Sunday, February 28, 2016

கவிதையின் வாயிலிலே...

அம்மா சுடும் தோசையின் வாசம் போல
வண்டிச் சத்தம் கேட்டு ஓடி வரும் பூனை போல
எளிதில் நா பழகும் தாய்மொழி போல
எங்கும் இருக்கும் நட்பைப் போல
எளிதில் வருவதில்லை எழுத்து…

சில பல எழுத்துக்கள் அங்குமிங்குமாய் ஓட
கிறுக்கல்களாய் கிழிந்த தாள்கள்
கலவையாய் விழுந்த வார்த்தைகள்
அர்த்தமற்றுப் போன வாக்கியங்கள்

பட்டாம்பூச்சி பிடிக்க எண்ணும் குழந்தை போல
படாடோப வாழ்க்கைக்கு ஏங்கும் மனிதன் போல
கோர்வையாய் கைகூடாத வார்த்தைகளுக்காக
ஏங்கியபடி நிற்கும்போதும்
இரக்கமின்றி நில்லாமல் செல்கிறது காலம்

கல்லாய் இருக்கும் சொற்கள்
சிறந்த சிற்பியைத் தேடி அலைகின்றன
கவிதையெனும் சிற்பமாய் மாற
ஆனால்
அற்பமாய் மாட்டின என்னிடம்

சிறுகச் சிறுகச் சேமித்த சொத்தாக
சிலந்தி வலையாக
எறும்புப் புற்றாக
என்னிடம் இருப்பவை வார்த்தைகள்தாம்
கவிதைகளல்ல

Saturday, February 27, 2016

எண்ண ஓட்டங்கள்

மௌனமே மொழியாய் மாற
சலனங்கள் சத்தமாய்ச் சிரிக்க
வாழ்க்கையே விட்டு விலக
நடைபிணமாய் நிற்கிறேன் நான்

கரையும் காலமும்
நிறையும் நினைவுகளும்
மறையும் மாந்தர்களும்
ஆழமான ஆசைகளும்
இவையும் இன்ன பிறவுமாய்
நகரும் நாட்கள்

நீடிக்காத நொடிகளுக்கிடையே ஓடும்
ஆயிரமாயிரம் கால்களுக்கிடையே
நசுங்கும் மனிதம்;
பொறுக்க மாட்டாமல் புழுங்குகின்ற
அத்துணை உயிர்களுக்கும்
தனிமையே உற்ற தோழன்

பேசும் பேச்சு உணர்வின் உச்சமாகிறது
எழுதும் எழுத்து எச்சமாய் நிற்கிறது
காலத்தின் கட்டளையால் இவையனைத்தும்
மறக்கப் படுமெனில்
அமைதியே ஆழப் படரும்;
சாந்தமே சரியெனப் படும்.

Thursday, January 14, 2016

DRIVING AWAY THE DARKNESS OF IGNORANCE…

This is the entry I sent in for the 300 word online writing contest titled, 'Social Journalist Contest', conducted as part of Saarang, the cultural festival of the IIT - Madras. It was a nice experience to be writing with constraints (word limit:300 words).I don't know if this article feels complete and all, but what is more important is that CEG has given me a deep perspective on the social issues and helping others. My sincere thanks to all the members of the Leo Club of CEG, without whom I would not have been a part of the club, and in turn, wouldn't have been able to write an entry for the contest. Please stuff in your comments and feedback.

Last but not the least, I secured third place in this contest and has been given an internhsip with 'The Logical Indian'. So, here is what I actually wrote:

DRIVING AWAY THE DARKNESS OF IGNORANCE…

         Would anyone believe that there exists an unknown kingdom of Narnia right behind College of Engineering Guindy (CEG), Anna University? This Narnia – SURYA NAGAR – is easily one of the most backward regions of Chennai, with people suffering a great deal for their day-to-day survival. The most luxurious house here is something which is slightly bigger than a hut. There are rarely students who study beyond school.

         Financial assistance to the downtrodden may be of temporary help but the long term solution would be to uplift the weaker sections of the society. So taking the words of one of the old women of Surya Nagar, “Students from various parts of the state come and study at Anna University. We, who live right behind the campus, aren’t able to send in one of our children into the institution” seriously, the students from the college are working towards improving the educational standards of the budding citizens at Surya Nagar. These students, who are members of the Leo Club of CEG, along with the help of Client Network Services India (CNSI), a private company, are striving hard for the cause of this forbidden kingdom by organizing tuition classes by trained teachers; they also visit the area on a rotational basis to train the students personally. And, they have partially achieved their goal, as Surya Nagar achieved for the first time the rare milestone – All those who appeared in the board examinations came out with flying colors during the academic year 2014 - 15.

         This is also the first instance that someone from Surya Nagar has scored over 90% in the Boards, as Ashwini, a Commerce student has scored 1143/1200. Cultural events are also organized to make the students come out of their shell and enjoy lighter moments with bliss.
Video link for the feedback from Surya Nagar people: https://www.youtube.com/watch?v=D-psPnmCekc&feature=youtu.be

Drive link for the photos: https://drive.google.com/folderview?id=0B9uKT86ox0GoNE5uazhicWp5RVk&usp=sharing

Tuesday, January 5, 2016

ஆண்களுக்கும் தேவை இட ஒதுக்கீடு…

            கமல்ஹாசன் நடிக்கும் ரீமேக் படங்கள் மாதிரி அடுத்தடுத்து வரும் 21-Gயையும், சிலம்பரசன் படங்களைப் போல எப்போதாவது வரும் 21-Lஐயும், ஷங்கர் படத்தைப் போன்ற பிரம்மாண்டமான குளிர்சாதன வசதி கொண்ட 19-Bஐயும் சந்திக்கும் காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் நின்று, சென்னை மாநகரப் பேருந்துகளில் தவ்விக் கொண்டும், தொற்றிக் கொண்டும் பயணிக்கும் ஒரு இளைஞனின் பயண அனுபவமே இது.

            பேருந்துகள்தாம் தமிழ்த் திரைப்படங்கள் போலென்றால், ஓட்டுநர்கள் அத்திரைப்படங்களின் இயக்குநர்கள் அல்லவா? ஒரு சிலர் ஹரி படங்களைப் போலச் சீறிப் பாய்வர்; மற்றவர் மணிரத்னம் படங்களைப் போலப் பொறுமையாகச் செலுத்துவர். ஆனால் இத்தகைய அனைத்து  வேறுபாடுகளுக்கிடையிலும் மாறாத ஒரே விஷயம், “தம்பி… லேடீஸ் நிக்குறோம்ல? கொஞ்சம் எந்திரிச்சு வழி விடுப்பா” என்று எங்களைப் போன்ற கல்லூரி மாணவர்களை, ஏதோ கொலை செய்துவிட்டதைப் போல் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் பெண்களின் குரல்தான்.

            போன பௌர்ணமியின்போது, “இந்த மாநிலத்தின் முதுகெலும்பே இளைஞர்கள்தாம். மழை நிவாரணத்துக்கு என்னம்மா வேல செய்றாங்க? பின்னிட்டம்மா, அட்றா அட்றா” என்று கலா மாஸ்டரையும், ஈரோடு மகேஷையும் இமிடேட் செய்து, எங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதே பெரியவர்கள், இன்று நாங்கள் கும்பலாகப் பேருந்தில் ஏறினால், “வந்துட்டானுங்க கூட்டம் கூடிக்கிட்டு. இவனுங்க அட்ராசிட்டி தாங்க முடியல சார். சனி, ஞாயிறு வந்துடக்கூடாது. கேங்கா எங்கேயாச்சும் ஊர் சுத்தக் கெளம்பிடுறாங்க” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். சரி, இது பெரியவர்கள் – ஆண்களும், பெண்களும் – பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு. இதுகூடப் பழகிவிட்டது என்று ஊதிவிட்டுப் போகலாம்.

அடையாறில் தொடங்கி, அயனாவரம் வரை செல்லும் 23-C போன்ற பேருந்துகளில் சாதாரண நாட்களிலேயே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் போலக் கூட்டம் திமுதிமுவென்று ஏறும். வார விடுமுறை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சத்யம் தியேட்டர் தொடங்கி, சாந்தி தியேட்டர் வரை செல்லும் அனைத்து கோஷ்டிகளும் இடித்துப் பிடித்து இடம் பிடிக்கும். அப்போதுகூட ஈவிரக்கமே இல்லாமல், “தம்பி.. கொஞ்சம் இடிக்காம நில்லேம்பா” என்று சொல்லும் திருமதிகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. எங்களுக்கு மட்டும் பேருந்துக்குள் அரசாங்கம் என்ன பட்டா போட்டு, நிலமா ஒதுக்கியுள்ளது? இதையே நாங்களும் திரும்பக் கேட்கலாமல்லவா, “மேடம்… வயசுப் பசங்கள கொஞ்சம் இடிக்காம நில்லுங்க” என்று.

ஆண் இருக்கை, பெண் இருக்கை என்று தனித்தனி வரிசை ஒதுக்கியாயிற்று. இவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், பெண்கள் இருக்கைகள் காலியாக இருந்தாலும்கூடஆண்கள் வரிசையிலேயே உட்காரும் தம்பதியரை என்ன சொல்வது? “மேடம்… கொஞ்சம் அந்தப் பக்கம் போய் உக்கார்றீங்களா? ஜென்ட்ஸ் சீட் காலியா இல்ல. ஆனா, உங்களுக்குத்தான் அந்தப் பக்கம் நெறைய சீட் காலியா இருக்கே?” என்று கேட்டால், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்தே சண்டைக்கு வருவார்கள். “எளவட்டம்தானே நீ? கொஞ்ச நேரம் நின்னுட்டு வாயேன்” என்று முடியும் அப்பிரசங்கம், கல்யாண வீட்டிற்குச் சென்று கருமாதி விசாரித்து அடி வாங்கிய நினைப்பைத் தரும். ‘யப்பா… நிக்கிறதுக்கு யங் பீஸென்ன, ஒல்டு பீஸென்ன? நின்னு, நின்னு என் லெக் பீஸ் போயிடும் போலிருக்கேய்யா…’ என்று வடிவேலு மாடுலேஷனை மைண்ட்வாய்ஸில் ஓடவிட்டபடியே பயணத்தைத் தொடர வேண்டியதுதான்.

இது எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக அமைவது கடைசி சீட் கலவரங்கள். கடைசி வரிசையில் மட்டும் பிரிவினைகள் நீங்கி, ஆறு இருக்கைகள் அடுத்தடுத்து அமைக்கப் பட்டிருக்கும். அதைச் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளக் கூட ஆண்களுக்கு அனுமதி கிடையாது. ஆண்களுக்கான மூன்று இருக்கைகள் ‘டெம்ப்ரவரி ஸ்டாஃப்’ போல; எப்போதும் நிச்சயம் அற்றது. கூட்டம் அதிகமாகி அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டால், நிற்கிற பெண்களுக்கு நாமாகவே எழுந்து வழி விட வேண்டும். நாம் பாட்டுக்கு கண்டுகொள்ளாமல் உட்கார்ந்திருந்தால், நேரடியாகக் கேட்க மாட்டார்கள். “பொம்பளைங்க இங்க நின்னுட்டிருக்கோமேன்னு கொஞ்சமாச்சு அறிவிருக்கா, இரக்கம் இருக்கா? பிரம்மகத்தி, கட்டையில போக” என்று அந்தக் காலத்துக் கெட்ட வார்த்தைகளை அகரவரிசைப்படிப் பட்டியலிட்டு, ‘பீப் சாங்’ எழுதிய சிம்புவுக்கே சவால் விடுப்பார்கள். எவ்வளவு சீக்கிரம் அவ்விடத்தை விட்டு எழுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது முன்னோர்கள் அவமானப்படுவது தடுக்கப்படும். இரண்டு, மூன்று நிமிடங்கள் சிலை போல உட்கார்ந்திருந்தால், குலம், கோத்ரம் என நமது குடும்ப வேரையே பிடுங்கிச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

சில அம்மையார்கள் வேற லெவலுக்குச் சென்று, நடத்துனரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, “ஹலோ… இது லேடீஸ் ரோ. நீங்கதான் வேற எங்கேயாச்சும் போய் உக்காரணும்” என்று தடாலடி செய்வதும் உண்டு.

பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் கூடப் பல நேரங்களில் பெண்களிடம் சீட்டைப் பற்றிக் கேட்கவே மாட்டார்கள். இது பெண்களின் மேல் உள்ள நம்பிக்கையா, அல்லது அவர்களது திருவாயில் வெளிப்படும் கெட்ட வார்த்தைகளைப் பற்றிய பயமா என்பது புரியாத புதிராகவே உள்ளது.


            ”இவ்ளோ கோவப்படுற ஆளு, பைக், கார்னு எடுத்துக்கிட்டுச் சுத்த வேண்டியதுதானே? ரொம்பத்தான் நொட்ட சொல்ற?” என்று கேட்பவர்களே! அதற்கெல்லாம் வசதி இருந்தால் எங்களைப் போன்ற கல்லூரி மாணவர்கள் அனைவரும் மழைக்குக் கூடப் பேருந்து நிறுத்தங்களில் ஒதுங்க மாட்டார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று சொன்ன திருமூலரைப் போல, ‘என் கடன் திட்டு வாங்கிப் பயணம் செய்வதே’ என்று சொல்லித் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஏனெனில், இதுவும் கடந்து போகும்!

Monday, January 4, 2016

மியூ’சிக்கல்’…

          வீட்டைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவன் ஒரு தொந்தரவு. ’சனியன்… கொழந்தைங்க தூங்குற நேரத்துல, தொண்டை கிழியக் கத்த ஆரம்பிச்சுடுவான்’ எனும் அவனைப் பற்றிய ஏச்சு அப்பகுதியில் மிகவும் சாதாரணம். ஆனால் பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்திருந்தவருக்கு அவன் கத்துவதாகத் தோன்றவில்லை. பால் காய்ச்சிய தினம்கூட அவனது பாட்டுச் சத்தம் கேட்டது.

            அவனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. 30 வயது கடந்த, வாழ்க்கையில் சோகங்களை அனுபவித்துத் தோற்று, தாடி வைத்த மனிதனாக அவனைக் கற்பனை செய்திருந்த அவருக்கு அவனைச் சந்தித்தபோது ஆச்சரியம்.

            20 வயதிருக்கும்; ‘படிக்கிற பையன்’ என்று சொல்லக்கூடிய தடிமனான மூக்குக்கண்ணாடி; சாந்தமான முகம். சிரித்தபடி வரவேற்றான். “உக்காருங்க சார். வீடெல்லாம் எப்படி இருக்கு? என் தொல்லையைத் தவிர உங்களுக்கு வேற பிரச்சினை எதுவும் இருக்கா?” என்றான் சிரித்துக்கொண்டே.

            சகஜமான உரையாடலாகச் சென்றுகொண்டிருந்தபோது, “தம்பிக்கு மியூசிக்ல ரொம்ப ஆர்வமோ?” என்று கேட்டார். “’ஏண்டா இப்படிக் கத்திக் கத்தி இருக்குறவங்க உயிர வாங்குற?’ அப்படிங்கிற கேள்வியோட பாலிஷ்ட் வெர்ஷன்தானே சார் இது?” என்ற அவனது அதிரடியான பேச்சு, அவரைச் சிரிக்க வைத்தது.

            ”ச்ச… அப்டி இல்ல தம்பி. வாய்ஸ் நல்லாயிருக்கு. இந்த ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி புரோகிராமுக்கு எல்லாம் ட்ரை பண்ணலாம்ல?” என்றார். “இன்னிக்கு இது ஒரு பொதுவான எண்ணமாயிடுச்சு, பாட்டுப் பாடத் தெரிஞ்சாலே ‘சூப்பர் சிங்கர்’க்கு அப்ளை பண்ணணும்ங்கிறது” என்று கூறிவிட்டுச் சமையலறைக்குச் சென்றவன் பட்சணங்களை எடுத்து வந்தான்.

            உரையாடலை எப்படித் தொடர்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவரிடம், “சார், மிக்ஸர் எடுத்துக்கோங்க. உங்க எண்ண ஓட்டம் எனக்குப் புரியுது. இதப் பத்தி நெறைய பேசலாம் சார். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல கேக்குறவங்களுக்குப் போர் அடிச்சிடும். நீங்க சலிச்சுக்க மாட்டீங்கனு சத்தியம் பண்ணுங்க. நம்ம பேசலாம்” – ரொம்ப அனுபவப்பட்டவன் போலப் பேசினான். சிரித்துக்கொண்டே தலையாட்டியவர், “ஐ ப்ராமிஸ்” என்றார்.

            ”உள்ள வாங்க சார்” என்றபடி அவரை அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவரது கண்ணில் முதலில் பட்டது, ஒரு தாங்கியின் மீது வைக்கப் பட்டிருந்த ‘கீபோர்டு’தான். “ஓ… கீபோர்டும் வாசிப்பீங்களா?” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே, “இசையும், இயற்கையும்தான் மனுஷனுக்கு முக்கியமான கல்வின்னு நம்புறவன் சார் நான்” என்றான். அப்பதில் 20 வயது இளைஞனின்  மூலம் வெளிப்பட்டதை அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

            ” மியூசிக் ஒரு சந்தோஷமான உணர்வு சார். அது வெறும் கலை இல்ல. ஒவ்வொரு மனுஷனோட சுக,துக்கங்கள்ல பங்குபெறும் தோழன். மியூசிக் கேட்டா அப்படியே உற்சாகம் கரைபுரண்டு ஓடணும்; ஒரு மெண்டல் ஸ்ட்ரென்த் கிடைக்கணும். இல்லன்னா, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணும்; மனசு இளகிக் கரைஞ்சு, கண்ல தண்ணி கொட்டணும். அதாவது ஒரு ஆழ்ந்த தியானம் மாதிரி. இந்த ரெண்டு வகையையும் புரிஞ்சுக்க சாஸ்திரிய கர்நாடக சங்கீதமோ, உலகத்துல இருக்குற பல இசை வகைகளையோ தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. சிம்பிளா சொல்லணும்னா ‘ஆலுமா டோலுமா’ பாட்டு நான் சொன்ன முதல் வகைக்கு ஒரு எக்ஸாம்பிள்; ‘பாம்பே’ படத்துல வர்ற ‘தீம் மியூசிக்’ ரெண்டாவது டைப். இது என் ஜெனரேஷனுக்கு சார். உங்க வயசுக்காரங்களுக்கு, ‘பாட்டுக் குயிலு மனசுக்குள்ள’ பாட்டு ஃபர்ஸ்ட்ட் டைப்பாவும், ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?’ செகண்ட் டைப்பாவும் வெச்சுக்கலாம்” – பேசிக்கொண்டே போன அவனது நுட்பம் அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

            ”கரெக்ட்டுதான் தம்பி. இருந்தாலும் திறமைன்னு ஒண்ணு இருக்குல்ல, அத வேஸ்ட் பண்ணக்கூடாது. எக்ஸிபிட் பண்றதுக்கு ‘சூப்பர் சிங்கர்’ மாதிரியான புரோகிராம் ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டிதானே?” என்று கேட்டார், ஐயம் நீங்காதவராய்.

            ”இத என்னோட போன பதிலுக்கான ஒரு கண்டினுவேஷன்னு சொல்லலாம். மொதல்ல எல்லாத்தையும் எக்ஸிபிட் பண்ணணும்ங்கிற நினைப்பே தப்பு. இசை, காதல் மாதிரி சார். ஒரு பொண்ணுகிட்ட போய்ச் சொன்னாத்தான் முடிவத் தெரிஞ்சுக்க முடியும். ஆனா அதுக்கு முன்னாடி, அவளைப் பார்த்த உடனே நம்மையறியாம ஒரு புன்னகை வரும். நம்ம வேலையப் பார்க்க விடாம ஒரு டிஸ்டர்பன்ஸ் இருந்துகிட்டே இருக்கும் இல்லையா? அந்த அனுபவம், அந்த பொண்ணுகிட்ட போய்க் காதலைச் சொன்னப்புறம் கிடைக்கவே கிடைக்காது – அவ ஒத்துக்கிட்டாக் கூட.

            மியூசிக்ல வெற்றி தோல்வியே இருக்க முடியாது சார். ஒரு ஆளுக்கு இசையோட உன்னதம் புரிஞ்சுடுச்சுன்னா, செமிஃபைனல்ல தோத்துட்டோமேன்னு அழ மாட்டான்; ஃபைனல்ல ஜெயிச்சதும் குதிக்க மாட்டான். எல்லா நேரங்கள்லயும் அவன ஒரு சந்தோஷத்துலயே வெச்சுருக்கிறதுதான் இசை. இது ஒரு வகையான போதைன்னு கூட சொல்லலாம்” என்றான்.

            ”ஏத்துக்குறேன் தம்பி. ஆனா, இது எல்லாத்தையும் மீறி…” என்று இழுத்தவரை நோக்கிச் சிரித்தான். “கீபோர்டு பக்கத்துல வாங்க”. சென்றார். “எனக்குப் பாட்டுப் பாடப் பிடிக்கும். அதுக்கு என் ஃபேமிலி பேக்க்ரவுண்ட் காரணம். ஆனா அதைத் தாண்டி நான் கீபோர்டு கத்துக்க ஆரம்பிச்சதுக்கு சயின்ஸ்தான் காரணம்” என்று கண் சிமிட்டினான். மிகுந்த ஆர்வத்துடன், “எப்படி?” என்றார். அவர் குரலில் இருந்த உறுதி, அவரது ஈடுபாட்டைக் காட்டியது.

            ”செவன்த்தோ, எய்த்தோ படிக்கும்போது ‘கெமிஸ்ட்ரி’ல ஒரு விதி வரும்; ‘நியூலேண்ட்ஸ் லா ஆஃப் ஆக்டேவ்ஸ்’னு பேரு. ‘எப்படி ஒரு ஸ்தாயில இருக்குற ‘ஸா’ ஸ்வரமும், அதுக்கப்புறம் ஏழு ஸ்வரங்கள் தாண்டி வர்ற அடுத்த ஸ்தாயிக்கான ‘ஸா’வும் ஒண்ணோ, அதே மாதிரி ‘பீரியாடிக் டேபிள்’ல ஒவ்வொரு எட்டாவது எலமண்ட்டும், முதல் எலமண்ட்ட ஒத்திருக்கும்’ அப்டிங்கறதுதான் இந்த விதி. நம்ம ‘ஸ்தாயி’னு சொல்றத, வெஸ்டர்ன் மியூசிக்ல ‘ஆக்டேவ்’னு சொல்வாங்க. நமக்கு ‘ஸரிகமபதநி’ ஒரு ஸ்தாயி; அவங்களுக்கு ‘CDEFGAB’ ஒரு ஆக்டேவ். இந்த C ஸ்கேல்தான் ஒரு கட்டை ஸ்ருதிக்கான அளவுகோல். நம்ம சங்கீதத்துல ‘ஷங்கராபரணம்’னு ஒரு ராகம் இருக்கு. அதைத்தான் அவங்க ‘மேஜர் ஸ்கேல்’னு சொல்றாங்க. ஒருவகையில கொஞ்சம் ஸ்பிரிச்சுவலா யோசிச்சா இது, ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒண்ணு’னு சொல்ற அத்வைதத்தோட எக்ஸ்டென்ஷன்.”

            அவரும் ஓரளவிற்கு இசையார்வம் கொண்டவர் என்பதால், கீபோர்டைச் சுட்டிக்காட்டி அவன் கூறியது அனைத்துமே ஓரளவிற்குப் புரிந்தது; ஆனால் ஆச்சரியம் அடங்கவேயில்லை.

            ”நம்பாளுங்க நெறைய பேருக்கு இன்னிக்கு வெஸ்டர்ன் மியூசிக் பிடிச்சிருக்கு; தப்பில்ல. எப்போ இந்த ‘பிடிச்சிருக்கு’ அப்டிங்கிறது, ‘இது தான் பெஸ்ட்’ அப்டினு மாறுதோ, அப்போ அது தப்பாயிடுது. நம்ம மியூசிக்ல இருக்குற நேட்டிவிட்டி வேற எதுலயும் கிடைக்காதுங்கிறது என் கருத்து” – தீர்க்கமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

            ”இப்போ நீங்க ரூம்குள்ள இருந்து பாடுறதுகூட, பக்கத்து வீட்டுக்குக் கேக்குது. இதுவும் எக்ஸிபிட் பண்றதுக்கான ஒரு வகைதானே? அதையே டி.வி.யில போய்ச் செய்ங்களேன்” என்று சொன்ன அவரது தொனியில், ‘பெரிய மேதாவி இவரு. 20 வயசுப் பையன், பெரிய புடுங்கி மாதிரி பேசுறான்’ எனும் கோபம் அடங்கியிருந்தது.

            ”பாத்தீங்களா, உங்களுக்குக் கோபம் வருது? இதைத்தான் நான் மொதல்லயே சொன்னேன். திஸ் வில் பீ மை லாஸ்ட் எக்ஸ்ப்ளனேஷன். யூ கேன் கெட் அவுட் ஆஃப்டர் தட். நோ அஃபென்ஸ் ப்ளீஸ், சார்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான்.

            ”மியூசிக் டீச்சர், வாய்ஸ் ட்ரெய்னர் இந்த ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நாம தெளிவாப் புரிஞ்சுக்கணும். இது ‘லேர்னிங்’, ‘ஸ்டடியிங்’ ரெண்டுக்கும் இருக்குற வித்தியாசம் மாதிரி. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், பாட்டு அடித்தொண்டையில இருந்து வரணும். இசையாசிரியர் ஃபண்டமெண்டலா சொல்லித் தர்ற விஷயம் இதுதான். இதுல வர்ற அவுட்புட் ரொம்பக் கவர்ச்சிகரமா இருக்காது; ஆனா, அதை மீறி வர்ற ஒரு ஒரிஜினாலிட்டி, பாட்டைக் காலம் கடந்து நிக்க வைக்கும். இந்த வாய்ஸ் ட்ரெய்னர்ஸ் எதுக்குத் தேவைப் படுவாங்கன்னா, நல்லாப் பாடிட்டிருக்குற ஒருத்தருக்குத் திடீர்னு தொண்டையில ஏதாச்சும் பிரச்சினை வந்தா, அவரை ‘ரீஹாபிலிட்டேட்’ பண்றதுக்குத்தான். ஆனா ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி இடத்துல என்ன நடக்கும்னா, சில பேர ஃபோர்ஸ் பண்ணி ஹை-பிச்ல பாட வெப்பாங்க. இது நம்ம குரலோட பேஸிக் டெக்ஸ்சர் கூட மேட்ச் ஆகாது. அதனால வேற வழியில்லாம சில பார்ட்டிஸிப்பன்ட்ஸ், மேல்தொண்டையில இருந்து பாட ஆரம்பிப்பாங்க. இதுல ஒரு செயற்கைத்தனம் தெரியும், கேக்க இனிமையா இருந்தாக்கூட. கொடுமை என்னன்னா ‘ஜட்ஜஸ்’ங்குற பேர்ல இங்கிலிஷும் தமிழும் கலந்து பேசுற சில பாடகர்களும் இதை அங்கீகரிக்குறாங்க. நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க. எல்லாம் மார்க்கெட்டிங், டி.ஆர்.பி.தான்” என்றான்.

            மேலும் தொடர்ந்தவன், “ அதுக்காக  அதுல பாடற எல்லாரையும் நான் குறை சொல்லல. திறமையானவங்களும் இருக்காங்க. ஆனா, அதுல பாடறவங்க மட்டும்தான் திறமைசாலிங்கன்ற அளவுகோல் ரொம்பத் தப்பு. இப்போ விஜய் பிரகாஷ் மாதிரியான ஒரு சிங்கர், ஷங்கர் மஹாதேவன் மாதிரி உச்ச ஸ்தாயில பாட முடியாது; ஷக்திஸ்ரீ கோபாலனால, நித்யஸ்ரீ மஹாதேவன் மாதிரி பாட முடியாது. இதை மாத்தியும் சொல்லலாம். மொத்தத்துல இசை ஆத்ம திருப்திக்கான ஒரு மீடியம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மாதிரியான ஒரு ஆள், ‘இசை ஞானி’களை விட அமைதியா இருக்குறதை வேற எப்படிப் புரிஞ்சுக்க முடியும்? இசை ஒரு ஞானம்; அதை புரிஞ்சவங்க எல்லாரும் ஞானிகள்தான். இதுக்குப் பட்டமெல்லாம் தேவையில்ல சார்.”

            அவன் பேசி முடித்தபோது, “சாரி தம்பி… ஏதாச்சும் தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க. வீட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும்” என்றார். “சாரி நான் சொல்லணும் சார். அந்த நேரத்துல கோபம் வந்துடுச்சு. கட்டுப்படுத்திப் பழகிட்டிருக்கேன். மியூசிக் இஸ் கைடிங் மீ. தேங்க்ஸ் ஃபார் கமிங் டு மை ப்ளேஸ் அண்ட் ஸ்பெண்டிங் யுவர் வேல்யுபிள் டைம். ஐ ஆம் க்ரேட்ஃபுல் பியாண்ட் வேர்ட்ஸ்” என்று சொல்லிக்கொண்டே அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தான்.


            ”வாழ்க்கை ஒரு சிக்கல் சார். வீ ஜஸ்ட் ஹாவ் டு மேக் இட் மியூசிக்கல்” – சொல்லிவிட்டுச் சிரித்தான். அவர் வீட்டுக்கு வந்தபோது மகன் ‘சூப்பர் சிங்கர்’ பார்த்துக்கொண்டிருந்தான். அரையிறுதியில் தோற்றதற்காக ஒரு பெண்ணும், அவரது பெற்றோரும் தொலைக்காட்சியில் ‘பொலபொல’வென அழுது கொண்டிருந்தார்கள். “பாவம்ப்பா அந்தப் பொண்ணு” என்று சொன்ன தன் மகனுக்கு என்ன பதில் கூறுவதென்று அவருக்குத் தெரியவில்லை.

Friday, November 27, 2015

பி.கே.வின் தமிழ்நாடு...

   துவங்குவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பி.கே என்பது இப்பதிவு முழுக்க அக்கதாபாத்திரத்தை மட்டுமே குறிப்பிடுகின்றது; எக்காரணம் கொண்டும் சகிப்புத்தன்மையையோ, அந்நடிகரையோ அல்ல. மேலும் எந்த அரசியல் கட்சியையும், குறிப்பிட்ட நபர்களையும் தாக்குவதற்காக எழுதப்படுவதுமல்ல. மழைநீர் எல்லா பக்கங்களிலும் சூழ்ந்த ஊரில் வாழும் ஒரு வெட்டிப் பயலின் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இது தட்டச்சு செய்யப்படுகிறது.

     ராஜ்குமார் ஹிரானி, பி.கே என்னும் வேற்றுலகவாசி, வட இந்தியாவில் சந்திக்கும் நிகழ்வுகளை மட்டுமே தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தார். அதன் பிறகு பி.கே தமிழகத்துக்கும் வந்தார்/வந்தது/வந்தான் (வந்திருந்தால் என்று வைத்துக் கொள்ளுங்களேன்).

     பி.கே தமிழ்நாட்டில் நுழைந்தவுடன் அவனை ஆச்சரியப்படுத்திய விஷயம் எங்கும் பரந்துவிரிந்திருந்த பசுமைதான்; ‘அக்கரைக்கும் இக்கரைக்கும் பச்சைஎன்னும் பழமொழிக்கு ஏற்றவாறு மாநிலத்தில் இருந்த அனைத்து மரங்களின் வேர், கிளைகள், காய்கள் என அனைத்துமே ‘பச்சை வண்ணத்திலேயே காட்சியளித்தன. அங்கிருந்த மனிதர்கள்கூடப் ‘பச்சைப் பச்சையாகத்தான் பேசினார்கள். தாய் நடந்துவரும்போது கைகட்டி, வாய்பொத்தி நிற்க வேண்டும்; முடிந்தால் காலில் விழவேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் மக்களைக் கண்டு வியந்தான் அவன்.

     அந்தந்த மொழிகளைக் கற்பது அவனுக்கு இலகுவான காரியமாதலால், ஆங்காங்கே மக்கள் பேசியதை வைத்தே தமிழைக் கற்றிருந்தான். சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒருவர் மேடையில் தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்தார், “தமிழமே எனது மதம்; வள்ளுவனே எம் கடவுள்; குறளே எம் மறை”. இப்பொழுது பி.கேவிற்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘தமிழ் வேறு, தமிழம் வேறா? இல்லையே! தமிழம் என்ற வார்த்தையே எனது நினைவுப் பெட்டகத்தில் இல்லையே! ஒருவேளை தமிழ் என்பது மொழியே இல்லை போலும்; தமிழம் என்னும் மதத்தின் கருத்துகளின் மூலம்தான் தமிழெனும் மொழியேகூடத் தோன்றியிருக்கலாமல்லவா?என்று எண்ண ஓட்டங்கள் அலையடித்தன. அப்போது அவனைக் கடந்து சென்ற ஒருவர், ‘ஏண்டா இப்படி உங்க அரசியல் லாபத்துக்காக ஒரு பழமையான மொழியை மதம் என்னும் குறுகிய கண்ணோட்டத்துக்குள் கொண்டுவர்றீங்கஎன்று புலம்பியபடியே சென்றார். இப்போது பி.கேவுக்கு ஒரு ஞானோதயம் பிறந்த்து. “இருப்பதைத் திரித்துக் கூறி கூட்டத்தைக் கூட்டி, மனிதர்களின் உணர்வுகளைக் கோபப்படுத்தி, மனதை மாற்றுவதுதான் அரசியல்”.

     இதற்குப் பின்பும் பலவாறாகக் குழம்பியிருந்த பி.கே, “என் பெட்டகத்திலுள்ள தமிழானது சரியானதா? அல்லது ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டதா?எனும் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காகப் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்தான். எல்லா வகுப்பறைகளிலும் தேடினான் எங்கேனும் தமிழோசை கேட்கின்றதா என்று. ஒரு வகுப்பறையில் கூட தமிழ்ப்பாடம் நடத்தப்படாததால் சலிப்புடன் பள்ளியை விட்டு வெளியேறலாம் என்று நினைத்தபோதுதான் அக்குரல் அவனது செவிகளில் விழுந்தது. “ஸ்டூடண்ட்ஸ்... ஃபிஸிக்ஸ் போர்ஷன் நெறய இருக்கறதுனால இனிமே தமிழ் பீரியட் எல்லாத்தயும் நானே எடுத்துக்கறதா உங்க தமிழ் மேடம் கிட்ட சொல்லிட்டேன்என்று ஒரு ஆசிரியை கூறிக்கொண்டிருந்தார். என்ன இங்குள்ளவர்களே இவர்களது மொழியைப் படிக்க ஆர்வம் காட்டவில்லையே!எனும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பள்ளியை விட்டு வெளியே வந்தான்.

     தமிழ் ஓசைகள் ஓரளவிற்குப் புரிந்தபடியால், திரையரங்கு ஒன்றினுள் புகுந்தான் பி.கே. உள்ளே சென்று பார்த்தால், திரையில் சில பெண்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது வாயசைவிற்கும், ஒலிப்பானில் ஒலித்த வார்த்தைகளுக்கும் தொடர்பே இல்லையென்று தோன்றியது அவனுக்கு. உடனே எழுந்து வந்துவிட்டான். பாவம் அவனுக்குத் தெரியவில்லை இங்கிருக்கும் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ‘டப்பிங்என்ற ஒரு விஷயம் இருக்கிறதென்றும்.


     தான் தெரிந்துகொண்ட தமிழ்மொழி இதுதானா?என்னும் சந்தேகம் அதிகமாகிக்கொண்டே போனது அவனுக்கு. ஒரு வீட்டைக் கடந்து சென்றபோது, தந்தை தன் கையில் ஏதோ ஒரு அட்டையை வைத்துக்கொண்டு தன் மகனுடன் பேசுவது தெரிந்தது. “மேத்ஸ்ல 200, கெமிஸ்ட்ரில 199, ஃபிஸிக்ஸ்ல 197... சூப்பர்டா கண்ணா! தமிழ்ல மட்டும் 174 மார்க்தான், ஆனா பரவாயில்ல. லேங்குவேஜ்தானே? போயிட்டுப் போகுது.இப்போது பி.கேவிற்குத் தலை சுற்றுவது போலிருந்தது. “இனிமே தாங்க முடியாது... என்னைச் சீக்கிரம் கூட்டிட்டுப் போயிடுங்கப்பா!என்று தனது மொழியில் தன் கிரகத்திற்குத் தகவலனுப்பிவிட்டு மயங்கி விழுந்தான்.

Saturday, November 21, 2015

THE NIGHT WITH A FIGHT

          He was one of the countless souls whose adrenaline would rush at the sight of their beloved ones – mostly movie stars, and rarely a cricketer – being incessantly trolled in all the social media. And on that particular day, he had got really pumped up back at his class while he was scrolling through the News Feed in Facebook, the penultimate bencher he was, thereby gaining the advantage of doing all sorts of “non-class activities”, according to the Professor.

          There was one meme which compared the hairstyle of his favorite hero to something which could not be mentioned at all; perhaps, he would have left it as such had there been a metaphor of vanilla or limestone or whatever, but this was intolerable. In a fit of rage, he just retaliated by posting in the comments section a photo of the compatriot from another recent movie, where there is an interesting encounter between a so-called “tiger” and a “human tiger”. Since the data pack was draining out, he just switched mobile data off and tried to accomplish the nearly impossible task of listening to the theory class, where the PPTs slid one after the other like an old man’s diary which would lament sympathetically about his personal sufferings.

          While returning to hostel, a sharp tinge of emotion hit him hard as he felt bad for his silly act. He knew both of these stars weren’t worth it; there were others who deserved more, say the guy who would reduce his weight to about 80 pounds just for a movie and build up his physique like a beast for a trivial role. Or the man who would gladly accept to do a supporting cast if he thinks it would create a great impact. But the thought of “once a fan, always a fan” loomed over and he had to justify his act somehow, at least for personal consolation.

          As he walked through the corridor, he could sense ireful eyes staring at him, those fiery looks penetrating and piercing his feeble heart like the sharpest end of a needle, magnifying his fear to umpteen times. “Oh God, this is not going to be good”. He was a newbie to hostel only that semester, but had already heard stories of how some of the guys got beaten up brutally for messing up with “The Bang Bang Gang”. Now, this gang comprised of fans of the actor, whom he had trolled in the comment. Despite some of the gang members being his classmates, he was sure that was not going to stop them from blasting him up. Come whatever, he was not ready to admit submission, at least in his looks; so, he maintained a rigid stance and strolled off to his room.

          Thoughts of an escape from this thrashing filled him up, and he had almost forgotten to get ready for a treat before one of his other friends reminded about that. “Chill out and calm down, bro. You haven’t done anything wrong. Don’t freak the hell out of you”, he spoke to himself when he came back at around 9:45 in the night, after the treat. Usually, this beating and abusing sessions would normally begin after 10:30 when the watchman would have already dozed off. The Butter Naan and Paneer Butter Masala were doing their parts sincerely, trying hard to sleep him away but he wouldn’t budge. There he was, hearing ARR with full volume in the headsets, thereby attempting to bring in that dormant dare within him.


          There was no knowledge of when he had slept, but on hearing chaotic noise around him, he tried to wake up, but he could already feel his body being carried by a mob to some place upstairs. Four people were carrying him, two by his legs and two others by his hands. It was pretty clear he would bleed in a matter of minutes; he was only hoping for some mercy, being that lean, lanky figure, who would easily be misinterpreted for a boy born in some land with famine prevailing for several decades. They just dropped him on to the floor and he could see they were taking out a knife from a cover. One of them hid it behind his back and they started kicking him crazily. And suddenly out of nowhere, a fifth guy, who was his close friend, brought out a box. Together, they yelled, “Happy Birthday, you Dumbass!” and started beating and slapping him. Amidst all those Facebook issues, he had totally forgotten that it was his birthday. The time was 12:05 AM. The knife was then handed over and he cut the cake, receiving at least a hundred slaps in his back during the process. All is well that ends well.