or her husband) should be a coolie. Meanwhile, the child started crying over something. Apparently, its fingers that pointed towards a chips packet indicated what it wanted. The mom was clearly not in a financial condition of getting the child’s need fulfilled so she started cajoling the child. When even then the child didn’t stop its weep, the miracle happened suddenly. She kissed the child’s tender cheeks with soulful love and bingo, it stopped crying! That kiss was not the compromise for her inability to get the chips packet but rather an emotion – a language – that conveyed her state of mind to that infant.
          Kiss is not the image of lust, as shown in most of the Tamil cinema. Rather, it is an epitome of true love, affection, care and belongingness. Kiss is not that which happens just like that between a half – dressed heroine and a six – packed hero. Kiss is a symbol, a calm communication of deep meanings. It may be expressed by anyone, irrespective of age and gender. Kiss is not just the touching of lips of one into that of another; rather, it’s just a culmination of emotional wave that gets transferred in a moment. Kiss can be the silent romance between elderly couple, as shown in Pannayaarum Padhminiyum and O Kadhal Kanmani. Kiss is more than just a sound and a bit of saliva; it is eternal music.
          After these of events that happened today, I want to reiterate to mom and dad that by not going for the movie, nobody but they are the losers. The next movie like this may take decades or centuries to come out. But more than that, I just want to tell them, “Please kiss the other only once.” For, it may change pessimism to optimism, bring in harmony and smiles, make the world come together. It is a magician’s whip that can do unthinkable miracles.

          The post ends here and as usual, I am going to show this to my parents, who are always my first readers. I hope for a new dawn to arise…!

Wednesday, June 3, 2015

PUMP YOUR FISTS AND BE YOURSELF!!

          Was eating at a hotel recently at a far off place from my hometown. Mom and dad were giving constant instructions on how to eat and what not to order at the table because we were dining with a hi-fi family, relative to our friends. I have the habit of pouring the entire sambhar and chutney into the plate before starting. But that was not to happen on that particular day. I didn’t protest because that would’ve created a scene there. But, this raises a fundamental question. Why do we lose our originality in the name of social conduct and congeniality?
          I see my college mates saying, “Macha.. Chennai maadhiri varuma? Chancey illa… Enga oorum dhaan iruke??” I mean no offence but Chennai is a fucking developed city in terms of technology containing negligible quantity of humanity and helping tendency. If one starts telling Chennai is awesome, it becomes a disease. There may be posh five star hotels, luxurious malls and multiplexes in every street. But can you get at least ten successive homes with gardens at the backyard? Can you find someone who rents his cylinder for a neighbor at times of need though the giver may also have his own set of problems? (You know how many days it takes to book and get a cooking cylinder in the present scenario) Now, think of this deeply and answer. Is Chennai better than your hometown? So, always feel proud about your roots.
          Next thing is the movie scenario. I see people lamenting that Kollywood doesn’t get quality movies like English or Korea. My reply to this allegation in one word would be “ABSURD”. Firstly, we people have grown up seeing movies of our native languages right from birth. How does this sudden hatred come after getting into college or whatever? Watching 10 movies from Malayalam, Hindi and English and generalizing that they are better than Tamil cinema is insane. We get to watch only the filtered, good quality movies from the other languages because critics and media report on them continuously. Each and every language has movies without logic being released every now and then.
          I see, in my day – to – day surfing, people complaining nobody can come near Christopher Nolan or Steven Spielberg. It may or may not be true. But, we have our own tradition, a heritage that has been associated with us for ages. A movie is complete only when it touches upon the story of the location and people about which it speaks. For example, Aravaan depicted the life of Kalvaargal; Naan Kadavul illustrated the Aghoris. It all lies in our thought process. We’ve constantly been fed by our peers and mates that speaking highly of English movies would make us superior. I bet people who regard movies like Castaway and Schindler’s List and say that Hollywood is Heaven might not have watched Mahanadhi or Pithamagan  or Dhevarmagan. Be proud of our culture, our cinema. After all, whether you like it or not, we’ve been born in this land. At least, don’t degrade its pride.
          Coming to music, it is a universal language. Hearing heavy metal is not a sin but telling that you don’t hear Tamil music with a sarcastic smile is blasphemy. Many keep on mocking at the Carnatic music, making fun of the ghamakas and alapanas. To them, I ask a simple question. How did you start liking metal and rock? You started hearing, reheard the same genre several times until you really fell in love with it. So, let the same be the case with the classical also. Give priority to Aruna Sairam, Sanjay Subramaniam or at least Shankar Mahadevan  and Naresh Iyer before going towards Akon, Pitbull and Justin Bieber.
          If you feel like eating Thayir Vadai, don’t hesitate to do that even in a rich hotel. It’s your mouth, your digestive tract and your fucking choice. Never give a second thought to choose your first love. I may be writing in English, but my thought goes out for my native language. Whatever resume I fill, I always like to write Tamil first in the ‘Languages Known’ column.

          Be proud of your roots; let your body and mind get energized on the thought of being original and honest. And, do never fake your identity for anybody’ sake at any cost. For me, Thamizhan Endru Solladaa!! Thalai Nimirndhu Nilladaa!!

Monday, May 18, 2015

KP IS GONE???

(Disclaimer: This is just an imaginary spoof intended only for pun and fun. Don’t take it seriously. There is no political, social and national conflict of interest involved in this post)

          Kevin Pietersen, arguably one of the legends of English cricket, has been shown the way out by Andrew Strauss, the Director of the England Cricket Board, following which there have been elaborate talks on him playing for Sunrisers Hyderabad in IPL 2015. However, he hasn’t come to India owing to an injury. This is just a creativity of the various reactions in India had KP come here.

Narendra Modi: “This is the moment the whole of India can feel proud of. I have always been advising leaders all over the world to Make In India. Now that Kevin Pietersen’s career is evidently over in England, I would want him to Make His Career in India. Since the color of the SRH jersey almost resembles Saffron, he will perfectly fit in.”

Rahul Gandhi: “This is a welcome decision by Kevin Pietersen. After all, my mother, who has her roots in Italy, was ruling India indirectly through a puppet. If someone of foreign nationality can rise to rule India, there is no point arguing that an England player cannot represent India. I sincerely hope KP will wear Indian uniform soon.”

Director K. S. Ravikumar: “Don’t worry, Kevin! See my movies, Padayappa, Muthu and Lingaa. In all the three, the protagonist would be thrown away from his house after which he would transcend in life in no time. At last, the family would reunite with a positive ending. Take Thalaivar Rajnikanth as an example. If you want more inspiration, I am ready to direct a movie starring you. You can get the feel comfortably.”

T. Rajendar: “Dei, Kevin Pietersen-u,
                          Adichiye neraya run-u;
                          Adha paakalaye Strauss kannu,
                          Nalla vaanguniya bun-u!
                          Hey dandanakka; hey danakkunakka!!
                          Un career ippo done-u,
                           But venaam tension-u;
                          Life is full of fun-u,
                          Enjoy pannu my son-u!
                          Hey dandanakka; hey danakkunakka!!”

DMK Activists: “We strongly have a doubt that Kevin Pietersen may be a Dravidian by nature. First of all, his name ends with SUN, which is our party logo. Secondly, he is playing for Sunrisers, which is also owned by the Sun Network. All these create skepticism that he may be a Thamizhan. We are researching ancient Tamil literature to find out if there is any mention of the character Kevin, in any of the epics.”

Ravi Shastri: “Oh, there comes KP in a flight to Hyderabad like a Tracer Bullet!! This is really a stunning performance by him, probably one of the best strategies in the cricketing history!”
(P.S.: People who have heard his commentaries will understand this better)

Vijay TV Gopinath: The next episode in Neeyaa Naanaa would be on Kevin Pietersen. We would be discussing everything other than his exile from England cricket as it has become the tradition in most of our episodes. KP will be called in as the Chief Guest but he wouldn’t be allowed to express his opinions freely as I am the one who is going to speak most of the time. Tune in Vijay TV for latest updates on the date and time of the episode!

A Female Fan: Ooooo, I LOVE HIM SO MUCH!! I just want to spot him at least once. I’m glad that he has been turned down by the Australian Board (!!) [When mentioned that he is from England] Oh, is it? But still, I just wanna marry him!!
(The problem with some of the female fans (not all) is that they want to marry all handsome male cricketers, without even knowing from which team they are)

Kamalhassan: “I don’t say God isn’t there. But, the present condition of Kevin shows that God is not there, maybe. However, since his future with IPL is secure, I would say there is GOD. Finally, it all matters about Manidham (Humanity) and not Naathigam (Atheism) or Aathigam (Theism).”

A Normal CEGian: “What the fuck? KP is gone? How can that ever happen? Oh, how many good moments I had spent with my girlfriend with cold coffee and cheese sandwich! [When told KP is not the Knowledge Park in CEG campus but Kevin Pietersen of England, he scares me with his look] Who cares?”



{Note: I reiterate that this post has no connection with any political party. And, I am not a male chauvinist. The female fan part is included as a result of numerous girls (and ladies) showing boards, stating “
I want to marry you
”, followed by the name of some player}

Monday, May 11, 2015

WHEN FATE SMILES...

          He was standing at the edge of cliff. The whiff of cold air that blew chilled his bone marrow and straightened up his tiny hairs. The entire city was visible to him from there. “I want to capture this moment once and forever”, he said to himself. He hadn’t imagined he was that brave to take such a decision. Now, he stood there, with both his arms stretched out, breathing in heavily, cherishing the moments in his heart and soul. The hawks that flew made sounds that were too shrill.
          The city looked serene and beautiful in this view, totally concealing the pollution, industrialization, urbanization and many other –tions. The buildings seemed to be built like the staircases of a neatly carved out temple, with some skyscrapers tolling over other ordinary constructions. He was surprised to find umpteen mobile towers. “How the hell then is the network not fine at my place?”, thought he, as the day’s incidents flashed through his mind.
          The morning had started off in the most disastrous way possible. He had received a call from his office, stating he would be suspended indefinitely with immediate effect because a Facebook status, which he posted, ‘tarnished’ the image and reputation of the organization where he worked, according to the higher authorities. “Oh, gosh! Bloody people, even I love my firm. How can one FB post decide my future?” In desperation, he had just broken a beautiful frame gifted by his mom on his previous birthday.
          As if to multiply his sufferings, his girlfriend had called him. “I’m not interested in this anymore. What do you think you are? You either read, take photographs or blog. Or go to that shitty monotonous office. You are very grumpy seldom cheerful. You don’t even fascinate a girl. Go and have your nuptial with your blog posts.” And, he disconnected the line. When someone spoke shit about his blogs, he didn’t take it just like that. Writing, music and she were the triumvirs of his life. He couldn’t bear she had spoken those words. “Fuck off!” he yelled, and stood there transfixed. Suddenly, tears started flowing down his cheeks and he repeated, “What’s so wrong with me that don’t interest you, dear?
          Flurry of emotions raced through his body. He wanted a reservoir to share his feelings. Of course, moms are there. No matter if he was 22, she still fed him his favorite Stuffed Aloo Chapathi whenever he went home, she still called him ‘Child’; she still kissed and hugged him as if he was in his kindergarten. “The customer you are trying to reach is currently not reachable”, said the automated lady voice and he shouted, “Rot in the bogs, you bitch. Don’t you feel ashamed to speak to all the males around the world through phone?” And in an instant, there remained broken pieces of his mobile, one of his proudest possessions, with the components jutting out in an awkward fashion.
          In an impulse, he took the car key, dashed out of his rented apartment and drove away like a blitz. And now, standing on a steep slope that separated life and death, he wiped his tears and…..
          And, fixed his tripod there in order to take a photograph in the Hawk Eye View. Mom had said, “When you are at crossroads, call me. If I don’t pick up, do something that interests you.” Scared?? :P :P

Moral: When life presents you difficulties and hardships, Just Keep Calm and say, “Aahaan…”

Saturday, May 9, 2015

ஒரு மழைத்துளியின் பயணம்

Prelude: I am just happy to publish my first Tamil piece of my blog. This I wrote during my 11th standard rainy holidays. It is a fact that schools in Cuddalore get a separate vacation through torrential rains. Thanks mom for converting the paper - written article into the digital format.

இந்த வருட மழைக்காலத்தில் நான்கைந்து நாட்கள் மட்டுமே பள்ளி விடுமுறை விடப்பட்டபோதும் அந்த வருத்தமெல்லாம்(!) மழை பெய்யும் அழகான காட்சிகளை ரசிக்கும்போது பறந்து சென்றது. பலதரப்பட்ட மக்கள் மழையினால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்தும் எனது குழந்தை மனம் மேலும் மேலும் மழை வேண்டும் என்று இயற்கை அன்னையிடம் வேண்டி மன்றாடியது.
உண்மையிலேயே இயற்கையின் காட்சியமைப்பும், கொடையும் நினைந்து, வியந்து போற்றுதற்குரியது. சோவென்ற குரலுடன் பெய்யும் மழை; பின்னணி இசைக்கு இடி; ஒளியமைப்புக்கு மின்னல்; இவற்றுடன் நடனமிடும் மரங்களும், பறந்து அங்குமிங்கும் செல்லும் பறவைகளும்..... பார்க்கப் பார்க்க மனம் இவ்வுலக வாழ்வை விட்டு மெல்ல விலகிச் செல்வதை உணர முடிகிறது. சிறிது நேரம் மெய்ம்மறந்து பார்த்தால் ஓர் நடனக் காட்சியைக் கண்டு களித்த ஆனந்தம் மனதிலும் முகத்திலும் படர்கிறது.
பள்ளி விடுமுறையானாலும் படிப்பதற்கான பாடங்களுக்கொன்றும் குறைவில்லை. ஆனால், அமர்ந்து,கூர்ந்து படிப்பதற்கான எண்ணம் வரவேயில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே வந்தேன். தோட்டத்தில் அணில்களும், குருவிகளும் பல்வேறு வகையான ஓசைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு மூலையில் ஊற்று நீர் பிரவாகம் எடுத்துக்கொண்டிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து நின்று முரசறைந்து கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் மகிழ்ச்சியுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் பார்வை தற்செயலாக துணிகள் காய வைக்கும் கொடியின் பக்கம் சென்றது. அக்கொடியின் மேல் முத்து முத்தாக நீர்த்துளிகள் பூத்திருந்தன. விளம்பரங்களிலும், விழாக்களிலும் மேடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதைப் போல நீர்த்திவலைகள் அழகாகப் படர்ந்திருந்தன. அங்குமிங்குமாக அல்லாமல் அவை முறையாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கி வைக்கப்பட்டதைப் போல் தோற்றமளித்தன.
அதில் ஓர் நீர்த்துளி, கொடியின் விளிம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் கீழே தரையில் விழும் நிலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. மலைப்பள்ளத்தாக்கில் விழ வேண்டிய நிலையில் கடைசி முயற்சியாக மனிதன் மெல்லிய மரக்கிளை ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவதைப்போல அத்துளி யாருடைய உதவியையோ எதிர்பார்ப்பது போலத் தளரும் பிடியுடன் கொடியோடு ஒட்டிக்கொண்டிருந்தது. எண்ணெய்யில் பொரித்த பூரி சிறிது சிறிதாக உப்பிப் பெரிதாகத் தோற்றமளிப்பதைப் போல அந்த நீர்த்துளி கொடியின் கீழ் ஏற்பட்ட காற்றழுத்தத்தால் உப்பியது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தபோது வால்ட் விட்மன் இயற்றிய A Noiseless Patient Spider என்ற ஆங்கிலக் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. ஒரு மலைப் பள்ளத்தாக்கில் சிலந்தி ஒன்று வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வதற்காக இலக்கின்றி எல்லா இடங்களிலும் வலை பின்ன முயன்று கொண்டிருக்கும். அது போல மனித ஆன்மா தியானத்தில் இருக்கும்போது நற்சிந்தனைகள் எனும் வலையைப் பரப்பிக் கடவுளை அடைய முயற்சி செய்யும் என்று அழகாக விளக்கியிருப்பார். சிலந்தி, மனித மனம்  ஆகியவற்றைப் போலவே, அச்சிறிய மழைத்துளிக்கும் ஏதோ ஒரு தேடல் இருப்பதைப் போலவே நான் உணர்ந்தேன்.
அது கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக உயிர்ப் பயத்துடன் கொடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும், மறுபுறம் எப்படியேனும் மண்ணோடு மண்ணாகக் கலந்து இயற்கையுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற வேட்கையோடு எதிர்பார்ப்பதைப் போலவும் தோன்றியது. ஒரு குழப்பமான மன நிலையுடன் தீர்மானமாக முடிவுக்கு வர முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருந்த மழைத்துளியைப் பார்த்தபோது பரிதாபமகவும் இருந்த்து.
மற்ற எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அத்துளி கீழே விழுந்து விடக் கூடாது என்று தீடீரென வேண்டிக் கொள்ளத் தொடங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மர ஓலைகளிலிருந்து விழுந்த மழை நீரில் ஒரு துளி, கொடியைப் பற்றியிருந்த துளியைக் கீழே தள்ளி விட்டு,அவ்விடத்தில் வந்து சொகுசாக அமர்ந்து கொண்ட்து..
   ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ப்ரூட்டஸால் குத்தப்பட்ட சீஸர் அதிர்ச்சியில் உறைந்து நண்பன் துரோகியாக மாறியதை நினைத்துக் கொண்டே இறந்து விடுவது போல, தனது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட புதிய நீர்த்துளியின் செயலை எண்ணி, வெட்கி அந்நீர்த்துளி கீழே விழுந்து ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகப் புதைந்தது.
       நெருக்கமான நண்பரோ உறவினரோ விட்டுப் பிரிந்ததைப் போன்ற ஏக்கத்துடன் உள்ளே சென்றேன்.